بسم الله الرحمن الرحيم
Friday 27th April 2018 | 11 ஷஃபான் 1439AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
புதிய சாலைகள் போடுவதற்கு முன்பு பழைய சாலை தோண்ட படவேண்டும்: உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவு!அச்சிடுகமின்-அஞ்சல்
22 மார்ச் 2018 மாலை 09:44
அன்புடையீர்,
இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!
தமிழகம் முழுவதும் பழுதடைந்த சாலைகளை புனரமைக்கும் போது, பழைய சாலைகளை தோண்டாமல், அதன் மேலேயே புதிய சாலைகள் போடுவது வழமையாக உள்ளது. இதனால் சாலையின் உயரம் அதிகரித்து, வீடுகளுக்குள் தண்ணீர் வரும் நிலை பல இடங்களில் ஏற்படுகிறது.
இது சம்பந்தமாக - சிட்லபாக்கம் டவுன் பஞ்சாயத்து சார்ந்த பால சந்தர் என்பவர் பொது நல வழக்கு ஒன்றினை, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்திருந்தார். சிட்லபாக்கம் டவுன் பஞ்சாயத்து புதிய சாலைகளை போட டெண்டர் விட்டுள்ளதாகவும், அதில் பழைய சாலையை தோண்டிப்போட  வழிகாணப்படவில்லை என்றும் அவர், தனது மனுவில் தெரிவித்திருந்தார்.  
doc1
doc2_copy
doc3
doc4
doc5
புதிய சாலை போட இடைக்கால தடை விதித்திருந்த உயர்நீதிமன்றம், மார்ச் 9 அன்று - அவ்வழக்கில்  இறுதி ஆ
ணை பிறப்பித்ததது. அதன் முழு விபரம் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளது.
அந்த வழக்கு நடக்கும்போது டவுன் பஞ்சாயத்து சார்பாக பழைய சாலை தோண்டப்படும் என வழங்கப்பட்ட உத்திரவாதத்தை கருத்தில்கொண்டு, தலைமை நீதிபதி திருமதி இந்திரா பனர்ஜீ மற்றும் நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு - புதிய சாலைகள் போடும் ஒப்பந்ததாரர்களுக்கு பழைய சாலையை கண்டிப்பாக தோண்டி போடவேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கவேண்டும் என்றும், அவ்வாறு தோண்டிப் போடப்படுகிறதா என அதிகாரிகள் முறையாக கண்காணிக்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
தீர்ப்பு விபரம் இணைக்கப்பட்டுள்ளது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: மார்ச் 22, 2018; 9:30 pm]
[#NEPR/2018032201]

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com