بسم الله الرحمن الرحيم
Saturday 15th December 2018 | 06 ரபீஉல் ஆஹிர் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
பழுதடைந்துள்ள அல் ஜாமியுல் அஜ்ஹர் சந்திப்பு பகுதியை நேரில் பார்வையிட வருவதாக - நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர், நடப்பது என்ன? குழுமத்திடம் உறுதி!*அச்சிடுகமின்-அஞ்சல்
30 நவம்பர் 2017 மாலை 03:15
பழுதடைந்துள்ள அல் ஜாமியுல் அஜ்ஹர்  சந்திப்பு பகுதியை  நேரில் பார்வையிட வருவதாக  - நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர், நடப்பது என்ன? குழுமத்திடம் உறுதி!*
அன்புடையீர்,
_இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!_
*காயல்பட்டினம் வழியாக செல்லும் மாநில நெடுஞ்சாலை (#176), பல இடங்களில் பழுதடைந்துள்ளது குறித்து கடந்த செப்டம்பர் மாதம், மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து அக்டோபர் 30 க்குள் - பழுதுகள்  புனரமைக்கப்படும் என - தூத்துக்குடி நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர், நடப்பது என்ன? குழுமத்திடம் தெரிவித்திருந்தார்.*
கடந்த சில தினங்களுக்கு முன்பு, ஹாஜியப்பா பள்ளி அருகே புனரமைக்கும்பணி நடந்தது. *மழை நீர் தேங்கியிருந்த காரணத்தால், அஜ்ஹர் சந்திப்பில் - அடுத்த சில தினங்களில், புனரமைப்பு பணிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.* இருப்பினும் அதனை தொடர்ந்து அப்பணிகள் துவக்கப்படவில்லை. 
நேற்று முதல் - *நகரில் பலத்த மழை துவங்கியுள்ள நிலையில், அப்பகுதியில் நீர் தேங்கி - சிறு, சிறு விபத்துகள் நடந்துள்ளன.*
இது குறித்து - *திருச்செந்தூர் பிரிவு பொறியாளரிடம் வினவியதில் திருப்தியான பதில் வழங்கப்படவில்லை. மழை நீர் தேங்கியிருப்பதால் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை என அவர் தெரிவித்தார். அதனால் தான் - மழை காலத்திற்கு முன்பே, இது குறித்த தகவல் - நெடுஞ்சாலைத்துறைக்கு வழங்கப்பட்டது என்று அவரிடம் தெரிவிக்கப்பட்டது.*
இது சம்பந்தமாக - *தூத்துக்குடி மாவட்ட நெடுஞ்சாலைத்துறை  கோட்டப்பொறியாளர் திரு பாலசுப்ரமணியம் அவர்களை நடப்பது என்ன? குழுமம் தொடர்புக்கொண்டு,  விபரீத நிலையை எடுத்துக்கூறியது. சனிக்கிழமை தான் நேரடியாக காயல்பட்டினம் வந்து  அப்பகுதியை பார்வையிட வருவதாக அவர் உறுதியளித்தார்.*
இவண்,
_நிர்வாகிகள்,_
*நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.*
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்] 
[பதிவு: நவம்பர் 30, 2017; 12:30 pm] 
[#NEPR/2017113003]

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com