அரசு பொது நூலகத்துக்கு காட்சிப்படத்திரை (screen for projector) அன்பளிப்பு!!! திரையிடல் நிகழ்வுகளுக்காக “எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு” அமைப்பு வழங்கியது!!!அச்சிடுக
01 அக்டோபர் 2017 மாலை 02:16

எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு அமைப்பின் சார்பில் 10.09.2017 ஞாயிற்றுக்கிழமையன்று, காயல்பட்டினம் பேருந்து நிலைய வளாகத்தில் அமைந்துள்ள அரசு பொது நூலகத்துக்கு – மாவட்ட நூலக அலுவலர் திரு. ராம் சங்கர் முன்னிலையில் - ஒரு பெரிய அளவு காட்சிப்படத்திரை (screen for projector) அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இது குறித்து, அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:- 

சமூகத்தின் பல்வேறு தளங்களிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் முனைப்போடு – நூலாய்வு, திரையிடல் & விவாத அரங்குகள் போன்ற நிகழ்வுகளின் மூலம், நமதூர் மக்களிடம் புதிய / மாற்று சிந்தனையை கொண்டு செல்லும் முன்னோடி தனித்த சிந்தனைத்தளமாக “எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு” விளங்குகிறது. 

அரசு சார்ந்த திட்டங்களுக்கும் வசதிகளுக்கும் முன்னுரிமை வழங்கும் நோக்கோடு, எழுத்து மேடை மையத்தின் நிகழ்ச்சிகளை நமதூரின் அரசு பொது நூலகத்தில் நடத்திட வேண்டி, இவ்வமைப்பின் சார்பில் இதுகாலம் வரை பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட நிகழ்வுகளின் மீளாய்வு அறிக்கையை - நூலகர் ஜனாப் அ. முஜீப் அவர்களின் வழியாக - மாவட்ட நூலக அலுவலரிடம் வழங்கி, முறைப்படி அனுமதி பெறப்பட்டது. 

அந்த வகையில், இவ்வமைப்பின் 18-வது நிகழ்வாக, காயல்பட்டினம் அரசு பொது நூலகத்துடன் இணைந்து - இரு வேறு ஆங்கிலப் படங்கள் (Modern Times & The Man Who Planted Trees), 10.09.2017 ஞாயிற்றுக்கிழமையன்று, அங்கு திரையிடப்பட்டன. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மாவட்ட நூலக அலுவலர் திரு. ராம் சங்கர் அவர்கள் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது. 

இத்தகைய நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாக நூலகத்தில் நடத்திடும் பொருட்டு, இவ்வமைப்பின் சார்பில் ஒரு பெரிய அளவு காட்சிப்படத்திரை (screen for projector) அன்பளிப்பாக வழங்கப்பட்டது. 

மாவட்ட நூலக அலுவலர் முன்னிலையில் நிகழ்ந்த இந்த அன்பளிப்பு விழாவில், எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு அமைப்பின் நிர்வாகக் குழு உறுப்பினர்களுடன், வாசகர் வட்ட உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 

நமது அமைப்பு அதற்கேயான ஆக பொருத்தமான நிகழ்விடங்களையும் (பள்ளி & நூலகம்) பயனாளர்களையும் (மாணவர்கள் & நூலக வாசகர்கள்) நோக்கி நகர்வது குறிப்பிடத்தக்கது. 

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஒளிப்படங்கள்:
அ.ர.ஹபீப் இப்றாஹீம்
முஜாஹித் அலி 

செய்தியாக்கம்:
சாளை பஷீர் ஆரிஃப்
அ.ர.ஹபீப் இப்றாஹீம்

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh