بسم الله الرحمن الرحيم
Friday 14th December 2018 | 05 ரபீஉல் ஆஹிர் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
காயல்பட்டினத்தில் இருந்து இ சேவை மாற்றல் விஷயம்! மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு திங்களன்று கொண்டு செல்வதாக துணை தாசில்தார் உறுதி!!அச்சிடுகமின்-அஞ்சல்
16 செப்டம்பர் 2018 காலை 11:39
காயல்பட்டினம் நகராட்சி வளாகத்தில், TACTV என்ற அரசு நிறுவனம் மூலம், ஒரு ஊழியரை கொண்டு, இசேவை மையம், ஜூலை 15, 2015 முதல் இயங்கி வருகிறது.* இந்த மையம் மூலம் - *60 க்கும் மேற்பட்ட வருவாய்த்துறை, மின்வாரியத்துறை உட்பட பல்வேறு துறைகள் சார்ந்த சேவைகளை  பொது மக்கள் பெறமுடியும்.
50,000 மக்கள்தொகை கொண்ட இரண்டாம் நிலை நகராட்சியான காயல்பட்டினம் நகராட்சியில், இசேவை மையங்கள் மூலம், பல மக்கள் பல்வேறு சேவைகளை பெற்று வந்தனர். இதனால் - நீண்ட தூரம் சென்று, இடை தரகர்களுக்கு அவசியம் இல்லாமல்  பணம் கொடுத்து சான்றிதழ் பெறவேண்டிய சூழல் தவிர்க்கப்பட்டு வந்தது.
நிலைமை இவ்வாறிருக்க, *புதிதாக துவக்கப்பட்டுள்ள ஏரல் தாலுகாவிற்கு, காயல்பட்டினம் நகராட்சியில் இயங்கி வரும் இ சேவை மையம் மாற்றப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.* 
*தூத்துக்குடி மாவட்டத்தின் மூன்றாவது பெரிய ஊர், திருச்செந்தூர் தாலுகாவில் மிகப்பெரிய ஊரான  காயல்பட்டினம் நகராட்சியில் இயங்கும் இசேவை மையத்தை மூடும் முயற்சியை, 50,000 மக்களின் நலனை கருத்தில் கொண்டு, தமிழக  அரசு கைவிட வேண்டும்* என எனக்கோரி - *தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அரசு செயலர், தகவல் தொழில்நுட்பவியல் துறை அரசு செயலர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், திருச்செந்தூர் கோட்டாட்சியர், திருச்செந்தூர் வட்டாச்சியர்* ஆகியோருக்கு *நடப்பது என்ன? குழுமம்* சார்பாக - செப்டம்பர் 12 அன்று மனு அனுப்பப்பட்டது.
deb_th
இது சம்பந்தமாக _திருச்செந்தூர் தாலுகா துணை தாசில்தார்_ *திரு குமாரசாமி* அவர்களை நேரில் சந்தித்து, நடப்பது என்ன? குழுமம் சார்பாக மீண்டும் வலியுறுத்தப்பட்டது. இச்சந்திப்பின் போது - _தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்_ *திரு சந்தீப் நந்தூரி IAS* அவர்களின் கவனத்திற்கு இப்பிரச்சனையை, திங்களன்று கொண்டு செல்வதாக துணை தாசில்தார், *நடப்பது என்ன?* குழுமத்திடம் உறுதி அளித்தார்.
இவண்,
நிர்வாகிகள்
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: செப்டம்பர் 14, 2018; 10:45 pm]
[#NEPR/2018091403]

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com