بسم الله الرحمن الرحيم
Saturday 15th December 2018 | 06 ரபீஉல் ஆஹிர் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
காயல்பட்டணம் - சென்னை வழிகாட்டு மையம் (KCGC) நடத்திய மருத்துவ முகாம்!அச்சிடுகமின்-அஞ்சல்
26 செப்டம்பர் 2017 மாலை 07:35

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெருங் கிருபையால் காயல்பட்டணம் - சென்னை வழிகாட்டு மையம் (KCGC) அமைப்பின் சார்பில், சென்னை க்ரவுன் அரிமா சங்கம், முகில் அறக்கட்டளை, பில்ராத் மருத்துவமனை மற்றும் சங்கரநேத்ரலயா கண்மருத்துவமனையுடன்   இணைந்து, சென்ற ஞாயிற்றுக்கிழமை(24-09-2017) அன்று சென்னை மண்ணடியில் உள்ள மியாசி மேனிலைப்பள்ளியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.

IMG_20170924_103745-650x450

இம்முகாமில் பொது மருத்துவம், இரத்த அழுத்தம், சர்க்கரை, கண், பல், ஈசிஜி மற்றும் எக்கோ பரிசோதனைகள் இடம்பெற்றிருந்தன.

இதில் பொதுமருத்துவப் பிரிவில் 125 பேரும் கண் பரிசோதனையில் 127 பேரும் சிகிச்சை பெற்றனர். மேலும் கண்புரை அறுவை சிகிச்சைக்காக 24 பேர் தேர்வுசெய்யப்பட்டு அதில் 16 பேரை முகாம் நடந்த நேரத்திலேயே சங்கரநேத்ராலயா மருத்துவமனைக்கு அறுவை சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.  பல்மருத்துவப் பிரிவில் 36 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.  அதைப் போன்றே ஈசிஜி பிரிவிலும் எக்கோ பிரிவிலும் பலர் பரிசோதிக்கப்பட்டனர். எக்கோ பரிசோதனையில் 3 பேருக்கு பாஸிடிவ் என அறியப்பட்டதால் அவர்களுக்கு மேற்கொண்டு இலவசமாக ஆஞ்சியோ செய்வதற்கு பில்ராத் மருத்துவமனை ஒப்புதல் அளித்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.

IMG_20170924_100250-650x450-650x450

முகாமில் பரிசோதிக்கப்பட்டவர்களுக்காக இலவச மருந்து மாத்திரைகள் கொடுக்கப்பட்டன. மேலும் குடும்ப வருமானம் குறைவாக உள்ளோருக்கு இலவச மூக்கு கண்ணாடிகளும் வழங்கப்பட்டன. 
KCGC உறுப்பினர்களான M.M.அஹ்மது, பல்லாக் சுலைமான்,நெட்காம் புஹாரி, அட்வகேட் ஹசன் பைசல், ஹசன் நெய்னா, கிதுரு முஹைதீன், சொளுக்கு முஹம்மது நூஹ்
மற்றும் எஸ்.கே. ஷமீமுல் இஸ்லாம் ஆகியோர் இம்முகாமிற்கான  அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர். 

IMG-20170924-WA0105

இம்மருத்துவ முகாமில் மிகவும் சிறப்பான முறையில் சிகிச்சையளித்த பில்ராத் மற்றும் சங்கரனேத்ராலயா மருத்துவமனை அங்கத்தினர்கள், பல் பரிசோதனையளித்த மருத்துவர் மேலும் மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற இடமளித்த மியாசி மேனிலைப்பள்ளி நிர்வாகத்தார் மற்றும் பொருளுதவி செய்த அனைவருக்கும் கேசிஜிசி நிர்வாகத்தார் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றனர். 
மாண்பாளனாகிய அல்லாஹ் நோய் நொடியில்லா சமூகம் உருவாகவும் ஆரோக்கிய வாழ்வைப் பற்றிய சரியான புரிதலுடன் சீரான வாழ்வு வாழவும் நம்மனைவருக்கும் உதவி செய்தருள்வானாக, ஆமீன். 

தகவல்: கேசிஜிசி சார்பாக,

எஸ்.கே. ஷமீமுல் இஸ்லாம்.

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com