بسم الله الرحمن الرحيم
Sunday 16th June 2019 | 12 ஷவ்வால் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

 • Google Bookmarks
 • Twitter
 • Windows Live
 • Facebook
 • MySpace
 • deli.cio.us
 • Digg
 • Newsvine
 • reddit
 • StumbleUpon
 • Yahoo! Bookmarks
 • Yigg
நாவலர் எல்.எஸ்.இப்றாஹீம் ஹாஜியாருக்கு ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருது! எல்.கே.மேனிலைப் பள்ளி பயின்றோர் பேரவை கூட்டத்தில் அறிவிப்பு!!அச்சிடுகமின்-அஞ்சல்
06 செப்டம்பர் 2017 காலை 09:09

தன் வாழ்வின் நீண்ட வருடங்களை, காயல்பட்டினம் நகர மக்களின் கல்வி முன்னேற்றத்திற்காகக் கழித்து வரும் – குறுக்கத் தெருவைச் சேர்ந்த நாவலர் அல்ஹாஜ் எல்.எஸ்.இப்றாஹீமுக்கு “வாழ்நாள் சாதனையாளர்” விருது வழங்குவதென, எல்.கே.மேனிலைப் பள்ளி பயின்றோர் பேரவை கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. விரிவான விபரம்:- 

நிகழாண்டு ஹஜ் பெருநாளை முன்னிட்டு, காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப் பள்ளியின் பயின்றோர் பேரவை சிறப்புக் கூட்டம், 03.09.2017. ஞாயிற்றுக்கிழமையன்று 19.00 மணிக்கு, பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. 

எஸ்.கே.ஸாலிஹ் கிராஅத் ஓதி துவக்கி வைத்ததோடு, நிகழ்ச்சிகளையும் நெறிப்படுத்தினார். தலைமை தாங்கிய பேரவை தலைவர் டீ.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். 

செயலாளரும் – எல்.கே.மேனிலைப் பள்ளியின் முன்னாள் ஆசிரியருமான எம்.ஏ.புகாரீ கூட்ட அறிமுகவுரையாற்றினார். 

பொருளாளர் எம்.ஏ.காழி அலாவுத்தீன் – பேரவையின் இதுநாள் வரையிலான வரவு – செலவு கணக்கறிக்கையை சமர்ப்பித்தார். 

பள்ளியில் பயிலும் ஏழை மாணவர்களுக்குத் தேவையான சீருடைகள் கட்டணமின்றி வழங்கப்பட்டுள்ளதை அவர் நினைவுகூர்ந்தபோது, அனைவரும் அதை ஆதரித்து கரவொலி எழுப்பினர். 

பின்னர், பங்கேற்றோர் கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது. பள்ளி நலனுக்காகவும், பயின்றோர் பேரவை செயல்பாடுகளில் இன்னும் முன்னேற்றம் காண்பதற்காகவும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. 

ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஏ.என்.அஹ்மத் மீராத்தம்பி நன்றி கூற, துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது. 

கூட்டத்தில் பின்வருமாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:- 

தீர்மானம் 1 – உறுப்பினர்களை முழுமையாக இணைத்தல்: 

எல்.கே.மேனிலைப் பள்ளி பயின்றோர் பேரவையில் – பள்ளியின் முன்னாள் மாணவர்கள் அனைவரையும் – ஒருவர் கூட விடுபடாமல் உறுப்பினராக்குவதற்குத் தேவையான செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்திட இக்கூட்டம் தீர்மானிக்கிறது. 

தீர்மானம் 2 – சிறப்பு செயலி (Application) உருவாக்கல்: 

முன்னாள் மாணவர்கள் தாமாகவே பயின்றோர் பேரவையில் இணையவும், அதன் நடவடிக்கைகளை அவ்வப்போது அறிந்துகொள்ளவும், ஆண்டுச் சந்தாவான 100 ரூபாயை எளிதில் செலுத்தவும் வசதியாக, பயின்றோர் பேரவைக்கு கைபேசி செயலி (Mobile Phone Application) ஒன்றை விரைவில் உருவாக்கிட இக்கூட்டம் தீர்மானிக்கிறது. 

தீர்மானம் 3 – நாவலர் எல்.எஸ்.இப்றாஹீம் ஹாஜியாருக்கு விருது: 

தன் வாழ்நாளில் பெரும்பகுதியை – நகர மக்களின் கல்வி முன்னேற்றத்திற்காகவே செலவிட்டவரும், எல்.கே.துவக்கப் பள்ளிகள், காயல்பட்டினம் – ஆறுமுகநேரி (KA) மேனிலைப் பள்ளி ஆகியவற்றின் முன்னாள் தாளாளருமான நாவலர் அல்ஹாஜ் எல்.எஸ்.இப்றாஹீமுக்கு, “வாழ்நாள் சாதனையாளர்” விருதை பயின்றோர் பேரவையின் சார்பில் வழங்கிட இக்கூட்டம் தீர்மானிக்கிறது. 

தீர்மானம் 4 – அடுத்த கூட்டம்: 

பயின்றோர் பேரவையின் கூட்டங்களை, இரண்டு பெருநாட்களுக்கு அடுத்தடுத்த நாட்கள், டிசம்பர் மாதம், மே மாதம் என ஆண்டுக்கு நான்கு முறை நடத்தும் முந்தைய தீர்மானத்தின் அடிப்படையில் அடுத்த கூட்டத்தை வரும் டிசம்பர் மாதத்தில் – அனைவரும் விரும்பும் வகையில் வடிவமைத்துக் கூட்டிட இக்கூட்டம் தீர்மானிக்கிறது. 

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில், பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சுமார் 80 பேர் கலந்துகொண்டனர். அனைவருக்கும் தேனீர் – சிற்றுண்டி வழங்கப்பட்டது. 

முன்னதாக, இதுவரை உறுப்பினராகாதோரின் பெயர்கள் நிகழ்விட நுழைவாயிலில் பதிவு செய்யப்பட்டன. ஆண்டுச் சந்தாவைச் செலுத்தாதோரும், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி சந்தா செலுத்தி ரசீது பெற்றுக்கொண்டனர். 

தகவல்:  எஸ்.கே.ஸாலிஹ்

ஆசிரியர் அஹ்மத் மீராத்தம்பி
(எல்.கே.மேனிலைப் பள்ளி பயின்றோர் பேரவைக்காக...)

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com