بسم الله الرحمن الرحيم
Saturday 15th December 2018 | 06 ரபீஉல் ஆஹிர் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

 • Google Bookmarks
 • Twitter
 • Windows Live
 • Facebook
 • MySpace
 • deli.cio.us
 • Digg
 • Newsvine
 • reddit
 • StumbleUpon
 • Yahoo! Bookmarks
 • Yigg
“கண்ணும்மா முற்றம்” எனும் பெயரில் “எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு” அமைப்பின் கீழ், சிறார் நிகழ்ச்சிகளுக்கென்று தனி பிரிவு துவக்கம்!!! நிர்வாகக் குழு அறிக்கையில் தகவல்!!!அச்சிடுகமின்-அஞ்சல்
15 செப்டம்பர் 2017 மாலை 03:19

சிறார்களுக்கான நிகழ்வுகளை நடத்திட, தனி பிரிவு ஒன்றை துவங்கியுள்ளது “எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு”. இது குறித்து, அவ்வமைப்பின் சார்பில் வெளியிட்டுள்ள தகவலறிக்கை: 

சமூகத்தின் பல்வேறு தளங்களிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் முனைப்போடு – நூலாய்வு, திரையிடல் & விவாத அரங்குகள் போன்ற நிகழ்வுகளின் மூலம், நமதூர் மக்களிடம் புதிய / மாற்று சிந்தனையை கொண்டு செல்லும் முன்னோடி தனித்த சிந்தனைத்தளமாக “எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு” விளங்குகிறது. 

பெரிதாக அறியப்படாத சிந்தனையாளர்கள் & ஆளுமைகளை அறிமுகம் செய்வதையும், ஆக்கப்பூர்வமான பல சமூக முன்னேற்ற முயற்சிகளை முன்னெடுத்து செல்வதையும் நோக்கமாக கொண்டு செயல்பட்டு வரும் இவ்வமைப்பு, இதுவரை 17 நிகழ்வுகளை நமதூரில் சிறப்பான முறையில் நடத்தியுள்ளது, அல்ஹம்துலில்லாஹ். 

இந்த அமர்வுகளுள் பெரும்பாலானவை பெரியவர்களுக்காகவே நிகழ்ந்த போதிலும், சிறார்களுக்காக நான்கு தனித்துவமான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

நமது அடுத்த தலைமுறையினரான இன்றைய குழந்தைகளிடம் - கலை, இலக்கியம், பண்பாடு, மரபு வரலாறு & இயற்கைக் கல்வி ஆகியவற்றை முறையே கொண்டு சேர்க்கும் பெரும்பொறுப்பின் அவசியத்தை உணர்ந்தவர்களாய், சிறார் நிகழ்ச்சிகளுக்கென்று ஓர் தனிப் பிரிவை இவ்வமைப்பின் கீழ் துவங்கியுள்ளோம். 

“கண்ணும்மா முற்றம்” - பெயர் காரணம்!

இன்றைய உறவு நிலையில், கண்ணும்மாக்களின் (தாய் வழிப் பாட்டிகள்) இடத்தை தொலைக்காட்சிகள் முதல் அலைபேசிகள் வரை அனைத்து வகை மின்னணு ஊடகங்களும் கருவிகளும் கைப்பற்றிக்கொண்டதோடு, பெரியவர்களின் இயந்திர வாழ்க்கைக்கு ஒன்றும் அறியாத இளவல்களையும் இரையாக்கிக் கொண்டிருக்கின்றோம். 

“அன்பின் உருவிலேயே கண்டிப்பையும், கோபமுகத்தோடே இழுத்து வைத்துச் சோறு ஊட்டவும், சிரிக்கச் சிரிக்கக் கதை சொல்லவும், அழுது அழுது கஷ்டங்களைப் புரியவைக்கவுமான பேராற்றலை வழிவழி வந்த பட்டறிவின் காட்டாறு பாட்டிக்குப் புகட்டியிருந்தது. அவற்றை நழுவ விட்டுவிட்டது சமகாலச் சூழல்.”- எஸ். வி. வேணுகோபாலன், எழுத்தாளர். 

கண்ணும்மாக்களின் பாசமும் அரவணைப்பும் அபரிமிதமானது. அவர்களுடனான பொழுதுகளின் நினைவுகள் என்றுமே நம் அனைவரின் மனதிலும் உறைந்திருக்கும். கதை, பாட்டு, கவிதை, விடுகதை & விளையாட்டுகள் என குழந்தைகளை மகிழ்விப்பதில் அவர்களின் பங்கு அளவற்றது. 

எல்லாவித குடும்ப தளைகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டு குழந்தைகளுக்காகவென்றே இயல்பாகவே நியமிக்கப்பட்ட அன்பின் மொத்த திரட்டுதான் கண்ணும்மாக்கள். குழந்தை வளர்ப்பின் முதுநிலைக்கலைஞர்களான அவர்களை நன்றியோடு நினைவு கூறும் விதமாகவும், குழந்தைகளை கண்ணும்மாக்களின் இறக்கை கதகதப்பில் மீட்டுவதற்காகவுமே இந்த பெயரை அர்ப்பணிக்கின்றோம். 

திசைமாறிச் செல்லும் சிறார்களின் சிறப்பான எதிர்காலத்திற்காக, “கண்ணும்மா முற்றம்” எனும் இந்த தனித்துவமான பிரிவின் மூலம் – இயற்கை கல்வி முகாம்கள்; நூல் அறிமுகங்கள்; சிறப்பு திரையிடல்கள் & கதை சொல்லல், நாடகங்கள் & பாடல்கள் உள்ளிட்ட கலை நிகழ்வுகள் என பல்வேறு நிகழ்வுகளை தொடர்ச்சியாக நடத்திட முனைந்துள்ளோம். 

சிறார்களுக்கான அடுத்த நிகழ்வு

இந்த தனி பிரிவின் அய்ந்தாம் நிகழ்வு, முஹ்யித்தீன் மெட்ரிக்குலேஷன் மேனிலைப் பள்ளி இணைவில் முப்பெரும் விழாவாக நடத்திட முயற்சிக்கிறோம். இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும், இன்ஷா அல்லாஹ். 

செய்தியாக்கம்:
அ.ர. ஹபீப் இப்றாஹீம்

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com