بسم الله الرحمن الرحيم
Saturday 15th December 2018 | 06 ரபீஉல் ஆஹிர் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
புன்னகை மன்றம் ஏற்பாட்டில் அல்அமீன் பள்ளி மாணவர்கள் அரசு நூலகத்தை பார்வையிட்டனர்!அச்சிடுகமின்-அஞ்சல்
16 டிசம்பர் 2017 மாலை 12:18

காயல்பட்டணம் புன்னகை மன்றத்தின் ஒரு புதிய முயற்சி 15/12/17 நேற்று காலையில் நடைபெற்றது.

காயல்பட்டணம் பேருந்து நிலைய வளாகத்திற்குள் தமிழக அரசு பொது நூலகத்துறைக்கு சொந்தமான மாவட்ட நூலகம் செயல்பட்டு வருகிறது.

இதன் பொறுப்பாளராக காயல்பட்டணத்தை சார்ந்த சகோதரர் மூஜீப் அவர்கள் செயல்பட்டு வருகிறார்கள்

இவர் தமிழகத்தின் சிறந்த நூலகர் விருது பெற்றவர.

தூத்துக்குடி மாவட்டத்தில் பெரிய அளவிளான இடம்,வசதி புத்தகங்கள் கொண்ட நூலகமாக விளங்குகிறது.இருந்தாலும் இந்த நூலகத்திற்கும் மாணவர்களுக்கும் இடையே தொடர்பே இல்லாமல் உள்ளது..

25158429_10213494439628678_1827596290096944821_n

மாணவர்கள் இவ்வரிய நூலகத்தை பயன்படுத்தும் வகையில் புன்னகை மன்றம். காயல்பட்டணம் அல்அமீன் பள்ளி நிர்வாகி மற்றும் நூலக பொரு ப்பாளரிடம் அனுமதி பெற்று மாணவ ர்களை நூலகத்திற்கு அழைத்துவர முடிவு செய்தது..

அதன் அடிப்படையில் முதல்கட்டமாக புன்னகை மன்றத்தில் ஏற்பாட்டில் இன்று காலை அல்அமீன் பள்ளி நிர்வாகி புகாரி சார் மற்றும் தலைமை ஆசிரியை சகோதரி அப்ரின் ஆகியோர்களின் தலைமையில் 28 மாணவர்களை மாவட்ட நூலகத்திற்கு அழைத்து வரப்பட்டது.

25348586_10213494443028763_3173058656983386020_n

இதுவரை கண்டிராத நூலகத்தை கண்ட மாணவ மாணவிகள் அசந்து போனார்கள்.. கதை.கார்ட்டூன்.Spoken english என பல புத்தகங்களை ஆர்வமாக படித்தார்கள்.. நூலகத்தை பயன்படுத்தும் விதத்தை பற்றி நூலகர் முஜீப் அவர்கள் விளக்கினார்கள்.

25398963_10213494441908735_3639684597917682721_n

அல்அமீன் பள்ளியில் இருந்து வருகைதந்த மாணவர்கள் அனைவரும் புன்னகை மன்றத்தின் மூலம் நூலகத்தின் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டார்கள்.
நூலகத்தின் வெளியில் வந்து மாணவர்கள் சந்தோசமாக குழுப்படம் எடுத்து கொண்டார்கள். புதிய புதிய விஷயங்களை முன்னெடுத்து செல்லும் புன்னகை மன்றம் காலையிலேயே நடத்திய இந்த நிகழ்வு மிகுந்த மன நிறைவை ஏற்படுத்தியது.

25399014_10213494442788757_5367591492903778208_n

இந்த நிகழ்வு மூலம் வாரம் ஒருமுறை மாணவர்களுக்கு நூலகபாடம் ஏற்படுத்தி நூலகத்தொடர்பை ஏற்படுத்த வேண்டும் என்று அல்அமீன் பள்ளி நிர்வாகி மற்றும் தலைமை ஆசிரியரிடம்  புன்னகை மன்றம் கோரிக்கை வைத்தது. மற்ற பள்ளி நிர்வாகத்திடமும் கோரிக்கை வைக்க உள்ளது. 

தகவல் : முஹம்மது நிஜார் 

காயல்பட்டினம் 

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com