بسم الله الرحمن الرحيم
Sunday 16th June 2019 | 12 ஷவ்வால் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

 • Google Bookmarks
 • Twitter
 • Windows Live
 • Facebook
 • MySpace
 • deli.cio.us
 • Digg
 • Newsvine
 • reddit
 • StumbleUpon
 • Yahoo! Bookmarks
 • Yigg
சஊதி அரபிய்யா ரியாத் காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம் வரும் நவம்பர் மாதம் 03ஆம் தேதி நடைபெறுகிறது!அச்சிடுகமின்-அஞ்சல்
10 அக்டோபர் 2017 மாலை 06:39

55-வது பொதுக்குழு இஸ்திராஹாவில் குடும்ப சங்கம நிகழ்ச்சியாக நவ. 3ம் தேதி நடத்த முடிவு.

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால் எமது ரியாத் காயல் நல மன்றத்தின் 62-வது செயற்குழு கூட்டம் கடந்த 06.10.2017 வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகைக்குப் பின் பத்ஹா ரயில் ரோட்டில் உள்ள சகோதரர் நயீமுல்லாஹ் அவர்களின் இல்லத்தில் சகோதரர் இஸ்மத் நவ்ஃபழ் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.

IMG-20171006-WA0055

ஆரம்பமாக மதிய உணவு அனைவருக்கும் பரிமாறப்பட்டது, சகோதரர் சூஃபி அவர்கள் கூட்ட நிகழ்வின் சாரம்சத்தை வாசித்த பின் ஹாஃபிழ் ஜயித் மிஸ்கீன் அவர்கள் இறைமறை ஓதி கூட்டத்தை துவக்கி வைக்க, அதனை தொடர்ந்து சகோதரர் யாசிர் தாஜுதீன் அவர்கள் கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்றார்.

IMG-20171006-WA0075

மன்ற நல உதவிகளுக்கான நிதி ஒதுக்கீடு:

நகரில் இருந்து பெறப்பட்ட மருத்துவ கடிதங்கள், கல்வி/சிறுதொழில் விண்ணப்பங்களை வாசித்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு , அவர்கள் சரீர சுகம் பெற பிராதிக்கப்பட்டது. நிதி ஒதுக்கீட்டின் சாராம்சத்தை சகோதரர் வாவு கிதுரு முஹம்மது அவர்கள் வாசித்தார்.

55-வது பொதுக்குழு கூட்டம்:

மன்றத்தின் 55-வது பொதுக்குழு கூட்டத்தை அடுத்த மாதம் (நவம்பர்) 3ம் தேதி நடத்த செயற்குழுவில் ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த ஆண்டு போல இஸ்திராஹாவில் குளிர்கால கூட்டம் மற்றும் குடும்ப சங்கம நிகழ்ச்சியாக நடத்த தீர்மானிக்கப்பட்டது. பொதுகுழு சம்பந்தமான மேலும் விபரங்கள் விரைவில் அனைத்து பொதுகுழு உறுப்பினர்களுக்கும் மின்னஞ்சல், குறுஞ்செய்தி மற்றும் வாட்சப் மூலம் தெரிவிக்கப்படும் இன்ஷா அல்லாஹ்.

பெண்கள் மற்றும் சிறார்கள் நிதி (Women And Kids Fund – WAKF):

பெண்கள் மற்றும் சிறுவர்/சிறுமியர்களும் மன்ற நல உதவிகளில் தங்கள் பங்களிப்பை வழங்கிடும் முகமாக அவர்களுக்கு மன்றத்தின் மூலம் வழங்கப்பட்ட உண்டியலின் நிதியை பொதுகுழுவில் சமர்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

IMG-20171006-WA0058

பார்வையாளர்கள் கருத்து:

இக்கூட்டத்தின் பார்வையாளர்களாக கலந்து கொண்ட சகோதரர் ஹாஜியார் ஸாலிஹ், சகோதரர் சதக்கத்துல்லாஹ், சகோ. இக்பால் ,ஹாஃபிழ் ஜாயித் மிஸ்கீன் மற்றும் சகோதர் உமர் ஃபாஸி ஆகியோர் தங்களை கூட்டத்திற்கு அழைத்ததிற்கு நன்றி கூறி,தங்களுடைய கருத்துக்களையும் மேலான ஆலோசனைகளையும் பகிர்ந்துக் கொண்டார்கள்.

IMG-20171006-WA0056

இக்கூட்டம் நடத்த இடம் தந்த எம் மன்றத்தின் ஆலோசனைக்குழு உறுப்பினர் சகோதரர் நயீமுல்லாஹ் அவர்கள் தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ள மகிழ்ச்சியான செய்தியை எம்மோடு பகிர்ந்து கொண்டதோடு, செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் காயல் கலரி கறியுடன் விருந்தும், மாலை தேனீர் மற்றும் சிற்றுண்டி வழங்கினார். குழந்தையின் நல்வாழ்வுக்காக துஆ செய்து வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டது.

இறுதியாக சகோதரர் V.M.T. அப்துல்லாஹ் அவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி நவில ஹாஃபிழ் சதக் ஷமீல் அவர்களின் துஆவோடு குழுப்படம் எடுத்த பின்னர் இக்கூட்டம் இனிதே நிறைவுற்றது, அல்ஹம்துலில்லாஹ்.

 

செய்தி :தைக்கா சாஹிப்  

 

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com