காயல்பட்டினத்தில் காலை முதல் வாக்குப்பதிவு சுறுசுறுப்புடன் நடைபெற்று வருகிறது!அச்சிடுக
18 ஏப்ரல் 2019 மாலை 03:35

தமிழகத்தில் 38 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். ஒருசில இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் ஏற்பட்ட கோளாறால், வாக்குப்பதிவில் தாமதம் ஏற்பட்டது.

WhatsApp_Image_2019-04-18_at_15.17.11_copy_copy

WhatsApp_Image_2019-04-18_at_15.17.20_copy

WhatsApp_Image_2019-04-18_at_15.17.45

WhatsApp_Image_2019-04-18_at_15.18.31_copy_copy

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்திலும் இன்று 18 ஆம் தேதி காலை ஏழு மணி முதல் அனைத்து வாக்கு சாவடிகளிலும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

காலை 9 மணி நிலவரப்படி 13.48 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தது. இதனையடுத்து காலை 11 மணி நிலவரப்படி, 30.62 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில் 1 மணி நிலவரப்படி 39.49 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. தற்போது 3 மணி நிலவரப்படி 52.02% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ இந்த தகவலை தெரிவித்தார்.

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh