ஆக. 19 அன்று அபூதபீ கா.ந.மன்றம் & ஷிஃபா நடத்தும் முதலுதவி விழிப்புணர்வு & பயிற்சி முகாமில் பங்கேற்க ஆன்லைனில் பெயர் பதிவு செய்ய வசதி!அச்சிடுக
15 ஆகஸ்ட் 2018 மாலை 08:59

ஐக்கிய அரபு அமீரகம் – அபூதபீ காயல் நல மன்றம் சார்பில், நிகழும் ஆகஸ்ட் மாதம் 19ஆம் நாளன்று – முதலுதவி விழிப்புணர்வு & பயிற்சி முகாம் நடத்தப்படவுள்ளது. இம்முகாமில் பங்கேற்க இணையதளம் மூலமாகவும் பெயர் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அம்மன்றத்தின் தகவலறிக்கை:- 

அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும். 

எமது அபூதபீ காயல் நல மன்றம் சார்பாக நகரில் முதலுதவி விழிப்புணர்வு மற்றும் பயிற்சி முகாம் வரும் 19-08-2018 - ஞாயிற்றுக்கிழமை அன்று கீழ் கண்ட நிகழ்முறை படி நடைபெற உள்ளது. முகாமில் உங்கள் வருகையை 

https://goo.gl/forms/T6GHm8enI1P4Jgdy2 

என்ற இணையதளப் பக்கத்தில் பதிவு செய்து பயன் பெறுமாறு வேண்டிக்கொள்கிறோம். 

முகாம் அன்று அபூதபீ மன்றம் சார்பாக மருத்துவ முதலுதவி கையேடு ஒன்றும் வெளியிடப்படவுள்ளது.பொதுமக்கள் அதனை பெற்று பயன்பெறவும் அன்போடு வேண்டிக்கொள்கிறோம். 

அழைப்பின் மகிழ்வில். 
தலைவர் மற்றும் அனைத்து உறுப்பினர்கள். 
அபூதபீ காயல் நல மன்றம்-UAE 

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தகவல்: 
அபூதபீ கா.ந.மன்றம் சார்பாக... 
A.R.ரிஃபாஈ (செய்தி தொடர்பாளர்) &
அப்துல் காதிர் பாதுல் அஸ்ஹப் (முகாம் ஒருங்கிணைப்பாளர்)

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh