بسم الله الرحمن الرحيم
Friday 21st September 2018 | 10 முஹர்ரம் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
வாவு வஜீஹா வனிதையர் கலை மற்றும் கல்லூரியில் 72ஆவது விடுதலைநாள் விழா!அச்சிடுகமின்-அஞ்சல்
05 செப்டம்பர் 2018 மாலை 12:19

 

காயல்பட்டணம், வாவு வஜீஹா வனிதையர் கலை மற்றும் கல்லூரியில் 72ஆவது விடுதலைநாள் விழா 15.08.2018 அன்று காலை 8.00 மணியளவில், மூன்றாமாண்டு வணிகவியல் மாணவி B.M. சேகு ஜபிரா ஓத, தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. மாணவபேரவைத்தலைவி மூன்றாமாண்டு இயற்பியல் மாணவி P. கோல்டா ஏஞ்சலின் வரவேற்புரை வழங்கினார்.

DSC_0291

திருச்செந்தூர், கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி உடற்கல்வி இயக்குநர் திருமதி G ரெடம்ட்டா நிஷாந்தி B.Sc., B.Ed., M.P.Ed., M.Phil., PGDIY சிறப்பு விருந்தினராக வருகை தந்து, மூவர்ணக்கொடியேற்றி, மாணவியரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். கொடிப்பாடலுக்குப்  பின் மாணவப்பேரவைத்தலைவி அனைவரையும் உறுதிமொழி ஏற்கச்செய்தார். சிறப்பு விருந்தினர் தம் உரையில் பெண் கல்வியின் இன்றியமையாமை, விளையாட்டில் பெண்களின் ஈடுபாடு, பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காத்தல், நாட்டுக்காகப் பணிசெய்தல் ஆகிய கருத்துகளை வலியுறுத்தினார்.
DSC_0305
தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவ்விழாவில் கல்லூரி நிறுவனர் தலைவர் அல்ஹாஜ் வாவு S. செய்யது அப்துர் ரஹ்மான் தலைமையுரை ஆற்றினார். கல்லூரிச் செயலர் ஹாஜி வாவு W.M.M. மொகுதஸிம் B.A., (CS), துணைச்செயலர், ஹாஜி ஹாபீஸ் வாவு S.A.R. அஹமது இஸ்ஹாக் ஆலிம் M.A., Azhari (Egypt), முதல்வர் முனைவர் திருமதி R.C. வாசுகி M.A., Ph.D., DGT.  கல்லூரி நிர்வாக உறுப்பினர்கள், உதவிப் பேராசிரியர்கள், மாணவிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com