மண்டலம் வாரியாக அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காயல்பட்டினம் நகராட்சியின் சொத்து வரி! உங்கள் தெரு எந்த மண்டலத்தில்? | ![]() | ![]() |
16 செப்டம்பர் 2018 காலை 11:27 |
காயல்பட்டினம் நகராட்சி மூலம் வெளியான செப்டம்பர் 10 நாளிதழ் விளம்பரப்படி - நகரின் சொத்து வரி தொகை, 200 சதவீதத்திற்கும் மேலாக உயர்த்தப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளது.* இது அரசாணை அனுமதித்துள்ள அளவை விட மிக அதிகமாகும். *30 தினங்களுக்குள், பொது மக்கள் தங்கள் ஆட்சேபனையை பதிவு செய்யவில்லை என்றால் - புதிய வரி அமலுக்கு வரும்.* இதன் விளைவாக தற்போது 1000 ரூபாய் சொத்து வரி செலுத்துவோர், 3000 ரூபாய் வரை சொத்து வரி செலுத்தும் சூழல் எழலாம். இந்த வரி உயர்வை எதிர்த்து, *நடப்பது என்ன? குழுமம்* தனது ஆட்சேபனையை - காயல்பட்டினம் நகராட்சிக்கு வழங்கியுள்ளது. இந்த வரி உயர்வை ஆதரிக்காத பொது மக்கள், தங்கள் ஆட்சேபனையை - காயல்பட்டினம் நகராட்சி ஆணையரிடம் சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நகரின் அனைத்து பகுதிகளும், மூன்று மண்டலங்களாக (A,B,C) பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி புதிய *மண்டலம் A பகுதிகளுக்கு ரூபாய் 1.50/சதுர அடி, மண்டலம் B பகுதிகளுக்கு ரூபாய் 0.80/சதுர அடி, மண்டலம் C பகுதிகளுக்கு ரூபாய் 0.60/சதுர அடி* - என திட்டமிடப்பட்டுள்ளது. _நகராட்சி அறிவிப்பும், எந்த தெருக்கள், எந்த மண்டலத்திற்குள் வருகிறது என்ற விபரமும் இணைக்கப்பட்டுள்ளது._ =================== *மண்டலம் A (ZONE A)* =================== கொட்டமடக்கி எக்ஸ்டென்ஷன் ஆலம் குருசடி - 1 குருசடி - 2 சிவன் கோவில் தெரு ஹாஜியப்பா தைக்கா தெரு எல்.எப்.சாலை (வார்டு 13) தைக்கா தெரு மருத்துவர் தெரு குத்துக்கல் தெரு வண்ணா குடி கடை தெரு சதுக்கை தெரு கீழநெய்னார் தெரு காயிதேமில்லத் நகர் காயிதேமில்லத் நகர் முதல் தெரு நெய்னார் தெரு சின்ன நெசவு தெரு கருத்தம்பி மரைக்காயர் தெரு பெரிய நெசவு தெரு =================== *மண்டலம் B (ZONE B)* =================== கோமான் நடுத்தெரு கோமான் மேலத்தெரு கோமான் கீழத்தெரு அருணாச்சலபுரம் குறுக்குத்தெரு கீமூ கச்சேரி தெரு ஆறாம்பள்ளி தெரு மொஹிதீன் தெரு மொகுதூம் தெரு சித்தன் தெரு துஷ்டராயர் தெரு அம்பல மரைக்காயர் தெரு கீழநெய்னார் தெரு பண்டகசாலைக்காரனார் தெரு கறுப்படையார்பள்ளி வட்டம் முத்துவாப்பா தைக்கா தெரு பண்டகசாலை தெரு சொலுக்கார் தெரு கடற்கரை தெரு அப்பாபள்ளி தெரு கொச்சியார் தெரு பரிமார் தெரு அலியார் தெரு வாணியக்குடி தெரு ஓடக்கரை மொகுதூம் அலாவுதீன் தோட்டம் பூந்தோட்டம் வீரசடச்சி அம்மன் கோவில் தெரு விசாலாட்சி அம்மன் கோவில் தெரு பாஸ் நகர் எல்.எப். சாலை (1) (வார்டு 14) அழகாபுரி அழகாபுரி தெற்கு தெரு மங்கலவிநாயகர் கோவில் தெரு சீதக்காதி நகர் உச்சிமாகாளியம்மன் கோவில் தெரு புதுக்கடை தெரு காட்டு தைக்கா தெரு திருச்செந்தூர் சாலை குளம் சாஹிப் தம்பி தோட்டம் கோமன்புதூர் வன்னார்குடி தெரு சேதுராஜா தெரு முத்தாரம்மன் கோவில் தெரு =================== *மண்டலம் C (ZONE C)* =================== அருணாச்சலபுரம் ஆதிதிராவிடர் காலனி கடையக்குடி தேங்காபண்டகசாலை தெரு கண்டிபிட்சை தோட்டம் தைக்காபுரம் மேல நெசவு தெரு மங்களவாடி ஓடக்கரை வடக்கு தெரு வண்டிமலைச்சி அம்மன் கோவில் தெரு ரத்தினாபுரி கீழலட்சுமிபுரம் லட்சுமிபுரம் பைபாஸ் சாலை இவண், நிர்வாகிகள், நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம். [மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்] [பதிவு: செப்டம்பர் 15, 2018; 3:30 pm] [#NEPR/2018091501] Add commentகாயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும். |
சமீபத்திய கட்டுரைகள்
![]() | பிப் 14ஆம்தேதி . காதலர் தினம்..? ஓர் இஸ்லாமிய பார்வை!! |
![]() | எறும்பின் குற்றம்..! கட்டுரை!! |
![]() | ஒவ்வொருவரும் கண்காணிக்கப்படுகிறோம்! கட்டுரை!! |
![]() | இன்று போதை ஒழிப்பு தினம்! போதை என்னும் அழிவுப்பாதை! கட்டுரை!! |
![]() | வெயிலைச் சமாளிப்பது எப்படி? கட்டுரை!! |
ஏகத்துவம்
![]() | அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை,அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்! |
![]() | "வெள்ளை வெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்கிறேன்! அதன் இரவும் பகலைப் போன்றது!! (நபிமொழி) |