வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் மாநில அளவிலான திறன்மிகு கருத்தரங்கம்!அச்சிடுக
16 செப்டம்பர் 2018 காலை 11:59

 காயல்பட்டணம், வாவு வஜீஹா வனிதையர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 06.09.2018 வியாழக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் வணிக செயலாற்றியல் துறை சார்பாக மாநில அளவிலான திறன்மிகு கருத்தரங்கம் நடைபெற்றது. இரண்டாம் ஆண்டு வணிக செயலாற்றியல் துறை மாணவி S.S. பாத்திமா சுல்தானா கிராத் ஓத, தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆரம்பமானது. கல்லூரி நிறுவனர் தலைவர் அல்ஹாஜ் வாவு S. செய்யது அப்துர் ரஹ்மான் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். கல்லூரியின் துணைச்செயலர் ஹாஜி ஹாபிஸ் வாவு S.A.R. அஹமது இஸ்ஹாக் ஆலிம் M.A., Azhari (Egypt), கல்லூரி முதல்வர் முனைவர் திருமதி R.C. வாசுகி M.A., Ph.D., DGT. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வணிக செயலாற்றியல் துறைத்தலைவர் S.A. ரஹ்மத் ஆமினா பேகம் MBA., M.Phil., MBA(HR), வரவேற்புரை வழங்கி சிறப்பு விருந்தினர் Mr. பிரவின் குமார் Head, Wild Creek Web Studio Pvt. Ltd. அவர்களை அறிமுகப்படுத்தினார். கல்லூரி நிறுவனர் தலைவர் அல்ஹாஜ் வாவு S. செய்யது அப்துர் ரஹ்மான் சிறப்பு விருந்தினருக்கு நினைவுப் பரிசினை வழங்கினார். சிறப்பு விருந்தினர் டிஜிட்டல் சகாப்தத்தில் விளம்பரம் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். 
  நிறைவு விழாவில் வணிக செயலாற்றியல் துறையின் துணை செயலாளர் R. ஜெய விக்னேஷ்வரி M.Com., MBA, வரவேற்புரை வழங்கினார். கல்லூரியின் துணைச்செயலர் ஹாஜி ஹாபிஸ் வாவு S.A.R. அஹமது இஸ்ஹாக் ஆலிம் M.A., Azhari (Egypt) நிறைவுரை வழங்கினார். இக்கருத்தரங்கில் 9 கல்லூரிகளைச் சார்ந்த 85 மாணவியரும், 8 ஆசிரியப் பெருமக்களும் கலந்து கொண்டு பயன்பெற்றனர். பங்குபெற்ற மாணவிகளிடையே பின்னூட்டம் பெறப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
வணிக செயலாற்றியல் துறையின் துணை செயலாளர் A. சுப்ரியா MBA, நன்றியுரை வழங்கினார். மூன்றாம் ஆண்டு வணிக செயலாற்றியல் துறை மாணவி M.A.K. சாகுல் ஹமீது உம்மா துஆ ஓத, தேசீய கீதத்துடன் கருத்தரங்கம் செவ்வனே நிறைவு பெற்றது.

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh