بسم الله الرحمن الرحيم
Monday 20th November 2017 | 01 ரபீஉல் அவ்வல் 1439AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
தூ-டி வந்த முதலமைச்சருடன் மஜக நிர்வாகிகள் சந்திப்பு!! படுகொலை செய்யப்பட்ட காயலர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க கோரிக்கை!!அச்சிடுகமின்-அஞ்சல்
09 செப்டம்பர் 2017 காலை 11:08

SRM என்ற தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான ஆம்னி பேருந்தில், காயல்பட்டினத்திலிருந்து சென்னைக்குப் பயணித்த காயல்பட்டினத்தைச் சேர்ந்த இளைஞர் மீராத்தம்பி, தூத்துக்குடியருகில் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது, மது போதையிலிருந்த இருவரால் கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டார். 

இதனையடுத்து, பொதுநல அமைப்புகள் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வரிசையில், நேற்று தூத்துக்குடிக்கு வருகை தந்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம், படுகொலை செய்யப்பட்ட காயலரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் கோரி, மனிதநேய ஜனநாயகக் கட்சியின் நிர்வாகிகள் நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர். இதுகுறித்து, அக்கட்சியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:- 

படுகொலை செய்யப்பட்ட காயல்பட்டினம் இளைஞருக்கு இழப்பீடு வழங்கக் கோரி, முதலமைச்சருடன் மஜக நிர்வாகிகள் நேரில் சந்திப்பு : 

இன்று (07-09-2017) தூத்துக்குடி வருகை புரிந்த தமிழக முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடி K.பழனிச்சாமி அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் அ.ஜாஹீர்உசேன் தலைமையில் சந்திப்பு நடைபெற்றது. 

26-08-2017 அன்று திருச்செந்தூரிலிருந்து சென்னைக்கு SRM பேருந்தில் காயல்பட்டினம் இளைஞர் மீரா தம்பி பயணம் செய்த போது, அதே பேருந்தில் முன்பதிவில்லாமல் குடிபோதையில் பயணம் செய்த இருவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் மீரா தம்பி படுகொலை செய்யப்பட்டார். 

இத்துயரச் சம்பவத்தை அறிந்தவுடன், மனிதநேய ஜனநாயக கட்சி மாநிலச் செயலாளர் என்.ஏ. தைமிய்யா அவர்கள் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி MLA அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றார். 

மாண்புமிகு அமைச்சர் கடம்பூர் ராஜூ அவர்களை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து சம்பந்தப்பட்வர்களை உடனடியாக கைது செய்ய மஜக சார்பில் வலியுறுத்தப்பட்டது. 

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் மஜக சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி MLA அவர்கள், கொலை செய்யப்பட்ட மீராதம்பிக்கு அரசின் சார்பில் இழப்பீடு வழங்குமாறு தொலைபேசியில் வலியுறுத்தினார். 

படுகொலைசெய்யப்பட்ட மீராதம்பியின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கக்கோரியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுவேலை வழங்கக்கோரியும், மற்றும் படுகொலைக்கு காரணமான SRM பேருந்து நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முதலமைச்சரிடம் தூத்துக்குடி (தெ) மாவட்டச் செயலாளர் ஜாஹிர் ஹுசைன் நேரில் வலியுறுத்தினார். பின்னர் கோரிக்கை மனுவும் முதல்வரிடம் வழங்கப்பட்டது. 

மஜக சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகளை உற்றுநோக்கிய முதல்வர், இழப்பீடு மற்றும் அரசுவேலை வழங்குவதாக வாக்குறுதி அளித்தார். மேலும் SRM பேருந்து நிர்வாகத்தின்மீது நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார். 

இச்சந்திப்பில் மாவட்ட செயலாளர் ஜாஹிர் ஹுஸைன், மாவட்ட துணைசெயலாளர் முகம்மது நஜீப், மாவட்டதொழிலாளர் அணி செயலாளர் ராசிக் முசம்மில், கொலை செய்யப்பட்ட மீராதம்பியின் தகப்பனார் பஹ்ருதீன், மீரா தம்பியின் சகோதரி சுலைஹா ஆகியோர் முதலமைச்சரை சந்தித்தனர். 

கோரிக்கை நிறைவேறும் வரும் பயணம் தொடரும்..... இறைவன் நாடினால் 

- மஜக ஊடகப் பிரிவு 

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com