بسم الله الرحمن الرحيم
Friday 05th June 2020 | 13 ஷவ்வால் 1441AH
பதாகை
news menu left
news menu right
 • Google Bookmarks
 • Twitter
 • Windows Live
 • Facebook
 • MySpace
 • deli.cio.us
 • Digg
 • Newsvine
 • reddit
 • StumbleUpon
 • Yahoo! Bookmarks
 • Yigg
7வது நாட்களாக மூடப்பட்டு இருக்கும் காயல்பட்டினம் அரசு மருத்துவமனை!அச்சிடுகமின்-அஞ்சல்
10 ஏப்ரல் 2020 மாலை 03:15

மெகா அமைப்பு முன்வைத்துவரும் தொடர் கோரிக்கையினால் அரசு நடவடிக்கை!

அன்புடையீர்,

இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!

காயல்பட்டினம் அரசு மருத்துவமனை - மூடப்பட்டு இன்றோடு 7 வது நாள். அங்கு பணிப்புரியும் ஒரு மருத்துவருக்கு கொரோனா வைரஸ் நோய் ஊர்ஜிதம் என கூறப்பட்டு - இம்மருத்துவமனை கடந்த ஏப்ரல் 4 முதல் மூடப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக - தூத்துக்குடி மாவட்ட சுகாதாரத்துறையின் மூத்த அதிகாரி - ஏப்ரல் 6 அன்று வழங்கிய தகவலில், மீண்டும் மருத்துவமனையை திறந்திட குறைந்தது 10 தினங்கள் ஆகும் என்று மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) நிர்வாகியிடம் தெரிவித்தார்.

இவ்வளவு காலதாமதம் ஆனால் - தினமும் சுமார் 500 பேர் புற நோயாளிகள் என்ற முறையில் பயன்பெற்ற நிலையில், கடுமையான சிரமத்திற்கு உள்ளாவார்கள்; மேலும் - மருந்துகளுக்காக அரசு மருத்துவமனையை நாடிவரும் மக்களுக்கு பெரும் சிரமத்தை இது ஏற்படுத்தும்( என்ற காரணத்தால் - இப்பிரச்சனையை அன்றே (ஏப்ரல் 6) - மெகா அமைப்பு, தமிழக அரசின் உயர் அதிகாரிகளுக்கு கொண்டு சென்றது.

மெகா அமைப்புக்கு - ஏப்ரல் 6 அன்று நேரடியாக பதில் வழங்கிய தமிழக அரசு சுகாதாரத்துறையின் செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் IAS - இது குறித்து தான் - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் திரு சந்தீப் நந்தூரி IAS இடம் பேசுவதாக தெரிவித்தார். அதன் பிறகு - காயல்பட்டினம் அரசு மருத்துவமனையை தினமும் கிருமி நாசினிகள் மூலம் சுத்தப்படுத்தும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன.

இதற்கிடையே - காலதாமதம் இல்லாமல் உடனடியாக மருத்துவமனை மீண்டும் திறக்கப்படவேண்டும் என்ற நோக்கில் - பொதுமக்களையும், சமூக ஊடகங்கள் வாயிலாக - உயர் அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்திட, மெகா அமைப்பு கோரிக்கை வைத்தது. இது குறித்து ஊடகத்துறையினரும் - அதிகாரிகளிடம் வினவி வந்தனர்.

ஏப்ரல் 8 அன்று இது சம்பந்தமாக மெகா நிர்வாகிகளிடம் பேசிய சுகாதாரத்துறையினர், ஞாயிற்றுக்கிழமைக்கு முன்னர் மருத்துவமனையை திறந்திட பணிகள் நடப்பதாக தெரிவித்தனர்.

நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர், காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து 6 நாட்கள் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. அதனை அரசு மருத்துவக் கல்லூரி டாக்டர்கள் ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கிய பிறகு மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இன்று தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி - சிறப்பு துறை (SOCIAL AND PREVENTIVE MEDICINE DEPARTMENT), காயல்பட்டினம் அரசு மருத்துவமனையை - ஆய்வு செய்ய உள்ளதாக, சுகாதாரத்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது. அதற்கு முன்னோட்டமாக, இன்றும் - காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் சுத்தம் செய்யும் பணிகள் - நடைபெற்றுவருகின்றன.

இவண்,

நிர்வாகிகள், மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டுஅமைப்பு (MEGA).

[அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]

நடப்பது என்ன? - செயலியினை (MOBILE APP) இதுவரை நீங்கள் பதிவிறக்கம் செய்யவில்லையா?

கீழுள்ள இணைப்புகள் மூலம் - பதிவிறக்கம் செய்யவும்.

ANDROID APP:

https://play.google.com/store/apps/details?id=org.kayal.nadappathuenna

IOS APP:

விரைவில்

[பதிவு: ஏப்ரல் 10, 2020; 2:00 pm]

[#NEPR/2020041004]

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com