வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் ஆங்கிலத்துறை சார்பாக சர்வதேச அளவில் ஒருநாள் பயிற்சிபட்டறை “Activity Based Teaching: Perspectives and Perceptions” என்ற தலைப்பில் 19.01.18 வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் நடைபெற்றது. ஆங்கிலம் முதலாமாண்டு மாணவி M.S. ஆமினா பர்ஹா கிராத் ஓத தமிழ்த்தாய் வாழ்த்துடன் பயிற்சிபட்டறை தொடங்கியது. கல்லூரி நிறுவனர் தலைவர் அல்ஹாஜ் வாவு S. செய்யது அப்துர் ரஹ்மான் தலைமையில், செயலர் ஹாஜி வாவு W.M.M. மொகுதஸிம் B.A (CS), துணைச்செயலர், ஹாஜி ஹாபீஸ் வாவு S.A.R. அஹமது இஸ்ஹாக் ஆலிம் M.A., Azhari (Egypt), இயக்குநர் முனைவர் திருமதி மெர்சி ஹென்றி M.A., Ph.D. ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆங்கிலத்துறைத்தலைவர் திருமதி S. கிருஷ்ணவேணி M.A., M.Phil., SET., வரவேற்புரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து கல்லூரியின் முதல்வர் முனைவர் திருமதி ஜெ. எல்லோரா M.Com., M.Phil., Ph.D. தொடக்க உரையாற்றினார். செயலர் ஹாஜி வாவு W.M.M. மொகுதஸிம் B.A., (CS), வாழ்த்துரை வழங்கினார். இப்பயிற்சிபட்டறைக்கு சிறப்பு விருந்தினராக சவுதி அரேபியா, ஜூஸான் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத்துறை பேராசிரியர் முனைவர் தமிமுல் அன்சாரி M.A., M.A (Ling)., M.Phil., L.L.B., Ph.D. "Activity Based Teaching: Perspectives and Perceptions" என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். இக்கருத்தரங்கிற்கு 10 கல்லூரியைச் சார்ந்த 80 மாணவிகளும், 37 பேராசிரியர்களும் என 117 பேர் கலந்து கொண்டனர். ஆங்கிலத்துறைப் பேராசிரியர் திருமதி தே. ப்ரவினா ப்ளஸ்சி ஃப்ளோரிடா M.A., M.Phil., நன்றியுரை வழங்கினார். முதலாமாண்டு ஆங்கிலத் துறை மாணவி M.T. ஜோகாரா நபிஸா துஆ ஓத நாட்டுப்பண்ணுடன் கருத்தரங்கம் இனிதே நிறைவுற்றது. கல்லூரியின் நிர்வாக உறுப்பினர்கள், பேராசிரியர்கள், ஆங்கிலத்துறை மாணவியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். Add comment |