بسم الله الرحمن الرحيم
Sunday 16th June 2019 | 12 ஷவ்வால் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

 • Google Bookmarks
 • Twitter
 • Windows Live
 • Facebook
 • MySpace
 • deli.cio.us
 • Digg
 • Newsvine
 • reddit
 • StumbleUpon
 • Yahoo! Bookmarks
 • Yigg
காயல் குப்பை அரசியல்: பாகம் 22 - கொம்புத்துறை (கடையக்குடி) வடபகுதியில் குப்பைக்கிடங்கு அமைந்திட எதிர்ப்பு தெரிவித்து கொம்புத்துறை, அருணாச்சலபுரம் மக்கள் சார்பாக வழங்கப்பட்ட மனு!அச்சிடுகமின்-அஞ்சல்
16 டிசம்பர் 2017 மாலை 02:12
அன்புடையீர்,
_இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!_
_முன்னாள் நகர்மன்றத்தலைவர்_ *ஹாஜி வாவூ செய்யது அப்துர் ரஹ்மான்* தர முன்வந்த *சர்வே எண் 278* இடத்தில - *குப்பைக்கிடங்கு / பயோ காஸ் திட்டங்கள்*  கொண்டு வர, *அக்டோபர் 11, 2013* அன்று ஆதரவு தெரிவித்து - நகர்மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட தகவல் முந்தைய பாகங்களில் வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து - *டிசம்பர் 6, 2013 இல்* - *கொம்புத்துறை (கடையக்குடி), அருணாச்சலபுரம் பொது மக்கள் சார்பாக - அத்திட்டங்களை அப்பகுதிகளில் கொண்டு வர, எதிர்ப்பு தெரிவித்து கடிதங்கள் - காயல்பட்டினம் நகர்மன்றத்தலைவர் மற்றும் ஆணையரிடமும் கொடுக்கப்பட்டது.*
அந்த கடித்ததில் - _நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து குப்பைகளையும், கழிவுகளையும் நாங்கள் வாழக்கூடிய பகுதியில் கொட்டும்போது, அதை தேங்கி வைக்கும் போது, அதில் இருந்து வரும் துர்நாற்றமும், நோய்கிருமிகளும், எங்களது, எங்களது குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திற்கும் சுகாதார வாழ்வுக்கும், கேடு விளைவிக்கும், காரணிகளாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை._
_ஏற்கனவே DCW தொழிற்சாலை எங்கள் பகுதிக்கு அருகில் இருப்பதால், அந்த ஆலையின் இரசாயனக்கழிவுகளால் பெரிதும் பாதிப்பை சந்தித்துக்கொண்டிருக்கிறோம்._
_ஒவ்வொரு ஆண்டும், நவம்பர், டிசம்பர் மாதங்களில் அந்த ஆலையில் இருந்து நச்சுக்கழிவுகள் கடலில் வந்து கலக்கும் போது, கடல் தண்ணீர் குறிப்பாக கடற்கரையோர மணல்திட்டுக்களும், கடற்கரையோர கடல்பகுதியும், சிவப்பு நிறமாக மாறிவிடுகின்றது._
_இந்த இரசாயன கழிவுகள், சிறு நீர் பிரச்சனை, புற்றுநோய், தோல் அரிப்பு, பல ஒவ்வாத தன்மை (allergical) நோய்களை ஏற்படுத்துகிறது._
_எனவே, ஏற்கனவே உடல்நோய்களோடு, சுகாதார சீர்க்கேட்டோடு, வாழுகின்ற எங்களுக்கு, நகராட்சியின் இந்த குப்பைகள் மற்றும் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் திட்டம் எங்களது, எங்களது குழந்தைகளது, எம் எதிர்கால தலைமுறையின் சுகாதார வாழ்வுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது._
_எனவே, எங்கள் பகுதியில் நிறைவேற்ற நகராட்சியின் குப்பைகள் மற்றும் கழிவுகள் மறுசுழற்சி திட்டத்திற்கான இடத்தை மாற்றி, எந்த மக்களும் பாதிக்காத ஒரு இடத்தில் செயல்படுத்த ஆவன செய்ய தங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்._
59f3dd43-a48e-4052-b9df-452982205e33
d7244e2c-9526-4732-9dd7-b67d58196cbd
8770abfa-4e55-45bb-a51d-25c79c771862
b48db00e-75cf-4063-85a6-b2368864ff43
f3968e22-8639-4805-a67b-aeaa0f02d25c
*கொம்புத்துறை (கடையக்குடி), அருணாச்சலபுரம் மக்கள் சார்பாக நீதிமன்றத்தில்  தாக்கல் செய்யப்பட அந்த கடிதம் இணைக்கப்பட்டுள்ளது.*
2004 ஆம் ஆண்டு, _திருச்சி_ *தேசிய கல்லூரியின்* _நிலவியல் துறை_, *A STUDY ON THE WATER POLLUTION OF KAYALPATTINAM AREA, TUTICORIN, TAMILNADU* என்ற ஒரு தலைப்பில் - ஓர் ஆய்வறிக்கையை  வெளியிட்டிருந்தது. *JOURNAL OF INDUSTRIAL POLLUTION CONTROL 20(1) (2004)* என்ற புத்தகத்தில் பக்கங்கள் 25 - 30 இல் இடம்பெற்ற இந்த ஆய்வறிக்கையை, அத்துறையை சார்ந்த *எஸ்.செல்வராஜ், எம்.பெரோஸ் கான், ஆர்.பாஸ்கரன் மற்றும் கே.அன்பரசு* ஆகியோர் தயாரித்திருந்தனர்.
*அந்த ஆய்வறிக்கை, காயல்பட்டினம் வடபகுதி மற்றும் கடலோர பகுதிகளில் - DCW தொழிற்சாலை கடலுக்குள் கழிவுகளை கலப்பதால், நிலத்து நீருக்கு ஏற்பட்டுள்ள மாசு குறித்து தெரிவிக்கிறது.* இங்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளுக்கான மாதிரிகள், *புன்னக்காயல், அருணாச்சலபுரம், கொம்புத்துறை, சிங்கித்துறை, நகரின் மேற்கு பகுதிகளில்* எடுக்கப்பட்டதாகவும் அந்த ஆய்வறிக்கை தெரிவித்தது.
அந்த ஆய்வறிக்கை - தனது முடிவாக கீழ்க்காணும் கருத்தை வெளியிட்டது.
*On the basis of field observations and laboratory study, it has been concluded that the water both surface and subsurface existing in the area is polluted and the levels of pollution are unacceptable. It is one of the effects of the presence of a chemical industry which makes the coastal environment in the area highly vulnerable. The practice of letting the effluents without any pretreatment affects the soil and water of the study area which can not be rectified.*
_அப்பகுதிகளில்  மேற்கொள்ளப்பட்ட  களஆய்வுகள், ஆய்வுகூட பரிசோதனைகள் அடிப்படையில் - நிலத்தில் உள்ள நீரும், நிலத்திற்கு அடியில் உள்ள நீருக்கும்  - ஏற்றுக்கொள்ளமுடியாது அளவிற்கு மாசு ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் அமைந்துள்ள ஒரு வேதியல் தொழிற்சாலையின் விளைவே இது. இந்த தொழிற்சாலை - கடலோர பகுதிகளில் பாதிப்புகள் அதிகம் ஏற்படும் சூழலை உருவாக்கியுள்ளது. சுத்தீகரிப்பு எதுவும் செய்யாமல், கழிவுகளை கடலில் கலப்பது - ஆய்வு பகுதியில் இடம்பெற்றுள்ள  நிலத்தையும், மண்ணையும் பாதிக்கிறது. இதற்கு நிவாரணம் கிடையாது._ (தமிழாக்கம்)
இந்த ஆய்வறிக்கை - *காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பினால் (KEPA)*, DCW விரிவாக்கத்திட்டத்தினை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் - ஆவணமாக சமர்ப்பிக்கப்பட்டது.
இவண்,
_நிர்வாகிகள்,_
*நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.*
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்] 
[பதிவு: டிசம்பர் 11, 2017; 8:30 am] 
[#NEPR/2017121101]

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com