بسم الله الرحمن الرحيم
Sunday 23rd September 2018 | 12 முஹர்ரம் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
நகர்நலப் பணிகளில் இணைந்து சேவையாற்றியோருக்கு கத்தர் கா.ந.மன்ற பொதுக்குழுவில் நன்றியறிவிப்பு!அச்சிடுகமின்-அஞ்சல்
25 ஏப்ரல் 2018 காலை 10:52

காயல்பட்டினம் நகர்நலப் பணிகளில் இணைந்து சேவையாற்றிய அனைவருக்கும், கத்தர் காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டம் குறித்து, அம்மன்றத்தின் செயலாளர் எம்.என்.முஹம்மத் ஸுலைமான் வெளியிட்டுள்ள நிகழ்வறிக்கை:- 

எமது கத்தர் காயல் நல மன்றத்தின் 32ஆவது பொதுக்குழுக் கூட்டம், இறையருளால் கடந்த 16.03.2018. வெள்ளிக்கிழமையன்று கத்தரில் நடைபெற்றது. ஹாஃபிழ் சோனா அமீர் சுல்தான் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். கே.எம்.டீ.ஷேக்னா லெப்பை வரவேற்புரையாற்றினார். கத்தர் காயல் நல மன்றத்தின் ‘கவிக்குயில்’ ஃபாயிஸ் இஸ்லாமிய இன்னிசை பாடினார். 

மன்றத் தலைவர் கே.எம்.எஸ்.மீரா ஸாஹிப் தலைமையுரையாற்றினார். கத்தர் காயல் நல மன்றத்தின் சார்பில், காயல்பட்டினத்தில் இதுநாள் வரை நடத்தப்பட்ட பல்வேறு நகர்நலத் திட்டப் பணிகளில் இணைந்து செயலாற்றிய காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை – ஹாங்காங் அமைப்பு, உறுதுணையாக இருந்த இதர காயல் நல மன்றங்கள், காயல்பட்டினம் நகரின் சமூக ஆர்வலர்கள், இக்ராஃ, ஷிஃபா ஆகிய அமைப்புகளின் கல்வி – மருத்துவ சேவைகளில் இணைந்து செயலாற்றிய அனைத்துலக காயல் நல மன்றங்கள், தனியார்வலர்கள் அனைவருக்கும் கத்தர் காயல் நல மன்றத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாக அவர் பேசினார். 

மன்றத்தின் இதுநாள் வரையிலான வரவு – செலவு கணக்கறிக்கையை, பொருளாளர் ஹுஸைன் ஹல்லாஜ் கூட்டத்தில் சமர்ப்பித்து, ஒப்புதலைப் பெற்றார். 

முன்னிலை வகித்த – மன்றத்தின் முன்னாள் தலைவர்களும், நடப்பு ஆலோசகர்களுமான எஸ்.ஏ.ஃபாஸுல் கரீம், எம்.என்.முஹம்மத் யூனுஸ் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். 

நன்றியுரைக்குப் பின், மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.எஸ்.முஹம்மத் லெப்பை பாக்கவீ உடைய துஆவுடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது. 

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தகவல்: 
எஸ்.கே.ஸாலிஹ்
(பிரதிநிதி, கத்தர் கா.ந.மன்றம்.)

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com