காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள மருத்துவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க அரசுக்கு பிரேரணை அனுப்பப்பட்டுள்ளது: நடப்பது என்ன? குழுமத்திற்கு DMS பதில்! | ![]() | ![]() |
06 டிசம்பர் 2017 மாலை 09:29 |
_இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!_ *காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு நான்கு மருத்துவர்கள் பொறுப்புக்கு தற்போது அனுமதியுள்ளது (SANCTIONED POSTS)*. இந்த எண்ணிக்கையை அதிகரிக்க கோரி - கடந்த பல மாதங்களாக *நடப்பது என்ன? குழுமம்* அரசிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறது. இது சம்பந்தமாக தமிழக அரசின் _மருத்துவம் மற்றும் ஊரகப் பணிகள் துறை இயக்குநர் (DMS)_ *டாக்டர் M.R.இன்பசேகரன்* - நடப்பது என்ன குழுமத்திற்கு வழங்கியுள்ள பதிலில் - *ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள மருத்துவர்கள் எண்ணிக்கையை (SANCTIONED POSTS)* அதிகரிக்க அரசுக்கு *பிரேரணை (PROPOSAL)* அனுப்பபட்டுள்ளதாகவும், அரசின் அனுமதிக்காக எதிர்பார்த்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதன்படி - தற்போது *காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவர்கள் எண்ணிக்கை 4 இல் இருந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.* ![]() மேலும் - காயல்பட்டினம் அரசு மருத்துவமனையை தாலுகா தகுதி அரசு மருத்துவமனையாக தகுதி உயர்த்த வைக்கப்பட்ட கோரிக்கைக்கு பதில் வழங்கியுள்ள இயக்குனர், *தற்போதைய அரசின் கொள்கைப்படி - நிர்வாகக்காரணங்களுக்காக - ஒரு தாலுகாவிற்கு ஒரு தாலுகா மருத்துவமனை தான் உருவாக்கமுடியும்* என்றும், அந்த அடிப்படையில் திருச்செந்தூர் தாலுகாவில் - தலைமை ஊர் திருச்செந்தூர் என்பதால் - அங்கு தாலுகா மருத்துவமனை உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். *காயல்பட்டினம் அரசு மருத்துவமனை தற்போது தாலுகா மருத்துவமனையாக இல்லாவிட்டாலும், மருத்துவமனை தேவைக்கு ஏற்பவும், பயன்பாட்டுக்கு ஏற்பவும் - வசதிகள் வழங்கப்படுகின்றன என்றும், தற்போது மருத்துவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சி* மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இவண், _நிர்வாகிகள்,_ *நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்*. [மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்] [பதிவு: டிசம்பர் 5, 2017; 3:15 pm] [#NEPR/2017120502] Add commentகாயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும். |
சமீபத்திய கட்டுரைகள்
![]() | பிப் 14ஆம்தேதி . காதலர் தினம்..? ஓர் இஸ்லாமிய பார்வை!! |
![]() | எறும்பின் குற்றம்..! கட்டுரை!! |
![]() | ஒவ்வொருவரும் கண்காணிக்கப்படுகிறோம்! கட்டுரை!! |
![]() | இன்று போதை ஒழிப்பு தினம்! போதை என்னும் அழிவுப்பாதை! கட்டுரை!! |
![]() | வெயிலைச் சமாளிப்பது எப்படி? கட்டுரை!! |
ஏகத்துவம்
![]() | அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை,அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்! |
![]() | "வெள்ளை வெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்கிறேன்! அதன் இரவும் பகலைப் போன்றது!! (நபிமொழி) |