بسم الله الرحمن الرحيم
Monday 20th August 2018 | 08 துல்ஹஜ் 1439AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
பேருந்து கட்டணங்கள்: மாற்றியமைக்கப்பட்ட கட்டணங்கள் திங்கட்கிழமை (இன்று) முதல் அமலுக்கு வருகிறது!அச்சிடுகமின்-அஞ்சல்
29 ஜனவரி 2018 மாலை 12:18

தமிழகத்தில் பேருந்து கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ன. மாற்றியமைக்கப்பட்ட கட்டணங்கள் திங்கட்கிழமை (இன்று) முதல் அமலுக்கு வருகிறது .

தமிழகத்தில் பேருந்து கட்டணம், கடந்த 2011ஆம் ஆண்டு உயர்த்தப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த ஜன.21ஆம் முதல் அரசு பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திடீர் விலை உயர்வுக்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

மேலும் இது தொடர்பாக திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் அரசுக்கெதிரான போராட்டத்தையும் நடத்தி வருகின்றன. மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்பு போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணத்தைத் தமிழக அரசு குறைத்துள்ளது. மாற்றியமைக்கப்பட்ட கட்டணங்கள் திங்கட்கிழமை (இன்று) முதல் அமலுக்கு வருகிறது .

அதன்படி, விரைவு பேருந்துகளில் கிலோ மீட்டருக்கு 80 பைசாவிலிருந்து 75 பைசாவாக கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், சாதாரண பேருந்துகளில் கிலோ மீட்டருக்கு 60 பைசாவிலிருந்து 58 பைசாவாகவும், நகர மற்றும் மாநகரப் பேருந்துகளில் குறைந்தபட்சக் கட்டணம் ஐந்து ரூபாயிலிருந்து நான்கு ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகரப் பேருந்துகளில் அதிகபட்சக் கட்டணம் 22 ரூபாயாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குளிர்சாதனப் பேருந்துகளில் கிலோ மீட்டருக்கு கட்டணம் 140 பைசாவிலிருந்து 130 பைசாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com