بسم الله الرحمن الرحيم
Wednesday 25th April 2018 | 09 ஷஃபான் 1439AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
கடையக்குடி, கற்புடையார்பள்ளி வட்டம் என்ற அதிகாரப்பூர்வ பெயர்களை பயன்படுத்துக_: மாவட்ட ஆட்சியர், மீன்வளத்துறை மற்றும் ஊடகத்துறையினரிடம் நடப்பது என்ன? குழுமம் வேண்டுகோள்!*அச்சிடுகமின்-அஞ்சல்
08 பிப்ரவரி 2018 காலை 11:46

அன்புடையீர்,

_இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!_

காயல்பட்டினம் நகராட்சியின் கடலோர பகுதிகள் - *கடையக்குடி (வார்டு 1)* மற்றும் *கற்புடையார்பள்ளி வட்டம் (வார்டு 7)* ஆகும். இப்பகுதிகள் குறித்த செய்திகளை ஊடகங்கள் வெளியிடும்போது - *கொம்புத்துறை* என்றும், *சிங்கித்துறை* என்றும் குறிப்பிடுகின்றன.

கொம்புத்துறை, சிங்கித்துறை ஆகியவை அதிகாரப்பூர்வ, அரசு ஆவணங்கள் அடிப்படையிலான பெயர்கள் அல்ல. *கொம்புத்துறை பகுதியின் - அரசு ஆவணங்கள் அடிப்படையிலான பெயர், கடையக்குடி ஆகும்; அது போல - சிங்கித்துறை பகுதியின் - அரசு ஆவணங்கள் அடிப்படையிலான பெயர், கற்புடையார் பள்ளி வட்டம் ஆகும்.*

இருப்பினும் - *இவ்விரு இடங்கள் குறித்த செய்திகள் நாளிதழ்களிலோ, காட்சி ஊடகங்களிலோ இடம்பெறும்போது - அப்பகுதிகள் கொம்புத்துறை என்றும், சிங்கித்துறை என்றும் குறிப்பிடப்படுவது மட்டும் அல்லாது, திருச்செந்தூருக்கு அருகில் உள்ள தனி கிராமங்களாகவும் ("VILLAGES") குறிப்பிடப்படுகின்றன. ஆனால் - அவை தனி கிராமங்கள் அல்ல; காயல்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் ஆகும்.*

எனவே - *மாவட்ட ஆட்சியர் அலுவலகம்* மூலம் மற்றும் *மீன்வளத்துறை* மூலம் வெளியிடப்படும் இப்பகுதிகள் குறித்த செய்திகளில், அரசு ஆவணங்கள்படியிலான அதிகாரப்பூர்வமான பெயர்களை பயன்படுத்தவும் (கடையக்குடி, கற்புடையார்பள்ளி வட்டம்), மேலும் - அவை காயல்பட்டினம் நகராட்சியில் உள்ள பகுதிகள், தனி கிராமங்கள் அல்ல என்ற உண்மையான நிலவரம் அடிப்படையிலும் செய்திகளை வெளியிடக்கோரியும் - இன்று _மாவட்ட ஆட்சியர்_ *திரு என்.வெங்கடேஷ் IAS* அவர்களிடமும், _மீன்வளத்துறை இணை இயக்குனரிடம்_ - நடப்பது என்ன? குழுமம் சார்பாக வேண்டுகோள் மனு வழங்கப்பட்டது.

மேலும் - *தூத்துக்குடி மாவட்ட ஊடகத்தினரிடமும், இது சம்பந்தமான வேண்டுகோள், நடப்பது என்ன? குழுமம் சார்பாக தூத்துக்குடியில் இன்று வைக்கப்பட்டது.*

இவண்,

_நிர்வாகிகள்,_
*நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.*

[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]

[பதிவு: பிப்ரவரி 5, 2018; 3:30 pm]

[#NEPR/2018020503]

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com