بسم الله الرحمن الرحيم
Friday 21st September 2018 | 10 முஹர்ரம் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
துளிரில் தி கலர் ஆப் பேரடைஸ்' திரைப்படம் திரையிடப்பட்டது!அச்சிடுகமின்-அஞ்சல்
19 டிசம்பர் 2017 மாலை 11:57

நமது துளிர் அறக்கட்டளை சார்பாக பல்வேறு சமுக நோக்கம் கொண்ட நிகழ்வுகளை இதற்க்கு முன்பு நடத்தியுள்ளோம். அதன் தொடர்ச்சியாக சர்வதேச அளவில் மிகப்பெரிய அளவில் கவனம் பெற்ற உலக சினிமாக்களை திரையிடல் வேண்டும் என்ற நோக்கத்தில் குறுகிய நேரத்தில் திட்டமிடப்பட்டு 17.12.2017 ஞாயிறு அன்று மதியம் 2.30 மணியளவில் நமது துளிர் உள்ளரங்கத்தில் புகழ் பெற்ற ஈரானிய இயக்குனர் மஜீத் மஜ்தியின் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளியான 'தி கலர் ஆப் பேரடைஸ்' திரைப்படம் திரையிடப்பட்டது.

download
கண் பார்வையற்ற ஒரு சிறுவனின் கல்வி இயல்பான சிறிய ஆசைகள் உறவுகளிடமும் அவன் தந்தையிடம் எதிர்பார்க்கும் அன்பையும்அரவனைப்பையும் பற்றியும் அதனால் அவனுக்கும்அவனுடைய கந்தை மற்றும் பாட்டிக்கும் இடையே ஏற்படும் உளவியல் ரீதியான தாக்கத்தையும் பற்றி மிக அழகாகவும்ஆழமாகவும் நம்மிடையே பேசுகிறது இத்திரைப்படம்.
கண்பார்வையற்றோருக்கான சிறப்பு பள்ளயில் படிக்கும் சிறுவன் முஹம்மது பள்ளி விடுமுறைக்காக ஊருக்கு செல்வதற்கு தன் தந்தையின் அழைப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறார். மனைவியை இழந்திருக்கும் முஹம்மதுவின் தந்தை தன்னுடைய இரண்டாவது திருமணத்திற்கு பார்வையற்ற மகன் முஹம்மது தடையான இருக்கக்கூடும் என்று பள்ளிக்கூடத்திலேயே விட்டுச்செல்ல விரும்புகிறார். விட்டுச்செல்ல வாய்ப்பில்லாமல் போகவே தன்னுடைய சொந்த ஊறுக்கு அழைத்துச் செல்கிறார்.
தாயை இழந்திருக்கும் சிறுவன் முஹம்மது அவனது பாட்டியிடமும்(தந்தையின் அம்மா) அவனது இரண்டு சகோதரிகளிடமும் அன்பை பரிமாறிக்கொள்கிறான். சகோதரிகளுடன் பள்ளிக்கூடம் செல்கின்றான். முஹம்மது பள்ளிக்கூடம் செல்வதை விரும்பாத அவனது தந்தை அச்சிறுவனை ஒரு கண் பார்வையற்ற மரத்தச்சரிடம் வேலைக்கு சோத்துவிடுகிறார்.
அதை விரும்பாத முஹம்மதுவின் பாட்டி சிறுவனை மீண்டும் வீட்டிற்கே கூட்டிவர வேண்டும் என்று வீட்டைவிட்டு வெளியேற போகும் போதுவயதாகிக்கொண்டிருக்கும் எனக்குப் பிறகு பார்வையற்ற தனது மகனை பார்த்துக் கொள்ள யாரும் இல்லை என்பதாலும் அவனுடைய எதிர்காலத்தில் பொருளாதார ரீதியாக யாரையும் சார்ந்திருக்காமல் இருப்பதற்;கு அவனுக்கு இந்த தொழில் உதவியாக இருக்க வேண்டும் என்று வாதிடுகிறான் மேலும் தன்னுடைய இரண்டாவது திருமணத்திற்கு ஒப்புதல் கேட்கிறான்!
பேரன் முஹம்மதுவின் நினைவுகளில் உடல்நலம் இன்றி முஹம்மதுவின் பாட்டி இறந்துவிடவே முஹம்மதுவின் தந்தைக்கு இரண்டாவது திருமணம் தடைபடுகிறது. வெறுமையும் தனது மகன் முஹம்மதுவின் நினைவுகளும் தன்னை வாட்டவே முஹம்மதுவை மீண்டும் தன்னுடனே வீட்டிற்கு அழைத்து வரும் போது தந்தையும் மகனும் ஆற்றில் ஓடும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுகிறார்கள். இருவரும் கரை ஒதுங்கிய நிலையில் முஹம்மதுவின் தந்தை முஹம்மதுவை அணணத்துக் கொண்டு அழுதவாறும் மரங்கொத்தி பறவைகளின்

ஓசைகளை தனது விரல் அசைவுகளில் மொழி பெயர்ப்பு செய்தவாறு தந்தையை அணணத்துக்
கொள்கிறான் முஹம்மது!
50க்கும் மேற்பட்ட பெண்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் கண்பார்வையற்ற சிறுவனின் உணர்வுகளை உணர்த்திய இத்திரைப்படம் போன்று சிறப்புடைய திரைப்படத்தினை தொடர்ந்து திரையிட வேண்டும் என்றும் மாணவ மாணவிகளுக்கு என்று தனியாக திரையிட்டு காட்டினால் சிறுவயதிலேயே அவர்களுக்கு இது போன்ற சமூக ஆர்வத்தினை வளர்க்க உதவிடும் வகையில் அமையும் என்று அவர்கள் கருத்து தெரிவித்தனர்.
விரைவில் அந்த எண்ணங்கள் பள்ளி கல்லூரிகளின் துனையோடு நிறைவேற்றப்படும் என்று துளிர் நிறுவனர் வக்கீல் அஹமது அவர்கள் உறுதியளித்தார்.

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com