بسم الله الرحمن الرحيم
Tuesday 17th October 2017 | 26 முஹர்ரம் 1439AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் 05.09.17, 06.09.17, 07.09.17 ஆகிய மூன்று தினங்களும் தொழில் முனைவோர் மையம் மற்றும் நுகர்வோர் மன்றம் இணைந்து கல்லூரி சந்தை நடத்தியது!அச்சிடுகமின்-அஞ்சல்
20 செப்டம்பர் 2017 மாலை 03:33
காயல்பட்டணம், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் 05.09.17, 06.09.17, 07.09.17 ஆகிய மூன்று தினங்களும் தொழில் முனைவோர் மையம் மற்றும் நுகர்வோர் மன்றம் இணைந்து கல்லூரி சந்தை நடத்தியது. 05.09.17 அன்று 11.00 மணியளில் கல்லூரியின் நிறுவனர் தலைவர் அல்ஹாஜ் வாவு S. செய்யது அப்துர் ரஹ்மான் தொடங்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரகம், மகளிர் திட்டங்களின் மகளிர் சுய உதவி குழுவில் இருந்து உற்பத்தி பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. முதல் இரண்டு நாட்கள் கல்லூரி நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவியர்கள் ஆகியோரும் மூன்றாவது நாள் பெற்றோரும் கல்லூரி சந்தையில் கலந்து கொண்டு பொருள்களை வாங்கி பயன் பெற்றனர். காலை 11.00 மணியளவில் திருமதி P.J. ரேவதி மகளிர் சுய உதவி குழு, இணை இயக்குநர் அவர்கள் கல்லூரி சந்தையை பார்வையிட்டனர்.
07.09.17 அன்று மதியம் 2.00 மணியளவில் M.S. பாத்திமா முனவ்வரா இரண்டாம் ஆண்டு வணிகவியல் மாணவி கிராத் ஓத தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிறைவு விழா தொடங்கியது. திருமதி. ல. நூர் அஸ்மா M.A., M.Phil., SET. உதவி பேராசிரியர், பொருளியல் துறை மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் ஒருங்கிணைப்பாளர் வரவேற்புரை வழங்கினார்.
கல்லூரி முதல்வர் முனைவர் திருமதி. ஜெ. எல்லோரா M.Com., M.Phil., Ph.D. நிறைவுரை வழங்கினார். காயல்பட்டணம் முன்னாள் நகராட்சி தலைவர் திருமதி. வஹீதா சிறப்புரை ஆற்றினார். தூத்துக்குடி திறன் மற்றும் வேலைவாய்ப்பு திட்ட அலுவலர் திரு.வா.மு. சிவக்குமார், கல்லூரி இயக்குநர் முனைவர் திருமதி. மெர்சி ஹென்றி M.A., Ph.D. சிறப்பு விருந்தினர்களை கௌரவித்தார்.
 
வணிக செயலாற்றியல் துறை உதவிப் பேராசிரியர் செல்வி ரா. ஜெய விக்னேஷ்வரி MBA. நன்றியுரை வழங்கினார். மூன்றாமாண்டு வணிக நிர்வாகவியல் மாணவி M.N. ஆஷிகா ஷபானா துஆ ஓத நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது. இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் மற்றும் நுகர்வோர் மன்றம் சார்ந்த உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com