بسم الله الرحمن الرحيم
Tuesday 16th October 2018 | 05 ஸஃபர் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
சிங்கித்துறை மீன்பிடி தள வழக்கு: அறிக்கை சமர்ப்பிக்க கூடுதல் கால அவகாசம் கோரியது மாசு கட்டுப்பாட்டு வாரியம்! கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்தது ‘மெகா’!! டிச. 08க்கு வழக்கு ஒத்திவைப்பு!!!அச்சிடுகமின்-அஞ்சல்
22 நவம்பர் 2017 காலை 11:02

காயல்பட்டினம் சிங்கித்துறை (கற்புடையார் பள்ளி வட்டம்) மீன்பிடி தள வழக்கில், நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க – தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூடுதல் கால அவகாசம் கோரியுள்ளது. வழக்கு தொடர்ந்த ‘மெகா’ அமைப்பு அது தொடர்பான கூடுதல் ஆவணங்களை சமர்ப்பித்துள்ளது. டிசம்பர் 08ஆம் நாளுக்கு வழக்கை நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:- 

கடற்கரை பூங்காவிற்கு வடக்கே, சிங்கித்துறை (கற்புடையார் பள்ளி வட்டம்) பகுதியில் - மீன்வளத்துறை மூலமாக மீன்பிடி தளம் - முறையான CRZ அனுமதிபெறப்படாமல் கட்டப்பட்டு வருகிறது. மேலும் - இத்திட்டத்தின் ஓர் அங்கமாக - கான்க்ரீட் சாலை, தடை செய்யப்பட்டுள்ள உயர் அலை எல்லை (HTL) - குறைந்த அலை எல்லை (LTL) பகுதிகளுக்கு இடையில் போடப்பட்டுள்ளது. 

இது குறித்து - மீன்வளத்துறை உட்பட சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளுக்கும், நடப்பது என்ன? குழுமம் சார்பாக மனுக்கள் வழங்கப்பட்டதை அடுத்து - சாலைப்பணிகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன. 

தடை செய்யப்பட்ட இடத்தில், விதிகளை மீறி அமைக்கப்பட்டுள்ள சாலையை அப்புறப்படுத்தவும், அனுமதியில்லாமல் கட்டப்பட்டுள்ள கட்டுமானங்களை அப்புறப்படுத்த கோரியும், விதிமீறி பணிகளை மேற்கொண்ட அதிகாரிகள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க கோரியும் - தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் சென்னை கிளையில் - நடப்பது என்ன? குழுமத்தின் ஒருங்கிணைப்பாளரும், மக்கள் உரிமை நிலைநாட்டல் & வழிகாட்டு அமைப்பின் (Mass Empowerment and Guidance Association; MEGA) தலைவருமான பி.எம்.ஏ.சதக்கத்துல்லாஹ் தொடர்ந்த வழக்கு - ஆகஸ்ட் 11 அன்று நீதிபதி திரு.ஜோதிமணி மற்றும் நிபுணர் உறுப்பினர் திரு பி.எஸ்.ராவ் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. 

நடப்பது என்ன? சார்பாக வழக்கறிஞர்கள் யோகேஸ்வரன் மற்றும் நேஹா மிரியம் குரியன் ஆகியோர் ஆஜராகினர். 

அப்போது விபரங்களை கேட்டறிந்த நீதிபதி ஜோதிமணி - புதிதாக எவ்வித பணிகளையும் செய்யக்கூடாது என இடைக்காலத்தடை (STATUS QUO) வழங்கினார். மேலும் - மேற்கொள்ளப்பட்ட பணிகளின் சட்டப்பூர்வ நிலை குறித்து (STATUS REPORT) - வழக்கு அடுத்து விசாரணைக்கு வரும்போது - அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிட்டிருந்தார். 

அவ்வழக்கு மீண்டும் செப்டம்பர் 20 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது - தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் திருமதி யாஸ்மீன் அலி - செப்டம்பர் 19 அன்று, சிங்கித்துறை பகுதியில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் ஆய்வுகள் மேற்கொண்டதாகவும், அது குறித்த அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என்றும் கோரினார். அதனை தொடர்ந்து, அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கி, நவம்பர் 20 தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

ஒத்திவைக்கப்பட்ட வழக்கு இன்று (நவம்பர் 20) மீண்டும் விசாரணைக்கு, நீதிபதி எம்.எஸ்.நம்பியார் முன்னர் வந்தது. (நீதிபதி பி.ஜோதிமணி கடந்த மாதம் ஓய்வுபெற்றார்; நிபுணர் உறுப்பினர் பேராசிரியர் பி.எஸ்.ராவ் இம்மாதம் ஓய்வு பெற்றார்). 

அப்போது மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் - கூடுதல் கால அவகாசம் கோரினார். ஆய்வு செய்து இரண்டு மாதங்கள் ஆகியும், அறிக்கை தாக்கல் செய்யாமல் ஏன் கூடுதல் கால அவகாசம் கேட்கிறீர்கள் என நீதிபதி வினவினார். அடுத்த விசாரணைக்கு முன்னர் கண்டிப்பாக அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என கூறி, வழக்கினை டிசம்பர் 8 தேதிக்கு நீதிபதி எம்.எஸ்.நம்பியார் ஒத்திவைத்தார். 

இன்று - மனுதாரரான நடப்பது என்ன? குழுமத்தின் ஒருங்கிணைப்பாளரும், மக்கள் உரிமை நிலைநாட்டல் & வழிகாட்டு அமைப்பின் (Mass Empowerment and Guidance Association; MEGA) தலைவருமான பி.எம்.ஏ.சதக்கத்துல்லாஹ் சார்பில் - கூடுதல் ஆவணங்கள், தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 

இவண், 
நிர்வாகிகள், 
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம். 
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்] 

[பதிவு: நவம்பர் 20, 2017; 4:45 pm] 
[#NEPR/2017112001] 

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com