இ சேவை மையம்: காயலபட்டினத்தில் இருந்து மாற்றப்படக்கூடாது என கோரி மாவட்ட ஆட்சியருக்கு பொது மக்கள் - ஈமெயில், FAX குறுஞ்செய்தி மற்றும் WHATSAPP செய்தி அனுப்ப வேண்டுகோள்! | ![]() | ![]() |
16 செப்டம்பர் 2018 காலை 11:35 |
இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக! காயல்பட்டினம் நகராட்சி வளாகத்தில், TACTV என்ற அரசு நிறுவனம் மூலம், ஒரு ஊழியரை கொண்டு, இசேவை மையம், ஜூலை 15, 2015 முதல் இயங்கி வருகிறது. இந்த மையம் மூலம் - 60 க்கும் மேற்பட்ட வருவாய்த்துறை, மின்வாரியத்துறை உட்பட பல்வேறு துறைகள் சார்ந்த சேவைகளை பொது மக்கள் பெறமுடியும். 50,000 மக்கள்தொகை கொண்ட இரண்டாம் நிலை நகராட்சியான காயல்பட்டினம் நகராட்சியில், இசேவை மையங்கள் மூலம், பல மக்கள் பல்வேறு சேவைகளை பெற்று வந்தனர். இதனால் - நீண்ட தூரம் சென்று, இடை தரகர்களுக்கு அவசியம் இல்லாமல் பணம் கொடுத்து சான்றிதழ் பெறவேண்டிய சூழல் தவிர்க்கப்பட்டு வந்தது. நிலைமை இவ்வாறிருக்க, புதிதாக துவக்கப்பட்டுள்ள ஏரல் தாலுகாவிற்கு, காயல்பட்டினம் நகராட்சியில் இயங்கி வரும் இ சேவை மையம் மாற்றப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அனைத்து அதிகாரிகளுக்கும் - நடப்பது என்ன? குழுமம் சார்பாக கோரிக்கை மனு வழங்கப்பட்டுள்ளது. மேலும் - இது சம்பந்தமாக, நகரின் அனைத்து ஜமாஅத்துகளும், பொது நல அமைப்புகளும் கோரிக்கை வைக்க வேண்டி, ஜமாஅத்துகளுக்கும், பொது நல அமைப்புகளுக்கும், ஊர் நல குழுக்களுக்கும் - நடப்பது என்ன? குழுமம் சார்பாக, கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. இக்கோரிக்கையை வலியுறுத்தி பொதுமக்கள் - மாவட்ட ஆட்சியருக்கு, -- ஈமெயில் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்கு தாங்கள் JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்) -- FAX (0461-2340606) -- குறுஞ்செய்தி (SMS)(+91 94441 86000) -- WHATSAPP தகவல் (+91 94441 86000) அனுப்ப கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவண், நிர்வாகிகள், நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம். [மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்] [பதிவு: செப்டம்பர் 16, 2018; 10:45 am] [#NEPR/2018091601] -- Add commentகாயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும். |
சமீபத்திய கட்டுரைகள்
![]() | பிப் 14ஆம்தேதி . காதலர் தினம்..? ஓர் இஸ்லாமிய பார்வை!! |
![]() | எறும்பின் குற்றம்..! கட்டுரை!! |
![]() | ஒவ்வொருவரும் கண்காணிக்கப்படுகிறோம்! கட்டுரை!! |
![]() | இன்று போதை ஒழிப்பு தினம்! போதை என்னும் அழிவுப்பாதை! கட்டுரை!! |
![]() | வெயிலைச் சமாளிப்பது எப்படி? கட்டுரை!! |
ஏகத்துவம்
![]() | அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை,அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்! |
![]() | "வெள்ளை வெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்கிறேன்! அதன் இரவும் பகலைப் போன்றது!! (நபிமொழி) |