காட்சிப் பொருளான நகராட்சி குடிநீர்த் தொட்டிகள்: 7 நாட்களுக்குள் வரைமுறைப்படுத்தவில்லையெனில் உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்தில் புகார் பதிவு செய்யப்போவதாக “நடப்பது என்ன?” அறிவிப்பு! | ![]() | ![]() |
20 நவம்பர் 2017 காலை 11:18 |
காயல்பட்டினத்தில் பொது இடங்களில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டுள்ள குடிநீர்த் தொட்டிகள், முறையாக சுத்தம் செய்யப்படாமலும், தண்ணீர் நிரப்பப்படாமலும் காட்சிப் பொருளாகிவிட்டதாகவும், 7 நாட்களுக்குள் வரைமுறைப்படுத்தவில்லையெனில் உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்தில் புகார் பதிவு செய்யப்போவதாகவும் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் அறிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
இது சம்பந்தமாக பல மாதங்களாக, ஆணையர் உட்பட பல்வேறு அதிகாரிகளிடமும், பல தருணங்களிலும் புகார்கள் தெரிவிக்கப்பட்டு முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இறுதியாக - கடந்த அக்டோபர் 30 அன்று இது சம்பந்தமான புகார், மாவட்ட ஆட்சியரிடமும், அதன் நகல் - தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்களின் தணிக்கை துறையிடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. அந்த மனுவில் - தொட்டியினை முறையாக சுத்தம் செய்து, குடிநீர் நிரப்பிட கோரியும், அவ்வாறு நகராட்சியினால் செய்ய முடியவில்லையென்றால் - அந்த தொட்டிகளை ஏலம் விட்டு, இழப்பினை நகராட்சி அதிகாரிகள் ஈடுசெய்ய உத்தரவிடவும் கோரப்பட்டிருந்தது. காயல்பட்டினம் நகராட்சி சார்பாக அந்த மனுவிற்கு வழங்கப்பட்டுள்ள பதிலில், மூன்று தினங்களுக்கு ஒரு முறை தொட்டியை சுத்தம் செய்து குடிநீர் நிரப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உண்மைக்கு புறம்பான தகவல் ஆகும். நகராட்சி தொட்டிகள் சுத்தம் செய்யப்படுவதே இல்லை; பல நாட்களாக குடிநீர் தொட்டிகள் காலியாக தான் உள்ளன. பலமுறை நினைவுபடுத்தினாலும், குடிநீர் நிரப்பப்படுவதில்லை. பல ஆயிரம் ரூபாய் செலவில் தொட்டிகளை நிறுவ ஆர்வம் காண்பித்த காயல்பட்டினம் நகராட்சி, மக்களுக்கு பயனளிக்க குடிநீர் நிரப்ப எவ்வித ஆர்வமும் காண்பிக்கவில்லை. எனவே - நகராட்சியின் உண்மைக்கு புறம்பான தகவலுக்கு ஆட்சேபனை தெரிவித்தும், காயல்பட்டினம் நகராட்சி சார்பாக, ஒவ்வொரு தொட்டியின் அடியிலும், கருப்பு பலகை நிறுவி - அதில், கடைசியாக சுத்தம் செய்யப்பட தினம், கடைசியாக குடிநீர் நிரப்பப்பட்ட தினம் என எழுதிட உத்தரவிட கோரியும், அவ்வாறு நகராட்சியினால் செய்யமுடியாது என்றால், மக்களுக்கு எவ்வித பயனுமின்றி உள்ள குடிநீர் தொட்டிகளை, ஏலம் விட்டு - அதன் தொகையை நகராட்சி பொது நிதிக்கு மீண்டும் கொண்டுவரவும், அதனால் ஏற்பட்ட நிதி இழப்பினை ஆணையர் உட்பட அனைத்து அதிகாரிகளும் ஈடுகட்ட, உள்ளாட்சிமன்றங்களின் தணிக்கைத்துறைக்கு பரிந்துரை செய்யவும் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு வழங்கப்பட்டது. மேலும் - ஒரு வாரத்திற்குள், இக்குறையினை தெளிவான முறையில் தீர்க்கவில்லை என்றால் - தமிழ் நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்தில் புகார் பதிவு செய்ய நடப்பது என்ன? குழுமம் முடிவுசெய்துள்ளது. இவண், [பதிவு: நவம்பர் 13, 2017; 7:30 pm] இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Add commentகாயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும். |
சமீபத்திய கட்டுரைகள்
![]() | பிப் 14ஆம்தேதி . காதலர் தினம்..? ஓர் இஸ்லாமிய பார்வை!! |
![]() | எறும்பின் குற்றம்..! கட்டுரை!! |
![]() | ஒவ்வொருவரும் கண்காணிக்கப்படுகிறோம்! கட்டுரை!! |
![]() | இன்று போதை ஒழிப்பு தினம்! போதை என்னும் அழிவுப்பாதை! கட்டுரை!! |
![]() | வெயிலைச் சமாளிப்பது எப்படி? கட்டுரை!! |
ஏகத்துவம்
![]() | அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை,அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்! |
![]() | "வெள்ளை வெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்கிறேன்! அதன் இரவும் பகலைப் போன்றது!! (நபிமொழி) |