بسم الله الرحمن الرحيم
Wednesday 14th November 2018 | 05 ரபீஉல் அவ்வல் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
ஒருவழிப்பாதை இணைப்பு சாலையிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் அலட்சியம்! நகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன?” குழுமம் புகார் மனு!!அச்சிடுகமின்-அஞ்சல்
23 பிப்ரவரி 2018 மாலை 11:53

காயல்பட்டினம் ஒருவழிப்பாதையை இணைக்கும் சாலையிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் அலட்சியம் காண்பிக்கும் நகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-

காயல்பட்டினம் நகராட்சி பகுதியில் - பெரிய நெசவு தெரு, எல்.கே.லெப்பை தம்பி சாலை, பிரதான சாலை, ஹாஜியப்பா சாலை ஆகியவை ஒரு வழிப்பாதையாக உள்ளன.

சீரான போக்குவரத்திற்கு இடையூறாக - பிரதான சாலை மற்றும் எல்.கே.லெப்பை தம்பி சாலையை இணைக்கும் இணைப்பு சாலையில் (ஹாஜியப்பா பள்ளி சாலை - எல்.கே.மேனிலைப்பள்ளி இடையில்) பல்வேறு ஆக்கிரமிப்புகள் உள்ளன.

அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி, போக்குவரத்திற்கு வசதியாக சாலையை பராமரிக்க பல முறை - காயல்பட்டினம் நகராட்சியிடம் கோரிக்கை வைக்கப்பட்டும் இது வரை அதிகாரிகள் செவி சாய்க்கவில்லை.

கண்துடைப்புக்காக ரெய்டு என்ற பெயரில் செய்தி தாள்களில் வருவதற்காக நடவடிக்கை எடுத்துவிட்டு, ஆக்கிரமிப்புகள் செய்துள்ளவர்களிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு - ஆக்கிரமிப்புகளை தொடர அனுமதிக்கிறார்கள்.

எனவே - பல முறை நினைவூட்டல், கோரிக்கை மனுக்கள் வழங்கியும் தங்கள் கடமையை செய்யாமல் அலட்சியம் காட்டும் காயல்பட்டினம் நகராட்சி அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படியும், அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிட கோரியும் - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் திரு என்.வெங்கடேஷ் IAS அவர்களிடம், நேற்று (பிப்ரவரி 19, 2018), நடப்பது என்ன? குழுமம் சார்பாக மனு வழங்கப்பட்டது.

இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம். [மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]

[பதிவு: பிப்ரவரி 20, 2018; 11:00 pm]
[#NEPR/2018022004]

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com