بسم الله الرحمن الرحيم
Friday 05th June 2020 | 13 ஷவ்வால் 1441AH
பதாகை
news menu left
news menu right
  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
இல்லத்தில் இருப்போம்! ஈருலக நன்மையை வெல்வோம்!!வினாடி வினா போட்டி!!அச்சிடுகமின்-அஞ்சல்
12 ஏப்ரல் 2020 மாலை 05:18

இல்லத்தில் இருப்போம்!

ஈருலக நன்மையை வெல்வோம்!!

சகோதர சகோதரிகளுக்கான வினாடி வினா போட்டி!!

நமது ஐ.ஐ.எம் டிவி மற்றும் ஆன்லைன் நேரலை மூலமும் வினாடி வினா போட்டி நடைபெறுகிறது.

உலகெங்கும் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமுலில் இருப்பதினால் நாமும் கடந்த சில வாரங்களாக வீட்டிலேயே இருந்து வருகிறோம்.

தொழுகை, இபாதத் என நமது நேரங்களை கழித்து வருகிறோம். அல்ஹம்துலில்லாஹ்.

இன்னும் இரு வாரங்கள் ஊரடங்கை நீட்டிப்பு செய்யவிருக்கும் தற்போதைய நிலையில்..

நாம் அனைவரும் வீட்டில் ஓய்வாக இருக்கும் சூழலில் நம் விலைமதிப்பற்ற நேரத்தை அல்லாஹ்விற்கு உவப்பாக செலவழிக்கும் நோக்கத்தில் நமது அல்ஜாமிவுல் அஸ்ஹர் சார்பில் வாரமிருமுறை மார்க்க சொற்பொழிவுடன் கூடிய வினாடி வினா போட்டி இன்ஷா அல்லாஹ் நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியை அஷ்ஷெய்ஹ் அல் ஹாஃபிழ் M.M. நூஹ் அல்தாஃபி அவர்கள் நடத்தி தர உள்ளார்கள்.

இன்ஷா அல்லாஹ் துவக்க நிகழ்ச்சி நாளை ஏப்ரல் 13ஆம் தேதி திங்கட்கிழமை தொடங்கும்.

இன்ஷாஅல்லாஹ் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மற்றும் வியாழக்கிழமை களில் இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது

இந்நிகழ்ச்சியை நமது ஐ.ஐ.எம் உள்ளூர் கேபிள் (TV) தொலைக்காட்சி மூலமும்,

 

IIM channel

AMN - CH 69

TCCL - CH 163

கீழ்காணும் ஆன்லைன் இணைப்பு மூலமும் பார்த்து பயனடையலாம்.

 

https://www.youtube.com/c/AljamiulAzharJumahMasjid/live

 

வினாடி வினா போட்டியின்போது கீழ்காணும் தொலைப்பேசியை தொடர்புக் கொண்டு போட்டியில் கலந்துக் கொள்ளலாம்.

+91 4639 - 280100

வெற்றிப்பெறும் போட்டியாளர்களுக்கு இன்ஷா அல்லாஹ் ஊக்க பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

ஊரடங்கில் நம் உள்ளத்தை ஊக்கமாக வைத்து கொள்ள இது ஒரு உன்னத முயற்சி..

பொதுமக்கள் அனைவரும் இந்த சிறப்பான வாய்ப்பினை பயன்படுத்தி இறைப்பொருத்தத்தை அடைந்து கொள்ள அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இவண்

அல்ஜாமிவுல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித்

காயல்பட்டினம்

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com