بسم الله الرحمن الرحيم
Wednesday 20th September 2017 | 28 துல்ஹஜ் 1438AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
மகளிர் காவல்நிலைய அதிகாரிகள் கலந்துக்கொண்ட, சமூக ஊடகங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, சுபைதா பள்ளிக்கூடத்தில் நடந்தது! நடப்பது என்ன? குழுமம் பெண்கள் பிரிவு ஒருங்கிணைப்பு!அச்சிடுகமின்-அஞ்சல்
10 செப்டம்பர் 2017 மாலை 08:50

 

*மகளிர் காவல்நிலைய அதிகாரிகள் கலந்துக்கொண்ட, சமூக  ஊடகங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு  நிகழ்ச்சி, சுபைதா பள்ளிக்கூடத்தில் நடந்தது! நடப்பது என்ன? குழுமம் பெண்கள் பிரிவு ஒருங்கிணைப்பு!*
அன்புடையீர்,
_இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!_
*சமூக ஊடகங்கள் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த - தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் (Superintendent of Police; SP) உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து, திருச்செந்தூர் மகளிர் காவல்நிலையம் - அதன் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில், பள்ளிக்கூட மாணவிகள் மத்தியில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.*
IMG-20170910-WA0124
பல்வேறு ஊர்களில் நடத்தப்பட்டுள்ள இந்நிகழ்ச்சி  காயல்பட்டினத்தில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களிலும் நடத்தப்படவுள்ளது, இறைவன் நாடினால். *நடப்பது என்ன? குழுமம் பெண்கள் பிரிவு இந்நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கிறது.*
IMG-20170910-WA0125
*துவக்கமாக - இந்நிகழ்ச்சி இன்று மாலை, சுபைதா மேனிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் 8 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவியர் திரளாக கலந்துக்கொண்டனர்.*
IMG-20170910-WA0128
IMG-20170910-WA0123
அனைத்து மகளிர் காவல்நிலையத்தின் ஆய்வாளர் *திருமதி சாந்தி*, தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சிகளை கிராஅத் ஓதி, மாணவி *செல்வி ஆயிஷா ஜுவைரியா* துவக்கிவைத்தார்.
சுபைதா மேனிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் *திருமதி பீர் பாத்திமா* வரவேற்புரை நிகழ்த்தினார். 
காயல்பட்டினம் நகர்மன்றத்தின் முன்னாள் தலைவர் *திருமதி ஐ.ஆபிதா சேக் B.Sc.,B.Ed.*, வாழ்த்துரை வழங்கினார்.
*திரு JSB சாந்திராக் B.Sc.,B.L., செல்வி எம்.சுகன்யா B.A.,B.L., திருமதி சந்திரிக்கா (தலைமை காவலர்), திருமதி செல்வராணி (தலைமை காவலர்)* ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
_அவர்கள் - தங்கள் உரையில், தாங்கள் அனுபவப்பூர்வமாக மாணவ சமுதாயம் மத்தியில் கண்ட சமூக ஊடகங்கள் ஏற்படுத்திய பாதிப்புகள் குறித்து, விரிவாகவும், ஆழமாகவும் விளக்கினர்._ 
*சமூக ஊடகங்களில் பலரை அச்சுறுத்தி வரும்  நீல திமிங்கலம் (BLUE WHALE) விளையாட்டு குறித்தும், எச்சரிக்கை வழங்கும் முகமாக மாணவியருக்கு எடுத்துரைக்கப்பட்டது.*
இறுதியாக - நடப்பது என்ன? குழுமம் சார்பாக *சகோதரர் ஜபருல்லாஹ்*, நன்றியுரை வழங்கினார்.
இவண்,
_நிர்வாகிகள்,_
*நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.*

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com