بسم الله الرحمن الرحيم
Saturday 15th December 2018 | 06 ரபீஉல் ஆஹிர் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம்!அச்சிடுகமின்-அஞ்சல்
27 செப்டம்பர் 2017 மாலை 12:37
வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம் 19.09.17 செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இரண்டாமாண்டு வணிகவியல் மாணவி M.S. பாத்திமா முனவரா கிராத் ஓத, தமிழ்த்தாய் வாழ்த்துடன் கூட்டம் ஆரம்பமானது. கல்லூரியின் நிறுவனர் தலைவர் அல்ஹாஜ் வாவு S. செய்யது அப்துர் ரஹ்மான் மற்றும் கல்லூரியின் துணைச்செயலர் ஹாஜி ஹாபிஸ் வாவு S.A.R. அஹமது இஸ்ஹாக் ஆலிம் M.A., Azhari (Egypt), முன்னிலை வகித்தனர். 
தமிழ்த்துறை உதவிப் பேராசிரியரும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் ஒருங்கிணைப்பாளருமான திருமதி சு. ஏஞ்சல் லதா M.A., M.Phil., SET. வரவேற்புரை வழங்கினார். கல்லூரியின் செயல்பாடுகளை ஹாஜி W.M.M. மொகுதஸீம் B.A., (CS), பெற்றோருக்கு எடுத்துக் கூறினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் திருமதி ஜெ. எல்லோரா M.Com., M.Phil., Ph.D. மாணவியர் ஏட்டுக் கல்வியோடு தொழிற்கல்வியும், பண்பாடும் பெற்று முழு ஆளுமை திறன் உள்ளவர்களாக வெளி வரவேண்டும் என்று எடுத்துக் கூறினார்.
ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர் திரு. சிவலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பெற்றோர் ஆசிரியர் மாணவர்களுக்கிடையே பகடிவதை (Ragging) பற்றிய விழிப்புணர்வு செல்போன் கலாச்சாரத்தின் சீரழிவுகள் போன்ற செய்திகளை எடுத்துக்கூறினார். ஆறுமுகநேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருமதி. சாந்திராணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மகளிருக்கான சிறப்புச் செய்திகளை கூறினார். தொடர்ந்து பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்லூரி நிர்வாக உறுப்பினர்களுக்கிடையேயான கலந்துரையாடல் நடைபெற்றது. 
இளங்கலை தமிழ், ஆங்கிலம், வணிகவியல், வணிக செயலாற்றியல், முதுகலை ஆங்கிலம் ஆகிய துறை சார்ந்த மாணவியரின் பெற்றோர்களுக்கான கூட்டம் முதல் அமர்விலும் பொருளியல், தகவல் தொழில்நுட்பம், கணிப்பொறியியல், கணிதவியல், இயற்பியல், முதுகலை கணிதவியல் ஆகிய துறை சார்ந்த மாணவியரின் பெற்றோருக்கான கூட்டம் இரண்டாம் அமர்விலும் நடைபெற்றது. பெற்றோர் மாணவியரின் வகுப்பாசிரியரைச் சந்தித்து மாணவியர் இடைத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், வருகை பதிவு பற்றிய விவரங்களை அறிந்துகொண்டனர்.
 
இயற்பியல் துறைத்தலைவரும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் உறுப்பினருமான திருமதி S. வசுமதி M.Sc., M.Phil., நன்றியுரை வழங்கினார். மூன்றாமாண்டு ஆங்கில இலக்கிய மாணவி S. செய்யது அகமது பாத்திமா துஆ ஓத நாட்டுப்பண்ணுடன் கூட்டம் இனிதே நடைபெற்றது.

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com