بسم الله الرحمن الرحيم
Friday 14th December 2018 | 05 ரபீஉல் ஆஹிர் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
*சென்ட்ரல் மெட்ரிகுலேசன் மேனிலைப்பள்ளியில் மகளிர் காவல்நிலைய அதிகாரிகள் கலந்துக்கொண்ட, சமூக ஊடகங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது! நடப்பது என்ன? குழுமம் பெண்கள் பிரிவு ஒருங்கிணைப்பு!!*அச்சிடுகமின்-அஞ்சல்
16 செப்டம்பர் 2017 மாலை 03:54

 

*சென்ட்ரல் மெட்ரிகுலேசன் மேனிலைப்பள்ளியில் மகளிர் காவல்நிலைய அதிகாரிகள் கலந்துக்கொண்ட, சமூக ஊடகங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது! நடப்பது என்ன? குழுமம் பெண்கள் பிரிவு ஒருங்கிணைப்பு!!*
அன்புடையீர்,
_இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!_
*சமூக ஊடகங்கள் (SOCIAL MEDIA) ஏற்படுத்தும் பாதிப்புகள்* குறித்து மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த - *தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் (Superintendent of Police; SP)* உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து, *திருச்செந்தூர் மகளிர் காவல்நிலையம்* - அதன் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில், பள்ளிக்கூட மாணவிகள் மத்தியில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. 
பல்வேறு ஊர்களில் நடத்தப்பட்டுள்ள இந்நிகழ்ச்சி காயல்பட்டினத்தில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களிலும் நடத்தப்படவுள்ளது, _இறைவன் நாடினால்_. *நடப்பது என்ன? குழுமம் பெண்கள் பிரிவு இந்நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கிறது.*
IMG-20170916-WA0094
IMG-20170916-WA0095
இத்தொடரின் முதல் நிகழ்ச்சி - *கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 9, 2017) அன்று காயல்பட்டினம் சுபைதா மேனிலைப்பள்ளியின் நடந்தது.* 
அதன் தொடர்ச்சியாக, *இன்று (செப்டம்பர் 16, 2017)* காலை - இந்நிகழ்ச்சி, *சென்ட்ரல் மெட்ரிகுலேசன் மேனிலைப்பள்ளி* வளாகத்தில் நடைபெற்றது. _இதில் 8 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவியர் திரளாக கலந்துக்கொண்டனர்._
IMG-20170916-WA0092
IMG-20170916-WA0097
IMG-20170916-WA0099
_முன்னாள் காயல்பட்டினம் நகர்மன்றத்தலைவி_ *திருமதி I.ஆபிதா சேக் B.Sc., B.Ed.* - முன்னிலை வகித்து, நிகழ்ச்சியினை நெறிப்படுத்தினார்.
_திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தின் ஆய்வாளர்_ *திருமதி C.சாந்தி* - நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். 
ஆரம்பமாக, *மாணவி செல்வி சித்தி ஹாலிதா* - கிராஅத் ஓதி, நிகழ்ச்சிகளை துவக்கிவைத்தார். 
IMG-20170916-WA0096
_சென்ட்ரல் மெட்ரிகுலேசன் மேனிலைப்பள்ளியின் ஆசிரியர்_ *திருமதி செல்வநங்கை* வரவேற்புரை நிகழ்த்தினார். 
தொடர்ந்து, _வழக்கறிஞர்_ *செல்வி M.சுகன்யா B.A.,B.L.* சிறப்புரையாற்றினார்.
அதனை அடுத்து - _திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தின் துணை ஆய்வாளர்_ *திருமதி M.ரவிமதி M.A. (English Literature)* - *மகளிருக்கு எதிரான குற்றங்கள்?* என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அதில் - _மாணவிகளுக்கு ஒழுக்கத்தின் அவசியம், ஆசிரியர்களுக்கு மரியாதை, பாலியல் பிரச்சனைகள்,  நீல திமிங்கலம் விளையாட்டு_ உட்பட பல்வேறு விஷயங்கள் அடங்கியிருந்தன.
தொடர்ந்து - _வழக்கறிஞர்_ *திரு J.S.D.சாத்ராக் B.Sc.,B.L.* சிறப்புரையாற்றினர். 
IMG-20170916-WA0091
அவரின் உரையின் இடையில் - *மாணவிகளிடம் கேள்விகள் கேட்டு, அதற்கு சரியான பதில்கள் சொன்னவர்களுக்கு - பரிசுகளையும் வழங்கினார்.*
மாணவிகள் *சித்திஹாலிதா, ஆசியா நுஜைபா, ரிசானா, மரியம், கதிஜா பஹ்மிதா, மகிதியா, செனி* ஆகியோர் பரிசுகள் வென்றனர்.
இறுதியாக - _திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் ஆய்வாளர்_ *திருமதி C.சாந்தி* - விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார். அத்துடன் - நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
IMG-20170916-WA0093
*நடப்பது என்ன?* பெண்கள் குழும நிர்வாகிகளில் ஒருவரான *திருமதி தஸ்லீமா அஜீஸ்* நன்றியுரை வழங்கினார்.
_சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை_ *திருமதி M. செண்பகவல்லி M.A.,B.Ed.* - நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்தவர்களுக்கும், கலந்துக்கொண்ட அனைவருக்கும் தனது வாழ்த்தினை தெரிவித்தார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை - *முன்னாள் நகர்மன்றத்தலைவர் I.ஆபிதா சேக் தலைமையில்,  நடப்பது என்ன? குழுமத்தின் பெண்கள் பிரிவு நிர்வாகிகள் - திருமதி மொபா மாலிக், திருமதி நிலோபர் சாமு, திருமதி தஸ்லீமா அஜீஸ்* ஆகியோர் செய்திருந்தனர்.
இவண்,
_நிர்வாகிகள்,_
*நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.*

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com