بسم الله الرحمن الرحيم
Tuesday 16th October 2018 | 05 ஸஃபர் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் தொழில்முனைவோர் மன்றத்தின் சார்பில் 2017-2018 கல்வி ஆண்டிற்கான முதல் கூட்டம்!அச்சிடுகமின்-அஞ்சல்
15 செப்டம்பர் 2017 மாலை 03:28

 

காயல்பட்டணம், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் தொழில்முனைவோர் மன்றத்தின் சார்பில் 2017-2018 கல்வி ஆண்டிற்கான முதல் கூட்டம் 31.08.17 அன்று மதியம் 2.00 மணியளவில் நடைபெற்றது. இரண்டாமாண்டு வணிகவியல் மாணவி    M.S. பாத்திமா முனவரா கிராத் ஓத, தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொழில்முனைவோர் வளர்ச்சிக் கூட்டம் தொடங்கியது. வணிகவியல் துறை பேராசிரியர் V. புவனேஸ்வரி M.Com., M.Phil., வரவேற்புரை வழங்கினார். 
மூன்றாமாண்டு வணிக நிர்வாகவியல் துறை மாணவி U.Z.K. ஹலிமா மன்ற அறிக்கை வாசித்தார். கல்லூரி இயக்குநர் முனைவர் திருமதி. மெர்சி ஹென்றி M.A., Ph.D. வாழ்த்துரை வழங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் திருமதி J. எல்லோரா M.Com., M.Phil., Ph.D. சிறப்பு விருந்தினருக்கு நினைவுப் பரிசு வழங்கினார்.
DSC_0217-800x458
தூத்துக்குடி, பிஷப் கால்வெல் கல்லூரியின் பொருளியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் J. மோசஸ் ஞானக்கண் M.A., M.Phil., Ph.D. சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, தொழில் முனைவோராக எவ்வாறு ஆகலாம் என்பதைப் பற்றி சிறப்புரை வழங்கினார். மூன்றாமாண்டு பொருளியல் துறை மாணவி U.Z.K. ஹலிமா நன்றியுரை வழங்கினார். முதலாமாண்டு வணிகவியல் துறை மாணவி M.A. முஷரஃபா சுல்தானா துஆ ஓத, நாட்டுப்பண்ணுடன் தொழில்முனைவோர் வளர்ச்சிக் கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.
 இக்கூட்டத்தில் மூன்றாமாண்டு வணிகவியல், வணிக நிர்வாகவில் மற்றும் பொருளியல் மாணவிகள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை தொழில் முனைவோர் மையத்தினர் செய்திருந்தனர்.

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com