بسم الله الرحمن الرحيم
Saturday 20th October 2018 | 09 ஸஃபர் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
CCTV கேமராக்கள் நிறுவ அலட்சியம் காட்டும் காயல்பட்டினம் நகராட்சிக்கு கெடு விதிக்கவும்: மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரிடம் நடப்பது என்ன? குழுமம் கோரிக்கை!*அச்சிடுகமின்-அஞ்சல்
08 பிப்ரவரி 2018 காலை 11:49

அன்புடையீர்,

_இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!_

காயல்பட்டினத்தில் கடந்த சில மாதங்களாக - பல்வேறு குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதை நாம் அறிவோம்.

குற்றங்களை தடுக்க, பொது இடங்களில் CCTV கேமராக்கள் நிறுவ - நகர்மன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட பிறகும், இது சம்பந்தமான பல்வேறு கோரிக்கை மனுக்கள் வழங்கப்பட்டபிறகும் அலட்சியம் காண்பித்து வரும் காயல்பட்டினம் நகராட்சிக்கு கெடு விதிக்க கோரி இன்று (பிப்ரவரி 5, 2018), தூத்துக்குடியில் *மாவட்ட ஆட்சியர் திரு என்.வெங்கடேஷ் IAS* மற்றும் *மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு மஹேந்திரன்* ஆகியோரிடம், *நடப்பது என்ன? குழுமம்* சார்பாக கோரிக்கை மனு வழங்கப்பட்டது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

_பொது மக்களின், பொது இடங்களின் பாதுகாப்புகளை கருத்தில் கொண்டு - தமிழக அரசு, 2012 ஆம் ஆண்டு - The Tamil Nadu Local Bodies [Installation of CCTV units in public buildings] Rules 2012 என்ற விதிமுறைகளை அமல்படுத்தியது. அந்த விதிமுறைகள்படி - அந்த விதிமுறைகள் அமலுக்கு வந்த 6 மாதங்களுக்குள், அந்த விதிமுறைகள் பட்டியலிட்டுள்ள பொது இடங்களில், CCTV கேமராக்கள் பொறுத்தப்படவேண்டும். காயல்பட்டினம் நகராட்சியில் - மக்கள் பிரதிநிதிகள் இருந்த போது - இது சம்பந்தமாக தீர்மானங்களும் கொண்டு வரப்பட்டன._

_இருப்பினும் - இன்றைய தேதி வரை, காயல்பட்டினம் நகராட்சி - 2012 ஆம் ஆண்டு அரசு வெளியிட்டுள்ள விதிமுறைகள்படி ஆறு மாதங்களுக்குள் தன் கடமையையும் செய்யவில்லை; இது சம்பந்தமான நகர்மன்றதீர்மானங்களையும் நிறைவேற்றவில்லை; இது குறித்து - நாங்கள் கொடுத்த நினைவூட்டல் மனுக்கள் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை._

_நகரின் முக்கிய பேருந்து நிலைய வளாகத்தில் கொலை சம்பவம் - பல மாதங்களுக்கு முன்பு - நடந்துள்ளது; நகரின் பல இடங்களில் திருட்டுக்கள் நடந்துள்ளன; வேறு பல குற்றச்செயல்களும் நடந்து வருகின்றன. இருப்பினும் - பல லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு விஷயங்களுக்கு ஒப்பந்தப்புள்ளிகள் கோரும் காயல்பட்டினம் நகராட்சி, சில ஆயிரம் ரூபாய் செலவில் - நகரின் பொது இடங்களில் - CCTV கேமரா பொருத்துவதில் - காவல்துறை மூலம் நினைவூட்டல்கள் வழங்கிய பிறகும் - அலட்சியம் காட்டுவது அதிர்ச்சியளிக்கிறது._

_எனவே - இந்த விதிமுறைகள் அமலுக்கு வந்து ஆறு ஆண்டுகள் ஆகியும், அவற்றை நடைமுறைக்கு கொண்டுவராமல் - பொதுமக்கள் பாதுகாப்பு விஷயத்தில் அலட்சியம் காட்டிவரும் நகராட்சியை கண்டித்தும், உடனடியாக நகரின் அனைத்து பொது இடங்களில் CCTV கேமராக்கள் பொறுத்த காலக்கெடு விதித்தும் காயல்பட்டினம் நகராட்சிக்கு உத்தரவிட தங்களை கேட்டுக்கொள்கிறோம்._

இவண்,

_நிர்வாகிகள்,_
*நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.*

[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]

[பதிவு: பிப்ரவரி 5, 2018; 3:00 pm]

[#NEPR/2018020502]

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com