بسم الله الرحمن الرحيم
Tuesday 21st November 2017 | 02 ரபீஉல் அவ்வல் 1439AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
நகரில் வெட்டும் ஒரு மரத்திற்குப் பகரமாக 20 மரங்களை நட்டுப் பராமரிக்க, அரசுக்கு “நடப்பது என்ன?” குழுமம் கோரிக்கை!அச்சிடுகமின்-அஞ்சல்
09 நவம்பர் 2017 மாலை 12:07

காயல்பட்டினம் கீழ சித்தன் தெரு, நெய்னார் தெரு ஆகிய பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் மரங்களை அகற்றி ஏலம் விட அரசு முடிவு செய்துள்ள நிலையில், வெட்டப்படும் ஒரு மரத்திற்குப் பகரமாக அப்பகுதிகளில் 20 மரங்களை நட்டுப் பராமரிக்க, அரசுக்கு “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் கோரிக்கை வைத்துள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:- 

பொது மக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் இருந்த கீழ சித்தன் தெரு வேப்பமரம் ஒன்றை அகற்றிட - கடந்த ஜூலை மாதம், நடப்பது என்ன? குழுமம், வருவாய் கோட்டாட்சியர் (திருச்செந்தூர்) இடம் - மனு கொடுத்திருந்தது. 

அதன் அடிப்படையில், அந்த மரத்தையும், நெய்னார் தெருவில் ஆபத்து விளைவிக்கும் வகையில் இருந்த மற்றொரு மரத்தையும் அப்புறப்படுத்த - கடந்த வாரம், திருச்செந்தூர் வருவாய்த்துறை கோட்டாட்சியர், ஆணை பிறப்பித்துள்ளார். 

மரங்கள் - நம் சுற்றுச்சூழலில் ஒரு இன்றியமையாத பங்கு வகிக்கின்றன என்பது அனைவரும் அறிந்தது. ஒரு மரம் அப்புறப்படுத்தப்படும் போது அதற்கு பதிலாக 10 மரங்கள் நடவேண்டும் என்ற வழிமுறை உள்ளது. இதனை - தேசிய பசுமை தீர்ப்பாயமும், தனது தீர்ப்புகளில் வலியுறுத்தியுள்ளது. 

எனவே - தற்போது நகரில் அப்புறப்படுத்தப்படவுள்ள 2 மரங்களுக்கு பதிலாக 20 மரங்கள், அப்புறப்படுத்தப்படும் இடங்கள் உட்பட அதற்கு அருகாமை இடங்களிலும் நடப்படவேண்டும் என்ற கோரிக்கை வைத்து - வருவாய் கோட்டாட்சியர் (திருச்செந்தூர்), வட்டாச்சியர் (திருச்செந்தூர்), ஆணையர் (காயல்பட்டினம் நகராட்சி) மற்றும் கிராம நிர்வாக அதிகாரி (காயல்பட்டினம் தென் பாக கிராமம்) ஆகியோரிடம் - இன்று நடப்பது என்ன? குழுமம் சார்பாக நன்றி கடிதம் கொடுக்கப்பட்டது. 

மேலும் - அவ்வாறு மரங்கள் நடவும், நட்ட மரங்களை பராமரிக்கவும் - நடப்பது என்ன? குழுமம் - ஏற்பாடு செய்யும் என்றும் அவர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இவண், 
நிர்வாகிகள், 
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம். 
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்] 

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com