بسم الله الرحمن الرحيم
Saturday 15th December 2018 | 06 ரபீஉல் ஆஹிர் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
காயல் குப்பை அரசியல்: பாகம் 2 - பப்பரப்பள்ளியில் குப்பைகளை கொட்ட முடிவெடுத்ததற்கும், அதனால் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கும் யார் பொறுப்பு?!*அச்சிடுகமின்-அஞ்சல்
30 நவம்பர் 2017 மாலை 03:52

 

காயல் குப்பை அரசியல்: பாகம் 2 - பப்பரப்பள்ளியில் குப்பைகளை கொட்ட முடிவெடுத்ததற்கும், அதனால் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கும் யார் பொறுப்பு?!*
அன்புடையீர்,
_இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!_
காயல்பட்டினம் நகரில் குப்பைகள் கொட்ட - (ஆவணங்கள் அடிப்படையில்) முதலில் தேர்வு செய்யப்பட்ட இடம் - *அரசுக்கு பாத்தியப்பட்ட, சிவன்கோவில்தெரு அருகில் உள்ள, காயல்பட்டினம் தென்பாக கிராமம்  சர்வே எண்  392/5 ஆகும்*.  இதற்கான தீர்மானம் - அப்போதைய பஞ்சாயத்து தலைவர் ஹாஜி எம்.கே.டி. அபூபக்கர் அவர்கள் முன்னிலையில் நடந்த கூட்டத்தில் - 3.12.1958 அன்று - நிறைவேற்றப்பட்டது. 
எத்தனை காலம் - அங்கு குப்பைகள் கொட்டப்பட்டன என்ற ஆதாரங்கள் இல்லை.  ஆனால் - தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு, *7.5 ஏக்கர் நிலத்தில், 5 ஏக்கர் நிலம் மயானத்திற்கும், 2.5 ஏக்கர் நிலம் குப்பைகள் கொட்டவும் ஒதுக்கப்பட்டது.*
*எப்போது அங்கு குப்பைகள் கொட்டப்படுவது நிறுத்தப்பட்டு, பப்பரப்பள்ளியில் - காயல்பட்டினம் தென்பாக கிராமம்  சர்வே எண்  43/1 இடத்தில் - குப்பைகள் கொட்டப்பட துவங்கியது என்ற தெளிவான  ஆதாரங்களும் இல்லை.*
இருப்பினும் - *கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு (பப்பரப்பள்ளியில்) குப்பை கொட்டப்பட்டு வருகிறது.* நகராட்சி மூலம் - தீர்ப்பாயத்தில் பதிவு செய்யப்பட மனு ஒன்றில் 50 ஆண்டுகள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இன்று, அவதூறான வகையில் குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்படும் - *நடப்பது என்ன? குழுமம் / மெகா நிர்வாகிகளில் பெருவாரியானோர், 392/5 இடம் குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட 1958ஆம் ஆண்டில் பிறக்கக்கூட இல்லை.*
*பப்பரப்பள்ளி பகுதியில் - குப்பைகள் கொட்ட துவங்கும் போது, இன்று அவதூறான வகையில் குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்படும் நடப்பது என்ன? குழுமம் / மெகா நிர்வாகிகளில் பெருவாரியானோர், மாணவப்பருவதில் இருந்திருப்பார்கள்.*
எனவே, *பப்பரப்பள்ளியில் குப்பைகளை கொட்ட முடிவெடுக்கப்பட்டதற்கான பொறுப்பு, யாருடையது?*
|| _கடந்த ஆண்டு துவக்கப்பட்ட நடப்பது என்ன? குழுமத்துடையதா?_
|| _ஆறு ஆண்டுகளுக்கு முன்பு துவக்கப்பட்ட மெகா அமைப்புடையதா?_
|| _ஆறு ஆண்டுகளுக்கு முன்பு பொறுப்பிற்கு வந்த நகர்மன்றத்தலைவர் ஐ.ஆபிதா சேக் உடையதா?_
அல்லது, *25க்கும் மேற்பட்ட  ஆண்டுகளுக்கு முன்பு, அங்கு குப்பைகளை கொட்ட முடிவெடுத்த அப்போதைய பஞ்சாயத்து தலைவர் / உறுப்பினர்கள் உடையதா? அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காத அப்போதைய ஊர் அமைப்புகளுடையதா? பிரமுகர்கள் உடையதா?*
*25 ஆண்டுகளுக்கும் மேலாக - பப்பரப்பள்ளியில்  குப்பைகொட்டப்பட்டு வருவதால், ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு யார் காரணம்?*
*கடந்த ஆண்டு துவக்கப்பட்ட நடப்பது என்ன? குழுமம் காரணமா?*
*ஆறு ஆண்டுகளுக்கு முன்பு துவக்கப்பட்ட மெகா அமைப்பு காரணமா?*
*ஆறு ஆண்டுகளுக்கு முன்பு பொறுப்பிற்கு வந்த நகர்மன்றத்தலைவர் ஐ.ஆபிதா சேக் காரணமா?*
_பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்புவோரே - சற்று சிந்திக்கவும்!_
*பப்பரப்பள்ளியில் தற்போது குப்பைகள் கொட்டப்படுவதற்கும், அதனால் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கும் முழு பொறுப்பு*  - 
_$$$$$$$$ எவ்வித தொலைநோக்கு பார்வையும் இல்லாமல், அங்கு குப்பை கொட்ட முடிவெடுத்த_
_$$$$$$$$ எவ்வித தொலைநோக்கு பார்வையும் இல்லாமல், சுற்றுச்சூழல் பாதிக்கப்படாத வண்ணம் தற்காப்பு ஏற்பாடுகள் (சுற்றுச்சுவர், நிலத்துக்கடியில் பாதுகாப்பு ஏற்பாடுகள்) செய்யாத_ 
_கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக, பஞ்சாயத்து/நகராட்சி தலைவர்களாக அப்பொறுப்பினை அலங்கரித்த தலைவர்கள், உறுப்பினர்கள், அக்காலகட்டத்தில் செயல்புரிந்த அமைப்புகள், அரசியல் பிரமுகர்கள் ஆகியோரையே சாரும்_
IMG-20171130-WA0110
IMG-20171130-WA0111
இந்த _நிதர்சன உண்மையை, கையாலாகதனத்தை, நிர்வாகத் திறமையின்மையை மறைக்க_ - *பல ஆண்டுகளாக பப்பரப்பள்ளியில் குப்பைகள் கொட்டப்படுவதற்கு காரணம் - சில மாதங்கள்/ஆண்டுகளுக்கு முன்பு உருவான நடப்பது என்ன? குழுமம் / மெகா அமைப்பு என அவதூறுகள், ஒரு சிலரால் பரப்பப்படுகிறது.*
*இதனை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்?*
இவண்,
_நிர்வாகிகள்,_
*நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.*
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்] 
[பதிவு: நவம்பர் 30, 2017; 3:00 pm] 
[#NEPR/2017113007]

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com