بسم الله الرحمن الرحيم
Saturday 15th December 2018 | 06 ரபீஉல் ஆஹிர் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
சொளுக்கார் தெருவில் ஒன்றரை மாதமாக சரி செய்யப்படாத மின் கம்பம்: மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன?” குழுமம் புகார்!அச்சிடுகமின்-அஞ்சல்
06 செப்டம்பர் 2017 காலை 09:18

காயல்பட்டினம் சொளுக்கார் தெருவில் – சரிந்த நிலையில் உள்ள மின் கம்பம் ஒன்று – பலமுறை புகார் தெரிவித்த பின்னரும் - கடந்த ஒன்றரை மாத காலமாக சரி செய்யப்படாமலேயே உள்ளது. இது தொடர்பாக, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனு அளிக்கப்பட்டள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:- 

கடந்த ஜூலை 21 அன்று அடித்த பெருங்காற்றில் - மரம் சாய்ந்ததால், சாலையோரம் இருந்த மின் கம்பம் ஒன்று சொளுக்கார் தெருவில் சாய்ந்தது. மின் இணைப்பு சில மணி நேரங்கள் கழித்து வழங்கப்பட்டாலும், சாய்ந்த மின் கம்பம் - இன்றுவரை சரி செய்யப்படவில்லை. 

[படங்கள்: கோப்பு]

அக்கம்பம் மூலம் இணைப்புபெறும் வாடிக்கையாளர்கள் - இது சம்பந்தமாக, காயல்பட்டினம் மின் நிலையத்தில் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது குறித்து நடப்பது என்ன? குழுமம் வாயிலாக - ஜூலை 28 அன்று புகார் வழங்கப்பட்டது. அதன்பிறகும், மின் வாரியத்தில் இருந்து முறையான பதில் இல்லை. 

இம்மின்கம்பம் வாடிக்கையாளர்களால் நிறுவப்பட்டது என்றும், அவர்கள் செலவிலேயே இதனை சரி செய்யவேண்டும் என்றும் வாய்மூலமாக - காயல்பட்டினம் மின்நிலைய இளநிலை பொறியாளர் திரு முருகன் தெரிவித்தார். 

அரசின் எந்த விதிமுறைப்படி, பொதுமக்கள் - தங்கள் சொந்த செலவில், தெருவில் நிறுவப்பட்டுள்ள மின்கம்பத்தை சரி செய்யவேண்டும் என தெரிவிக்க கோரியும் இது வரை, திரு முருகன் பதில் வழங்கவில்லை. 

ஆபத்தான நிலையில் தொடர்ந்து இருக்கும் மின் கம்பத்தை சரி செய்யக்கோரியும், பொது மக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் தொடர்ந்து செயல்புரிந்து வரும் திரு முருகன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கோரியும் - நேற்று (செப்டம்பர் 4) மாவட்ட ஆட்சியரிடம், நடப்பது என்ன? குழுமம் சார்பாக மனு வழங்கப்பட்டது. 

இவண், 
நிர்வாகிகள், 
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம். 

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com