بسم الله الرحمن الرحيم
Tuesday 21st November 2017 | 02 ரபீஉல் அவ்வல் 1439AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
அனுமதிக்கப்படாத மனைப்பிரிவுகளை (UNAPPROVED LAYOUT) வரன்முறைப்படுத்துவது குறித்து தமிழக அரசு புதிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது! கால அவகாசம், மே 2018 வரை நீட்டிப்பு!!அச்சிடுகமின்-அஞ்சல்
14 அக்டோபர் 2017 மாலை 12:19

அனுமதிக்கப்படாத மனைப்பிரிவுகளை (UNAPPROVED LAYOUT) வரன்முறைப்படுத்துவது குறித்து தமிழக அரசு புதிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது! கால அவகாசம், மே 2018 வரை நீட்டிப்பு!!

அன்புடையீர்,

இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!

அனுமதிக்கப்படாத மனைப்பிரிவுகளை (UNAPPROVED LAYOUT) - வரன்முறைப்படுத்துவது (REGULARISATION) குறித்து தமிழக அரசு, மே மாதம் வெளியிட்ட அறிவிப்பு தற்போது மாற்றப்பட்டு - புதிய விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

58df4793-deb6-4b63-a158-8f28745d0ba6

15327cfd-51e9-4bdf-95d8-d34f8468a34f

9891380c-394f-4a1c-8caa-4df75823f9ca

3e3b6722-a0ac-4e9e-b073-f2c9dc022c99

3a7a19d1-0200-47ec-aaab-310d65f8eaad

முழு விபரம் இணைக்கப்பட்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்கள் கீழே வழங்கப்படுகின்றன:

(1) ஒரு மனைப்பிரிவில் (LAY OUT) - குறைந்தது ஒரு மனை (PLOT) - 20-10-2016 தேதிக்கு முன்னர் விற்கப்பட்டிருந்தால், தற்போது அரசு அறிவித்துள்ள - முறைப்படுத்தும் திட்டத்தை (REGULARISATION SCHEME) பயன்படுத்தலாம்

(2) இந்த திட்டப்படி முறைப்படுத்த கால அவகாசம், மே 3, 2018 வரை நீட்டிக்கப்படுகிறது (LAST DATE)

(3) முறைப்படுத்த விண்ணப்பிக்கப்படும் மனைப்பிரிவின் சாலை அளவு (ROAD WIDTH) - "உள்ளது உள்ளபடி" ("as is basis") முறைப்படுத்தப்படும்

(4) இந்த திட்டப்படி, தங்கள் மனையை முறைப்படுத்த விண்ணப்பம் செய்யும் - தனி நபர்கள், Open Space Reserve (OSR) விதிகளில் இருந்து முழு விலக்கு பெறுகிறார்கள்

(5) 20-10-2016 தேதிக்கு முன்னர் ஒரு மனைக்கூட விற்கப்படாத மனைப்பிரிவுகளில், எஞ்சிய மனைகளை முறைப்படுத்த விண்ணப்பம் செய்யும் மனைப்பிரிவு மேம்பாட்டாளர்கள் (PROMOTERS), விற்கப்படாத மனைப்பிரிவில் 10 சதவீதம் இடத்தை, உள்ளாட்சி மன்றங்களுக்கு, OSR வகைக்காக தானமாக வழங்கவேண்டும். இவ்வாறு தானமாக வழங்கப்படும் இடத்தின் பரப்பளவு குறித்த விதிமுறைகள் தளர்த்தப்படுகின்றன.

(6) சென்னையில் 5.8.1975 தேதிக்கு முன்னர் வாங்கப்பட்ட மனைகளும், சென்னைக்கு வெளியே ஊரக பகுதிகளில் 29.11.1972 தேதிக்கு முன்னர் வாங்கப்பட்ட மனைகளும், சென்னைக்கு வெளியே நகர பகுதிகளில் 1.1.1980 தேதிக்கு முன்னர் வாங்கப்பட்ட மனைகளும் - அங்கீகரிக்கப்பட்டதாக கருதப்படும் (DEEMED APPROVED)

(7) மனைகளை முறைப்படுத்த விண்ணப்பம் செய்வோர் - மனை ஒன்றுக்கு, 500 ரூபாய் - கூர்ந்தாய்வுக்கட்டணமாக (SCRUTINY FEE) செலுத்தவேண்டும். மேலும் - வளர்ச்சிக்கட்டணம் (DEVELOPMENT FEE) மற்றும் வரன்முறைக்கட்டணமாக (REGULARISATION FEE) -

/// மாநகராட்சி பகுதியில் ஒரு சதுர மீட்டருக்கு ரூபாய் 600 என்றும்,

/// சிறப்பு நிலை மற்றும் தேர்வு நிலை நகராட்சியில் ஒரு சதுர மீட்டருக்கு ரூபாய் 310 என்றும்,

/// நிலை 1 மற்றும் நிலை 2 நகராட்சியில் ஒரு சதுர மீட்டருக்கு ரூபாய் 210 என்றும்,

/// பேரூராட்சி பகுதியில் ஒரு சதுர மீட்டருக்கு ரூபாய் 105 என்றும்,

/// கிராம ஊராட்சி பகுதியில் ஒரு சதுர மீட்டருக்கு ரூபாய் 55 என்றும்,

புதிதாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

காயல்பட்டினம் இரண்டாம் நிலை நகராட்சியாகும்.

ஒரு சதுர மீட்டர் என்பது சுமார் 10.76 சதுர அடி ஆகும்.

இவண்,

நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.

[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]

[பதிவு: அக்டோபர் 14, 2017; 12:00 pm]

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com