بسم الله الرحمن الرحيم
Wednesday 25th April 2018 | 09 ஷஃபான் 1439AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
வெளி மாநிலங்களில் இருந்து வியாபாரம் செய்ய வருபவர்கள்; வெளியூர்களில் இருந்து நகருக்கு புதிதாக குடிவருபவர்கள் ஆகியோர் மீதான கண்காணிப்பை அதிகப்படுத்தவும்: மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரிடம் நடப்பது என்ன? குழுமம் கோரிக்கைஅச்சிடுகமின்-அஞ்சல்
08 பிப்ரவரி 2018 மாலை 12:16

வெளி மாநிலங்களில் இருந்து வியாபாரம் செய்ய வருபவர்கள்; வெளியூர்களில் இருந்து நகருக்கு புதிதாக குடிவருபவர்கள் ஆகியோர் மீதான கண்காணிப்பை அதிகப்படுத்தவும்: மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரிடம் நடப்பது என்ன? குழுமம் கோரிக்கை!*

அன்புடையீர்,

_இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!_

காயல்பட்டினம் நகரில் கடந்த சில மாதங்களாக பல்வேறு குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளன. *பல நூற்றாண்டுகளாக - அமைதி பூங்கா என்றும், குற்றங்கள் இங்கு நடப்பது மிகவும் அரிது என்றும், காவல் நிலையம் இல்லாத ஊர் என்றும் பெயர் பெற்றுள்ள காயல்பட்டினம் நகரில் இதுபோன்ற குற்றங்கள் அதிகரித்திருப்பது, அனைத்து மக்களுக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.*

இது சம்பந்தமாக இன்று (பிப்ரவரி 5, 2018), தூத்துக்குடியில் *மாவட்ட ஆட்சியர் திரு என்.வெங்கடேஷ் IAS* மற்றும் *மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு மஹேந்திரன்* ஆகியோரிடம், *நடப்பது என்ன? குழுமம்* சார்பாக கோரிக்கை மனு வழங்கப்பட்டது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

_காயல்பட்டினம் நகரில் கடந்த சில மாதங்களாக பல்வேறு குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன. காலியாக உள்ள வீடுகளுக்குள் புகுந்து திருட்டு/திருட்டு முயற்சி; வீட்டில் ஆட்கள் இருக்கும்போதே இரவு நேரங்களில் திருட்டு/திருட்டு முயற்சி; அதிகாலை நேரங்களில் வெளியில் வேலை காரணமாக செல்லும் பொது மக்களை – தாக்கி, வழிப்பறி / வழிப்பறி முயற்சி; தெரு வியாபாரம் என்ற பெயரில் திருட்டு/கடத்தல் முயற்சி என பல்வேறு சம்பவங்கள், கடந்த சில மாதங்களாக நகரில் நடந்துள்ளன._

_இவ்வாறு - இது போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளததற்கான காரணம் - சமீப காலங்களாக, நகரில் அதிகரித்துள்ள, இப்பகுதியை சாராத, வெளி மாவட்ட / வெளி மாநில நபர்களின் குடியமர்த்தமும், நடமாட்டமும் என்ற அச்சம் பொது மக்கள் மத்தியில் பரவலாக உள்ளது. அதனை ஊர்ஜிதம் செய்யும் விதத்திலும் பல்வேறு சம்பவங்கள் நடந்துள்ளன._

_பல நூற்றாண்டுகளாக - அமைதி பூங்கா என்றும், குற்றங்கள் இங்கு நடப்பது மிகவும் அரிது என்றும், காவல் நிலையம் இல்லாத ஊர் என்றும் பெயர் பெற்றுள்ள காயல்பட்டினம் நகரில் இதுபோன்ற குற்றங்கள் அதிகரித்திருப்பது, அனைத்து மக்களுக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது._

_இது போன்ற சம்பவங்களை குறைப்பதற்காக பொது மக்களும் - தங்கள் இல்லங்களில் CCTV கேமராக்கள் பொறுத்த துவங்கியுள்ளார்கள். CCTV கேமராக்கள் என்பது அனைத்து தரப்பு மக்களாலும், நிறுவக்கூடிய விஷயம் இல்லை. மேலும் பொது இடங்களில் இன்னும் முழுமையாக CCTV கேமராக்கள் நிறுவும் பணி நிறைவாகவில்லை._

_எனவே - இது போன்ற சம்பவங்களை தடுத்திட, தங்களிடம் கீழ்காணும் கோரிக்கைகளை சமர்ப்பிக்கிறோம்._

_*(1) காயல்பட்டினம் பகுதியில் - காவல்துறை ரோந்து பணிகளை அதிகரிக்கவும். குறிப்பாக - இரவு நேர ரோந்து பணிகளை அதிகரிக்கவும்*_

_*(2) பொது மக்கள் / பொது நல அமைப்புகள் ஒத்துழைப்போடு HOME GUARDS எண்ணிக்கையையும் நகரில் அதிகரிக்கவும்*_

_*(3) வெளிமாவட்டம் / வெளி மாநிலம் பகுதிகளில் இருந்து நகரில் குடியேறும் நபர்கள் குறித்த கண்காணிப்பை, பொது மக்கள் / பொது நல அமைப்புகள் / வீட்டு உரிமையாளர்கள் ஒத்துழைப்போடு அதிகரிக்கவும்; பெரிய நகரங்களில் உள்ளது போல் - வாடகை வீடுகளில் குடியமர்வோர் பட்டியலை (TENANTS INFORMATION) பராமரிக்க நடவடிக்கை எடுக்கவும்*_

_இந்த நடவடிக்கைகள் மூலம் - நகரில் தற்போது நிலவும் அச்ச உணர்வு ஓரளவு களையப்பட்டு, பாதுகாப்பு உணர்வு மீண்டும் திரும்பும். எனவே - இது சம்பந்தமான துரித நடவடிக்கையை மேற்கொள்ளும்படி தங்களை கேட்டுக்கொள்கிறோம்._

இவண்,

_நிர்வாகிகள்,_
*நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.*

[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் *(MEGA)* சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]

[பதிவு: பிப்ரவரி 5, 2018; 1:30 pm]

[#NEPR/2018020501]

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com