بسم الله الرحمن الرحيم
Friday 26th April 2019 | 20 ஷஃபான் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

 • Google Bookmarks
 • Twitter
 • Windows Live
 • Facebook
 • MySpace
 • deli.cio.us
 • Digg
 • Newsvine
 • reddit
 • StumbleUpon
 • Yahoo! Bookmarks
 • Yigg
காயல் குப்பை அரசியல்: பாகம் 1 - திடக்கழிவுகளுக்கான கிடங்கு விஷயத்தில் பரப்பப்படும் பொய்யான தகவல்களுக்கு விரிவான விளக்கம்!*அச்சிடுகமின்-அஞ்சல்
30 நவம்பர் 2017 மாலை 03:50
காயல் குப்பை அரசியல்: பாகம் 1 - திடக்கழிவுகளுக்கான கிடங்கு விஷயத்தில் பரப்பப்படும் பொய்யான தகவல்களுக்கு விரிவான விளக்கம்!*
அன்புடையீர்,
_இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!_
காயல்பட்டினத்தில் உருவாகும் குப்பைகளை கொட்டுவதற்கான இடம் (கிடங்கு) குறித்த விவாதங்கள்  - சுமார் 60 ஆண்டுகளாக நகரில் நடந்துவருகிறது. அந்த விவாதங்கள் எழும் போது எல்லாம், தீர்வுகள் காணப்பட்டு - அப்பிரச்சனைகள் தற்காலிகமாக ஓய்ந்தும் உள்ளன.
கடந்த சில ஆண்டுகளாக மீண்டும் இப்பிரச்சனை, நகரில் விவாதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, சில சமூக ஊடகக்குழுமங்களில், *பப்பரப்பள்ளியில் குப்பைகள் கொட்டுவதற்கு - நடப்பது என்ன? குழுமம் / மெகா அமைப்பு / அந்த அமைப்பை சார்ந்த சிலர் - காரணமென, உண்மைக்கு புறம்பான பிரச்சாரங்களை ஒரு சிலர் செய்து வருகிறார்கள்.*
_இதில் ஏதேனும் உண்மை உள்ளதா?_
_கொம்புத்துறை (கடையக்குடி) பகுதியில் - முன்னாள் நகர்மன்றத்தலைவர் வழங்கிய இடத்தை மாற்று குப்பைக்கிடங்கு இடமாக மாற்ற, அவ்விடத்தில் பயோ காஸ் திட்டம் கொண்டு வர - ஏன் எதிர்ப்புகள் பதிவு செய்யப்பட்டன?_
_இப்பிரச்சனை சம்பந்தமான வழக்குகளின் தற்போதைய நிலை என்ன?_
--- ஆகிய மேற்கண்ட கேள்விகளுக்கான - *விரிவான, ஆதாரங்கள், ஆவணங்கள் அடிப்படையிலான விளக்கங்களை - நடப்பது என்ன? குழுமம், இறைவன் நாடினால் - வெளியிட முடிவு செய்துள்ளது.*
இன்னும் சொல்லப்போனால் - *பப்பரப்பள்ளியில் குப்பைகள் கொட்டுவதை எதிர்த்து, அப்பகுதி மக்கள் சார்பாக - பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர - ஆர்வமூட்டியவர்களில், நடப்பது என்ன? குழும நிர்வாகிகளும் உண்டு.*
மேலும் *அவ்வழக்கிற்கான - கணிசமான நிதி உதவியை, நடப்பது என்ன? குழுமம் நிர்வாகிகளும் செய்துள்ளார்கள்.*
மேலும் - *நடப்பது என்ன? குழுமத்தின் மூத்த நிர்வாகிகள், அப்பகுதியில் வாழக்கூடியவர்கள் கூட. அப்படி இருக்க, தொடர்ந்து அவ்விடத்தில் குப்பைகள் கொட்டப்பட - எவ்வாறு அவர்கள் ஆதரவு தெரிவிப்பார்கள்?*
இது தவிர - *முதற்கட்டமாக, அங்கு கொட்டப்படும் குப்பைகளுக்கு தீமூட்டும் செயலை உடனடியாக நிறுத்த - மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆணையை பெற்றதும் - நடப்பது என்ன? குழுமம் தான்.*
இது குறித்த விளக்கங்கள் அவ்வப்போது பல்வேறு வகைகளில் கடந்த காலங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், *தற்போது பல பாகங்களாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ள விளக்கங்கள் - இப்பிரச்சனையின் அனைத்து அம்சங்களையும் வெளிக்கொண்டுவரும் விதமாக (இறைவன் நாடினால்) அமையும்.*
இவண்,
_நிர்வாகிகள்,_
*நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.*
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்] 
[பதிவு: நவம்பர் 30, 2017; 9:30 am] 
[#NEPR/2017113001]

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com