بسم الله الرحمن الرحيم
Tuesday 16th October 2018 | 05 ஸஃபர் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
காயல் குப்பை அரசியல்: பாகம் 21 - ஏன் சர்வே எண் 278 இடம் பொருத்தமில்லை என 2013, 2015 ஆம் ஆண்டுகளில் MEGA அமைப்பு வெளியிட்ட விழிப்புணரவு பிரசுரங்கள்!அச்சிடுகமின்-அஞ்சல்
16 டிசம்பர் 2017 மாலை 12:43
அன்புடையீர்,
_இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!_
முந்தைய பாகங்களில் - எவ்வாறு, *பல ஆண்டுகளாக, காயல்பட்டினம் நகராட்சிக்கு - பப்பரப்பள்ளிக்கு மாற்றாக - குறைந்தது 5 ஏக்கர் நிலம் - புதிய குப்பைக்கிடங்குக்கு மட்டும் தேடப்பட்டு வந்தது என்பதையும், முன்னாள் நகர்மன்றத்தலைவர் - குப்பைக்கிடங்கு மற்றும் பயோ காஸ் திட்டத்திற்கும் சேர்த்து - 4 ஏக்கர் நிலம் தந்ததையும் (சாலைகளை தவிர்த்து), பொது மக்களிடம் - இந்த உண்மை மறைக்கப்பட்டு, குப்பைக்கிடங்கு மற்றும் பயோ காஸ் திட்டம் அமைய, 5.5 ஏக்கர் தரப்பட்டது, 6 ஏக்கர் தரப்பட்டது என பொய்யான பிரச்சாரம்* மேற்கொள்ளப்பட்டதையும் கண்டோம்.
_முன்னாள் நகர்மன்றத்தலைவர்_ *ஹாஜி வாவூ செய்யது அப்துர் ரஹ்மான்* தந்த நிலத்தில் - *நிலத்தின் அளவு மட்டுமே பிரச்சனை இல்லை; அவ்விடத்தில் குப்பைக்கிடங்கு மற்றும் பயோ காஸ் திட்டம் அமைவதில், CRZ விதிமீறல் உட்பட பல்வேறு சிக்கல்கள் உள்ளன.*
பயோ காஸ் திட்டத்திற்கான தீர்மானம், *நவம்பர் 25, 2014* இல் - நகர்மன்றத்தில் நிறைவேற்றப்பட்டபோது - அத்திட்டம் அமைந்திட உறுப்பினர்கள் தேர்வு செய்த _முன்னாள் நகர்மன்றத்தலைவர்_ *ஹாஜி வாவூ செய்யது அப்துர் ரஹ்மான்* தந்த நிலத்தில் உள்ள குறைப்பாடுகள் குறித்து, தீர்மான புத்தகத்தில் - வருங்கால சந்ததிகளும் அறிய வேண்டும் என்ற நோக்கில் - அவ்விடம், ஏன் இருத்திட்டங்களுக்கும் பொருத்தமானது அல்ல என்பதை _முன்னாள் நகர்மன்றத்தலைவர்_ *ஐ.ஆபிதா சேக்*, பதிவு செய்தார். அவர் பதிந்த கருத்துக்கள் வருமாறு: 
_// மண்டல செயற்பொறியாளர் அறிக்கையில் தொழில்நுட்ப காரணங்கள் கூறி நிராகரித்த இடங்களுக்கு கூறப்பட்ட காரணங்கள் தொழிநுட்ப ரீதியானவை அல்ல_
_// பயோ காஸ் திட்டத்திற்கு சர்வே எண் 278 இல் BUFFER ZONE குறித்து முடிவெடுக்கும் வரை, அங்கு எவ்வித திட்டப்பணிகளும் செயல்படுத்தக்கூடாது_
_// கிழக்கில் உள்ள கடலில் இருந்து - 500 மீட்டர் தூரத்தில் பயோ காஸ் பிளான்ட் அமைப்பதால், தொடர் கடற்காற்று, புயல் போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படுத்தும் பாதிப்புகள் கருத்திற்கொள்ளப்படவில்லை_
_// மழைநீர், விவசாயக்கழிவு மற்றும் தொழிற்சாலைக்கழிவுகள் சென்றடையும் வடக்கில் உள்ள ஓடையில் இருந்து 200 மீட்டரில் பயோ காஸ் பிளான்ட் அமைப்பதால் உள்ள பாதிப்புகள் கருத்திற்கொள்ளப்படவில்லை_
_// பரிந்துரைக்கப்பட்ட இடத்தில மின் வசதிகள், தரமான சாலைகள் இல்லை என்பது கருத்திற்கொள்ளப்படவில்லை_
_// மிகவும் ஒதுக்குப்புறமான இந்த இடத்தில பயோ காஸ் பிளான்ட் அமைவதால் உள்ள செலவு (COST - BENEFIT) பரிசீலனை செய்யப்பட்டு ஆய்வில் உள்ள பிற இடங்களோடு ஒப்பிடப்பட்டு, வெவ்வேறு இடங்களில் அமைவதால் எத்தனை வார்டுகள், தெருக்கள் பயனடையும் என்ற விபரங்கள் இவ்வறிக்கையில் வழங்கப்படவில்லை_
*மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பும்* (MEGA) - இது சம்பந்தமாக இரு பிரசுரங்களும், உள்ளூர் தொலைக்காட்சியில் விழிப்புணர்வு வீடியோ பிரச்சாரமும் வெளியிட்டது.

Bright

mg2

mg3

mg4_copy

mg7

final

*முதல் துண்டு பிரசுரம்* - *அக்டோபர் 25, 2013* அன்று - _கையில் வெண்ணை இருக்க நெய்க்கு அலைவதேன்???_ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. அந்த *விழிப்புணரவு பிரசுரம் (8 பக்கங்கள்)* இணைக்கப்பட்டுள்ளது.
 01.jpg
02_1.jpg
இரண்டாவது துண்டு பிரசுரம்* - *ஜனவரி 5, 2015* அன்று - _சுண்டைக்காய் கால் துட்டு! சுமை கூலி முக்கால் துட்டா?_ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. அந்த *விழிப்புணரவு பிரசுரம் (2 பக்கங்கள்)* இணைக்கப்பட்டுள்ளது.
இவண்,
_நிர்வாகிகள்,_
*நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.*
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்] 
[பதிவு: டிசம்பர் 10, 2017; 8:30 am] 
[#NEPR/2017121001]
 

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com