காயல்பட்டினம் தெருக்களில் அமைந்துள்ள கடைகளை ஒருங்கிணைக்க மெகா அமைப்பு திட்டம்!அச்சிடுக
10 ஏப்ரல் 2020 மாலை 03:41

காயல்பட்டினம் தெருக்களில் அமைந்துள்ள கடைகளை ஒருங்கிணைக்க மெகா அமைப்பு திட்டம்!

அன்புடையீர்,

இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!

கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக நாட்டில் அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவு பல்வேறு வகைகளில் பொது மக்களுக்கு சிரமங்களை கொடுத்து வருகிறது.

அத்தியாவசிய பொருட்களை தினமும் பெற பொது மக்கள் பல்வேறு கஷ்டங்களை சந்திக்கிறார்கள். மொத்த வியாபாரிகள் - பொருட்களை முடக்கி வைத்திருப்பதாகவும், சிறு வியாபாரிகளுக்கு சீராக கொடுப்பது இல்லை என்றும் புகார்கள் உள்ளன.

இதற்கிடையே - சில தினங்களுக்கு முன்பு, நகரின் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு - தொலைபேசி வழியாக மட்டும் ஆர்டர் செய்து, இல்லத்திற்கு பொருட்களை கொடுத்தனுப்பலாம் - என அறிவிக்கப்பட்டது.

இது சாத்தியமற்ற விஷயம்; ஏழை, எளிய, நடுத்தர மக்களின் பிரச்சனைகளை சிந்திக்காமல் வெளியிடப்பட்ட அறிவிப்பு என தமிழக அரசின் அனைத்து மட்டத்திலும் மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) எதிர்ப்பு பதிவு செய்ததை அடுத்து - தெருக்களில் அமைந்துள்ள கடைகள் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடு தளர்த்தப்பட்டது.

இருப்பினும் - தெருக்களில் அமைந்துள்ள பல கடைகள், அத்தியாவசிய பொருட்களை தாங்கள் பெறுவதில் பல்வேறு சிரமங்கள் இருப்பதாக கூறுகிறார்கள். குறிப்பாக - நகரின் மொத்த வியாபாரிகள் பொருட்களை நியாயமான விலையில் தங்களுக்கு தர மறுக்கிறார்கள் என கூறுகிறார்கள்.

இதனை கருத்தில் கொண்டு - மெகா அமைப்பு, நகரின் அனைத்து தெருக்களிலும் அமைந்துள்ள கடைகளை ஒருங்கிணைத்து, அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை அறிந்து - இறைவன் நாடினால், தீர்வுகள் கண்டிட திட்டமிட்டுள்ளது.

இதற்காக "காயல் கடைகள் ஒருங்கிணைப்பு" என்ற சிறப்பு WHATSAPP குழுமத்தை உருவாக்கியுள்ளது.

இந்த குழுமத்தில் - இணைய விரும்பும் தெருக்களில் அமைந்துள்ள கடைகளின் உரிமையாளர்கள், கீழ்க்காணும் எண்களை தொடர்புக்கொண்டு - தங்களை இணைத்துக்கொள்ளலாம்.

(1) S.அப்துல் வாஹித் (+91 98421 85917)

(2) A.S.புஹாரி (+91 96001 83570)

இவண்,

நிர்வாகிகள், மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டுஅமைப்பு (MEGA).

[அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]

நடப்பது என்ன? - செயலியினை (MOBILE APP) இதுவரை நீங்கள் பதிவிறக்கம் செய்யவில்லையா?

கீழுள்ள இணைப்புகள் மூலம் - பதிவிறக்கம் செய்யவும்.

ANDROID APP:

https://play.google.com/store/apps/details?id=org.kayal.nadappathuenna

IOS APP:

விரைவில்

[பதிவு: ஏப்ரல் 10, 2020; 10:30 am]

[#NEPR/2020041003]

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh