بسم الله الرحمن الرحيم
Monday 20th November 2017 | 01 ரபீஉல் அவ்வல் 1439AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
அக். 03இல் அரசு மருத்துவமனையில் குருதிக்கொடை முகாம்! கொடையளிக்க விரும்புவோர் இணையவழியில் பெயர் பதிவு செய்ய “நடப்பது என்ன?” குழுமம் வேண்டுகோள்!!அச்சிடுகமின்-அஞ்சல்
12 செப்டம்பர் 2017 மாலை 09:04

காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில், “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் குருதிக்கொடை முகாம் நடத்தப்படவுள்ளது. இம்முகாமில் குருதிக்கொடையளிக்க விருப்பமுள்ளோர், இணையவழியில் (ஆன்லைன் முறையில்) பெயர்பதிவு செய்துகொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:- 

அக்டோபர் 3, 2017 அன்று நடைபெறவுள்ள இரத்த தானம் முகாமில் (BLOOD DONATION CAMP) கலந்துக்கொள்ள இணையவழியில் பதிவு செய்யலாம்! (ONLINE REGISTRATION OPEN) 

இறைவன் நாடினால், எதிர்வரும் அக்டோபர் 3 அன்று காயல்பட்டினம் அரசு மருத்துவமனை வளாகத்தில், இரத்த தான முகாம் - நடைபெறவுள்ளது. 

இந்த முகாமை - நடப்பது என்ன? குழும ஒருங்கிணைப்பில், தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் திருச்செந்தூர் தாலுகா அரசு மருத்துவமனை இரத்த வங்கி ஆகியவை இணைந்து நடத்துகின்றன. 

இந்த முகாமில் இரத்த தானம் செய்யவிரும்புவோர் எளிதாக முன்பதிவு செய்ய - இணையவழி முன்பதிவு படிவம் (ONLINE REGISTRATION) - வெளியிடப்பட்டுள்ளது. இந்த படிவத்தை நிரப்ப - ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரமே எடுக்கும். 

எனவே - இரத்த தானம் செய்யவிரும்புவோர் - கீழே வழங்கப்பட்டுள்ள, இணையதள முகவரி மூலமாக, முன்பதிவு செய்ய (PRIOR REGISTRATION) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

முன்பதிவு செய்ய இணையதள முகவரி: 
https://goo.gl/forms/y6MUBJqN6HrKzLhM2 

இவண், 
நிர்வாகிகள், 
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம். 

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, கடந்த 05.04.2017. புதன்கிழமையன்று, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தின் ஏற்பாட்டில், முதலாவது குருதிக்கொடை முகாம், காயல்பட்டினம் கே.எம்.டீ. மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.

இதில், பல்வேறு இரத்த வகுப்புகளைக் கொண்ட - சுமார் 80க்கும் மேற்பட்ட காயலர்கள் குருதிக்கொடையளித்தனர். அவர்களனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர் சிவலிங்கம் இம்முகாமில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். 

100 முறைக்கும் மேலாக குருதிக்கொடையளித்த காயலரான கானி எம்.ஏ.முஹம்மத் முஹ்யித்தீன், இம்முகாமின் துவக்கத்தில் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் பாராட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com