بسم الله الرحمن الرحيم
Monday 25th March 2019 | 18 ரஜப் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

 • Google Bookmarks
 • Twitter
 • Windows Live
 • Facebook
 • MySpace
 • deli.cio.us
 • Digg
 • Newsvine
 • reddit
 • StumbleUpon
 • Yahoo! Bookmarks
 • Yigg
கதை வண்டி’ திட்டம்: காயல்பட்டினம் பள்ளி மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட 133 கதைகள் ‘பதியம்’ தளம் மூலம் அனுப்பட்டது!!அச்சிடுகமின்-அஞ்சல்
29 ஜனவரி 2018 காலை 11:59

தமிழகத்தின் சிறந்த சிறுவர் இலக்கிய ஆர்வலர்களால் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள ‘கதை வண்டி’ திட்டத்திற்காக காயல்பட்டினம் பள்ளி மாணவர்கள் எழுதிய 133 கதைகள் - ‘பதியம்’ தளம் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து, இத்திட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: 

எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு அமைப்பின் ‘கண்ணும்மா முற்றம்’ பிரிவு & அரசு பொது நூலகம் – காயல்பட்டினம் ஆகியன இணைந்து, ‘பதியம்’ என்னும் பெயரில் சிறார் இலக்கிய தளம் ஒன்றை அண்மையில் துவங்கியது. 

தமிழில் வெளியாகும் சிறார் இதழ்களில், பல்வேறு இலக்கியப் பிரிவுகளில் – நமதூரின் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவியர்களை எழுதிடத் தூண்டுவதே, ‘பதியம்’ தளத்தின் நோக்கமாகும்! 

‘கதை வண்டி’ திட்டத்தில் பங்கேற்க அழைப்பு! 

‘பதியம்’ தளத்தின் முதன்முதல் முயற்சியாக, தமிழகத்தின் சிறந்த சிறுவர் இலக்கிய ஆர்வலர்களான திரு விழியன், திரு விஷ்ணுபுரம் சரவணன் & திரு வெற்றிச்செழியன் & ஓவியர் திருமதி வித்யா ஆகியோரின் ஒருங்கிணைப்பில் உருவான ‘கதை வண்டி’ எனும் திட்டத்தில் பங்கேற்க, காயல்பட்டினம் பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. 

இவ்வழைப்பானது மின்னணு வடிவமைப்பில் இணையதள செய்தியாகவும் சமூக ஊடகங்களின் வாயிலாகவும் பகிரப்பட்டதோடு, திட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் பள்ளிகளுக்குச் சென்று - மாணவர்களுக்கு நேரடி விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. 

இந்நிகழ்வுகளில், 9 வயது முதல் 14 வயது வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு துண்டறிக்கை வழங்கப்பட்டு, பள்ளிகளின் தகவலறிக்கை பலகைகளில் பெரிய அளவு காகித பதாகைகள் ஒட்டப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டன. 

12 பள்ளிகளில் இருந்து 133 கதைகள்! 

திட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு அமைப்பின் நிர்வாகக் குழு உறுப்பினர் கத்தீப் மாமூனா லெப்பை, காயல்பட்டினம் அரசு பொது நூலகத்தின் நூலகர் அ. முஜீப் & நூலக தன்னார்வலர் முத்துக்குமார் ஆகியோர் பள்ளிகளுக்கு நேரில் சென்று, இத்திட்டம் குறித்து மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் விளக்கிக் கூறினர். 

இதன் அடிப்படையில், மிகுந்த உற்சாகத்தோடு பங்கேற்ற 107 மாணவர்களின் மூலம், மொத்தம் 133 கதைகள் திட்ட ஒருங்கிணைப்புக் குழுவால் பெறப்பட்டன. 

பள்ளிவாரியாக கதைகளின் எண்ணிக்கை 

கே.ஏ. மேல்நிலைப் பள்ளி – 31
விஸ்டம் பப்ளிக் பள்ளி – 25
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கடையக்குடி – 19
முஹ்யித்தீன் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி – 18
ரஹ்மானிய்யா துவக்கப் பள்ளி – 11
எல். கே. மேல்நிலைப் பள்ளி – 7
தேசிய தொடக்கப் பள்ளி, அருணாச்சலபுரம் – 5
அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி – 5
சுபைதா பெண்கள் மேல்நிலைப் பள்ளி – 4
எல். கே. மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி – 2
அல் அமீன் துவக்கப் பள்ளி – 2
ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, ஓடக்கரை – 1
தனி – 3
--
மொத்தம் – 133
-- 

‘பதியம்’ தளம் மூலம் இக்கதைகள் முறையே ‘கதை வண்டி’ குழுவினருக்கு அனுப்பப்பட்டது. இவற்றுள் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுடன் (மட்டும்), நேரிலும், அஞ்சல் & தொலைபேசி வழியாகவும், ‘கதை வண்டி’ திட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுவினர் - ஒரு வருட காலம் பயணிக்க இருக்கிறார்கள். 

இந்நிகழ்வுகளின் முடிவில், ஒவ்வொருவரின் கதைகளையும் தனித்தனிப் புத்தகமாக்கி, சிறப்பான விழாவில் அவற்றை வெளியிடவும் இருக்கிறார்கள். 

 

ஊக்கத்திற்கு நன்றி! 

அரையாண்டுத் தேர்வு காலமாக இருந்த போதிலும், கதை எழுதுவதை ஒரு விருப்பச் செயலாக ஆக்கிய மாணவ-மாணவியருக்கும்; அவர்களை ஊக்கப்படுத்தி ஒருங்கிணைந்த பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரிய-ஆசிரியைகள் & பெற்றோர்களுக்கும் நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம். 

இத்திட்டத்தை ஒருங்கிணைத்த எமது குழுவினருக்கு, நம் குழந்தைகளின் கற்பனை திறனும் & கதை எழுதும் ஆற்றலும் பிரம்மிப்பையே ஏற்படுத்தியது. அவர்களின் ஆர்வமானது, இந்த திட்டத்தோடு நில்லாமல், ‘பதியம்’ தளம் தளராது தொடர்ந்து பயணித்து – நம் பிள்ளைகளின் திறமைகளை வெளிக்கொணர வழிவகை செய்ய வேண்டும் என்ற ஊக்கத்தையே வழங்கியுள்ளது. 

‘கதை வண்டி’ குழுவினரால் தேர்வுசெய்யப்படாத கதைகளை, வேறு தளங்களில் வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்படும். 

இந்த முதல் முயற்சியைத் தொடர்ந்து, ‘பதியம்’ தளத்தின் இன்ன பிற செயல்பாடுகள் தொடரும் (இறைவன் நாடினால்). 

தொடர்புடைய முந்தைய பதிவுகள் 

1> ‘கதை வண்டி’ திட்டத்தில், காயல்பட்டினம் பள்ளி மாணவர்கள் ஆர்வத்தோடு பங்கேற்க - ‘பதியம்’ மூலம் அழைப்பு!!
(01.12.2017; http://www.kayalpatnam.com/shownews.asp?id=19965

2> ‘பதியம்’ – சிறார்களை இலக்கிய உலகோடு இணைத்திடும் முயற்சி!! அரசு பொது நூலகத்துடன் இணைந்து புதிய செயல்திட்டம்!! எழுத்து மேடை மையம் நிர்வாகக் குழு அறிக்கையில் தகவல்!!
(22.11.2017; http://www.kayalpatnam.com/shownews.asp?id=19944

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தகவல், ஒளிப்படங்கள் & ஒருங்கிணைப்பு:
கத்தீப் மாமூனா லெப்பை, முஜீப், முத்து குமார், கே.எம்.டீ.சுலைமான், ஆபிதா ஷேக், அப்பாஸ், ஃபழல் இஸ்மாயீல், சாளை பஷீர் ஆரிஃப் & அ.ர.ஹபீப் இப்றாஹீம் 

செய்தியாக்கம்:
அ.ர.ஹபீப் இப்றாஹீம் (தம்மாம்) 

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com