பழுதடைந்துள்ள நெடுஞ்சாலைகள்: அலட்சியம் காட்டும் அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன?” மனு!அச்சிடுக
29 ஜனவரி 2018 காலை 11:16

காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், நெடுஞ்சாலைகளில் உள்ள பழுதுகளைச் சரி செய்யாமல் அலட்சியம் காண்பிக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:- 

காயல்பட்டினம் நகராட்சி பகுதி வழியாக செல்லும் மாநில நெடுஞ்சாலை பல்வேறு பகுதிகளில் மிகவும் பழுடைந்துள்ளது என்று, கடந்த செப்டம்பர் மாதம் - மாவட்ட ஆட்சியர் மூலம் புகார் தெரிவிக்கப்பட்டது. 

மழைக்காலம் துவங்குவதற்கு முன்பு இச்சாலையை சீரமைக்க கோரியும் வேண்டுகோள் வைக்கப்பட்டது. 

அக்டோபர் இறுதிக்குள் இப்பணிகள் மேற்கொள்ளப்படும் என பதில் வழங்கிய மாவட்ட நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர், இப்பணிகளை இதுவரை செய்யவில்லை. 

கடந்த மார்ச் மாதம், நகரின் இரு முக்கிய பகுதிகளில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால், வேகத்தடை அமைக்கவும் கோரிக்கைவைக்கப்பட்டது. RUMBLE STRIPS அமைக்கப்படும் என பதில் வழங்கி 10 மாதங்கள் ஆகியும், இது வரை இப்பணிகள் செய்யப்படவில்லை. 

இது குறித்து - தூத்துக்குடி மாவட்ட கோட்டப்பொறியாளரிடம் விசாரித்தபோதும், திருச்செந்தூர் பகுதி உட்கோட்ட பொறியாளரிடம் விசாரித்த போதும், மிகவும் அலட்சியமான, பொறுப்பற்ற பதில் வழங்கப்படுகிறது. 

நெடுஞ்சாலைத்துறையின் அலட்சியத்தில் பல விபத்துகள் அப்பகுதியில் இதுவரை நடந்துள்ளது. பொதுமக்கள் - குறிப்பாக நடந்து செல்லும் வயோதிகர்கள், இரு சக்கர வாகன ஓட்டிகள், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதற்கு முழு பொறுப்பு - தூத்துக்குடி மாவட்ட கோட்டப்பொறியாளரும், திருச்செந்தூர் பகுதி உட்கோட்ட பொறியாளரும் தான். 

எனவே - தங்கள் பணிகளை செய்ய தவறிய தூத்துக்குடி மாவட்ட கோட்டப்பொறியாளர், திருச்செந்தூர் உட்கோட்ட பொறியாளர் ஆகியோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், நிலுவையில் உள்ள பணிகளை துரிதமாக மேற்கொள்ள உத்தரவிட கோரி - கூடுதல் தலைமை செயலர் (நெடுஞ்சாலைத்துறை) மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் 08.01.2018. அன்று, நடப்பது என்ன? குழுமம் சார்பாக மனு சமர்ப்பிக்கப்பட்டது. 

 

இவண், 

நிர்வாகிகள், 
நடப்பது என்ன?சமூக ஊடகக் குழுமம். 
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்] 

[பதிவு: ஜனவரி 08, 2018; 9:30 pm] 
[#NEPR/2018010807] 

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh