بسم الله الرحمن الرحيم
Tuesday 16th October 2018 | 05 ஸஃபர் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
முஹைதீன் மெட்ரிகுலேசன் மேனிலைப்பள்ளியில் சமூக ஊடகங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, “நடப்பது என்ன?” ஒருங்கிணைப்பில் மகளிர் காவல் நிலையம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி! முஅஸ்கர் மகளிர் அரபிக் கல்லூரி மாணவியரும் பங்கேற்பு!அச்சிடுகமின்-அஞ்சல்
23 செப்டம்பர் 2017 மாலை 03:41

 

முஹைதீன் மெட்ரிகுலேசன் மேனிலைப்பள்ளியில் சமூக ஊடகங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, “நடப்பது என்ன?” ஒருங்கிணைப்பில் மகளிர் காவல் நிலையம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி! முஅஸ்கர் மகளிர் அரபிக் கல்லூரி மாணவியரும் கலந்துக்கொண்டனர்!!*
அன்புடையீர்,
_இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!_
*சமூக ஊடகங்கள் (SOCIAL MEDIA)* ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து *மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு* ஏற்படுத்த - *தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் (Superintendent of Police; SP)* உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து, *திருச்செந்தூர் மகளிர் காவல்நிலையம்* - அதன் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில், பள்ளிக்கூட மாணவிகள் மத்தியில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
பல்வேறு ஊர்களில் நடத்தப்பட்டுள்ள இந்நிகழ்ச்சி - _இறைவன் நாடினால்_, *காயல்பட்டினத்தில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களிலும் நடத்தப்படவுள்ளது. நடப்பது என்ன? குழுமம் பெண்கள் பிரிவு இந்நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கிறது.*
இத்தொடரின் *முதல் நிகழ்ச்சி* - *செப்டம்பர் 9, 2017* அன்று காயல்பட்டினம் *சுபைதா மேனிலைப்பள்ளியில் நடந்தது.* 
*இரண்டாவது நிகழ்ச்சி, செப்டம்பர் 16, 2017* அன்று *சென்ட்ரல் மெட்ரிகுலேசன் மேனிலைப்பள்ளியில் நடந்தது.*
IMG-20170923-WA0122
இத்தொடரின் *மூன்றாவது நிகழ்ச்சி, முஹைதீன் மெட்ரிகுலேசன் மேனிலைப்பள்ளி* வளாகத்தில் இன்று (*செப்டம்பர் 23, 2017*)  காலை நடந்தது.
இந்நிகழ்ச்சியில் - *முஹைதீன் மெட்ரிகுலேசன் மேனிலைப்பள்ளியின் 6 வது வகுப்பு முதல் 12 வகுப்பு சார்ந்த ஏறத்தாழ 100 மாணவியரும், நூற்றுக்கும் மேற்பட்ட முஅஸ்கர் மகளிர் அரபிக் கல்லூரி மாணவியரும் கலந்துக்கொண்டனர்.*
IMG-20170923-WA0128
_முன்னாள்_ *காயல்பட்டினம் நகர்மன்றத்தலைவி திருமதி I.ஆபிதா சேக் B.Sc., B.Ed.* - முன்னிலை வகித்து, நிகழ்ச்சியினை நெறிப்படுத்தினார். 
*மாணவி செல்வி சாகிபு நாச்சி* - கிராஅத் ஓதி, நிகழ்ச்சிகளை துவக்கிவைத்தார். 
_முஹைதீன் மெட்ரிகுலேசன் மேனிலைப்பள்ளியின் ஆசிரியர்_ *திருமதி மரியம் பாத்திமா* வரவேற்புரை நிகழ்த்தினார். 
துவக்கமாக, *வழக்கறிஞர் செல்வி M.சுகன்யா B.A.,B.L.* _மகளிர் பாதுகாப்பு_ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். 
IMG-20170923-WA0119
தொடர்ந்து, *திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தின் துணை ஆய்வாளர் திருமதி M.ரவிமதி M.A. (English Literature)* - _பாலியல் குற்றங்கள்_ பற்றி உரை நிகழ்த்தினார். 

IMG-20170923-WA0131

அடுத்து, _அனைத்து மகளிர் காவல்நிலையத்தில்_ *தலைமை காவலர் திருமதி சந்திரிகா* - மாணவியர் மத்தியில் உரையாற்றினார். 
அவரை தொடர்ந்து, *அனைத்து மகளிர் காவல்நிலையத்தின் ஆய்வாளர் திருமதி C.சாந்தி*, உரையாற்றினார்.
IMG-20170923-WA0123
*மொஹிதீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி* _தலைமை ஆசிரியை_ *சினோமணி ஜெயமுருகன்* - தொடர்ந்து, வாழ்த்துரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சிகளின் நோக்கங்கள் குறித்து _முன்னாள் நகர்மன்றத்தலைவர்_ *I.ஆபிதா சேக் B.Sc., B.Ed.* இறுதியாக, உரை நிகழ்த்தினார்.
*நடப்பது என்ன?* பெண்கள் குழும நிர்வாகிகளில் ஒருவரான *திருமதி தஸ்லீமா அஜீஸ்* நன்றியுரை வழங்கினார். 
IMG-20170923-WA0121
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை - _முன்னாள் நகர்மன்றத்தலைவர்_ *I.ஆபிதா சேக்* தலைமையில், *நடப்பது என்ன? குழுமத்தின் பெண்கள் பிரிவு* நிர்வாகிகள் - *திருமதி மொபா மாலிக், திருமதி நிலோபர் சாமு, திருமதி தஸ்லீமா அஜீஸ்* ஆகியோர் செய்திருந்தனர். 
இவண்,
_நிர்வாகிகள்,_
*நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.*

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com