بسم الله الرحمن الرحيم
Wednesday 20th September 2017 | 28 துல்ஹஜ் 1438AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
வாவு வஜீஹா வனிதையர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிகள்!அச்சிடுகமின்-அஞ்சல்
07 செப்டம்பர் 2017 மாலை 11:02
                                                                                                  வணிகவியல் துறை மன்றக் கூட்டம் 30.08.2017
காயல்பட்டணம், வாவு வஜீஹா வனிதையர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 30.08.17 புதன்கிழமை அன்று காலை 11.30 மணியளவில் வணிகவியல் மன்றக் கூட்டம் நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரியின் வணிகவியல் துறை பொறுப்புத் தலைவர் செல்வி I. மாலினி M.Com., M.Phil., அவர்கள் தலைமை வகித்தார். திருநெல்வேலி எம்.டி.டி. இந்து கல்லூரியின் வணிகவியல் துறை பேராசிரியர் முனைவர் N. சங்கர கோமதி M.Com., M.Phil., MBA., M.Sc., Ph.D. அவர்கள் “ஆளுமை திறன் வளர்ச்சி” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
 
கூட்டத்தில் வணிகவியல் இளநிலை மூன்றாம் ஆண்டு மற்றும் முதுநிலை மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை வணிகவியல் துறை உதவிப் பேராசிரியை திருமதி S. ஜெயரத்னா M.Com., M.Phil., செய்திருந்தார். இரண்டாம் ஆண்டு வணிகவியல் துறை மாணவி B.M. செக்கு சாபிரா நன்றியுரை ஆற்றினார்.                                                                                                                       
                                                                                                      நாட்டு நலப்பணி மாத அறிக்கை
01.08.2017 அன்று தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. தூய்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவியர் கலந்துக் கொண்டனர். எம் கல்லூரி முதல்வர் முனைவர் J. எல்லோரா M.Com., M.Phil., Ph.D. நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினார். தூய்மை குறித்தும் அவற்றின் முக்கியத்துவம் குறித்தும் விளக்கினார். மேலும் மாணவிகள் அனைவரும் நாட்டை தூய்மையாக வைத்திருப்போம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

02.08.2017 முதல் 04.08.2017 நாட்டு நலப்பணித்  திட்ட அணி 187-ன் சார்பாக கல்லூரி வளாகத்தினைச் சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது. நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள் அனைவரும் சுத்தப்படுத்தும் பணியில் கலந்துக் கொண்டு கல்லூரி வளாகத்தினை சுத்தப்படுத்தினார்கள்.
08.08.2017 தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நாட்டு நலப்பணித் திட்ட அணி எண் 187-ன் சார்பாக காயல்பட்டினத்திலுள்ள இரயில்வே நிலையத்தில் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள் அனைவரும் பங்கேற்றனர்.
11.08.17 “தூய்மை இந்தியா” திட்டத்தின் கீழ் நாட்டு நலப்பணித் திட்ட அணி எண் 187-ன் சார்பாக அடைக்கலாபுரத்திலுள்ள முதியோர் இல்லத்தில் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள் அனைவரும் கலந்து கொண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர். இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் முனைவர் J. எல்லோரா M.Com., M.Phil., Ph.D. அவர்களும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலரான இயற்பியல் துறை உதவி பேராசிரியர் K. கோகிலா ஜெனிபர் M.Sc., B.Ed., மற்றும் வணிகவியல் துறை உதவி பேராசிரியர் S. செல்வசாந்தி M.Com., M.Phil., அவர்களும் ஒருங்கிணைத்தனர். மேலும் நிகழ்ச்சியின் இறுதியில் தூய்மை குறித்து மாணவிகள் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.
11.08.2017 அன்று அடைக்கலாப்புரத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள் அனைவரும் தூய்மை பற்றிய விழிப்புணர்வு பேரணி நடத்தினர். 

                                                                                                                                தூய்மை இந்தியா

15.08.2017 சுதந்திர தினத்தன்று தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மையான இந்தியாவை உருவாக்குவேன், ஏழ்மை இல்லாத இந்தியாவை உருவாக்குவேன், ஊழல் இல்லாத இந்தியாவை உருவாக்குவேன், பயங்கரவாதம் இல்லாத இந்தியாவை உருவாக்குவேன் என்று New India Pledge-யை நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள் அனைவரும் எடுத்தனர். இதில் கல்லூரி முதல்வர் முனைவர் J. எல்லோரா M.Com., M.Phil., Ph.D. கலந்து கொண்டார்

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com