بسم الله الرحمن الرحيم
Monday 20th November 2017 | 01 ரபீஉல் அவ்வல் 1439AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
தனியார் பேருந்தில் சென்ற காயலர் படுகொலை: குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும், என மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளரிடம் SDPI வலியுறுத்தல்!!அச்சிடுகமின்-அஞ்சல்
13 செப்டம்பர் 2017 மாலை 02:14

 

காயல்பட்டணத்தைச் சார்ந்த மீராத் தம்பி என்பவர் கடந்த மாதம் SRM பேருந்தில் சென்னைக்கு பயணம் செய்த போது தூத்துக்குடியில் வைத்து அதே பேருந்தில் பயணம் செய்த சிவகங்கை மற்றும் புதுக்கோட்டையைச் சார்ந்த இருவரால் அநியாயமாக படுகொலை செய்யப்பட்டார்.
இப்படுகொலைக்கு நீதி வேண்டியும், குற்றவாளிகளை கைது செய்யக் கோரியும் #SDPI கட்சியின் சார்பில் #காயல்பட்டணத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து #தூத்துக்குடி மாவட்ட #ASP அவர்களின் வாக்குறுதிப்படி குறிப்பிட்ட மூன்று நாட்களுக்குள் காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்தனர்.
20170911_225451-640x457
மேலும் இச்சம்பவத்தின் பின்னணி மற்றும் வழக்கின் நிலை குறித்து தெரிந்து கொள்வதற்காக தூத்துக்குடி மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர்
( ASP ) திரு. செல்வநாகரத்தினம் அவர்களை  SDPI கட்சியின் நிர்வாகிகள் 11 - 9 - 2017 திங்கள்கிழமை அன்று சந்தித்தனர். #ASP நம்மிடம் பேசுகையில்,
பேருந்தில் இருவருக்கும் ஏற்பட்ட சிறு பிரச்சினை காரணமாகவே குற்றவாளிகள் குடிபோதையில் அவரை கொன்றதாகவும் வேறு எந்தகாரணமுமில்லை என்று குற்றவாளிகள் வாக்குமூலம் கொடுத்திருப்பதாக கூறினார்.
இச்சந்திப்பில்  SDPI கட்சியினருடன் மீராத் தம்பி அவர்களின் உறவினர்களும் உடனிருந்தனர்.
குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும், குற்றவாளிகளுக்கு உயர்ந்த பட்ச தண்டனையாக மரண தண்டனை வழங்க வேண்டும். என்பதே #SDPI கட்சியின் கோரிக்கை என்பதை அரசு துறைகளில் உள்ள அதிகாரிகளிடம் கோரிக்கையாக SDPI கட்சியின் சார்பாக வைக்கப்பட்டது.
இந்த சந்திப்பின்போது தூத்துக்குடி மாவட்ட #SDPI கட்சியின் நிர்வாகிகளும், காயல் நகர நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.
தகவல் :
செய்தி மற்றும் ஊடகத்துறை,
#SDPI கட்சி - #தூத்துக்குடி மாவட்டம்.

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com