بسم الله الرحمن الرحيم
Friday 05th June 2020 | 13 ஷவ்வால் 1441AH
பதாகை
news menu left
news menu right
 • Google Bookmarks
 • Twitter
 • Windows Live
 • Facebook
 • MySpace
 • deli.cio.us
 • Digg
 • Newsvine
 • reddit
 • StumbleUpon
 • Yahoo! Bookmarks
 • Yigg
DCW தொழிற்சாலை மூலம் நகர தெருக்களில் தூவப்படும் கிருமி நாசினிகள்! பிரயோஜனமற்றவை, ஆபத்தானவை என விஞ்ஞானிகள் கருத்து! அவற்றை நிறுத்திட மெகா அமைப்பு - ஆட்சியரிடம் வேண்டுகோள்!அச்சிடுகமின்-அஞ்சல்
12 ஏப்ரல் 2020 மாலை 05:29

DCW தொழிற்சாலை மூலம் நகர தெருக்களில் தூவப்படும் கிருமி நாசினிகள்!

பிரயோஜனமற்றவை, ஆபத்தானவை என விஞ்ஞானிகள் கருத்து!

அவற்றை நிறுத்திட மெகா அமைப்பு - ஆட்சியரிடம் வேண்டுகோள்!

அன்புடையீர்,

இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!

காயல்பட்டினம் நகராட்சி பகுதிகளில் கடந்த 29 ஆம் தேதி முதல், டேங்கர் லாரி மூலம் - கிருமி நாசினி தூவப்படுகிறது . நகராட்சி மேற்பார்வையில் - DCW தொழிற்சாலை உதவியுடன் இந்த கிருமி நாசினிகள் - நகர தெருக்களில் தூவப்படுகிறது. இந்த பணியினை - நகரில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் திரு சந்தீப் நந்தூரி IAS - 29-3-2020 அன்று - துவக்கி வைத்தார்.

நகரில் DCW தொழிற்சாலை மூலம் தூவப்படும் இந்த கிருமி நாசினி என்ன என வினவியத்தில், காயல்பட்டினம் நகராட்சி அதிகாரிகள், SODIUM HYPOCHLORITE என்ற ரசாயனம் என தெரிவித்தார்கள். இதனை - அந்நிறுவனத்தின் ஊழியர்கள், நகரில் பலருக்கு அனுப்பிய செய்தியும் உறுதி செய்துள்ளது.

037867bc-169d-4517-ae61-1c55b67fdc9f

 

இந்த ரசாயனத்தின் தன்மை என்ன, எதற்கு இது பயன்படுத்தப்படும் போன்ற விபரங்களை மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) - தீவிரமாக விசாரித்தது.

SODIUM HYPOCHLORITE என்பது பொதுவாக பவுடர் வடிவில் கிடைக்கும் பொருள். இருப்பினும் - தண்ணீரில் அதனை சேர்த்து, சுத்தம் செய்யும் பணிகளுக்கு (DISINFECTANTS) இதனை பயன்படுத்துவது உண்டு. இது போன்ற ரசாயனங்கள், உட்புற பகுதிகளை (INDOORS) சுத்தம் செய்ய பயன்படுத்தப்படுகின்றன.

கொரோனா வைரசுக்கு எதிராக இந்த நாசினி பிரயோஜனமாக இருக்குமா? இது குறித்து - அமெரிக்காவின் முன்னணி விஞ்ஞான அமைப்பான American Association for the Advancement of Science உடைய SCIENCE பத்திரிகை இணையதளம் என்ன சொல்கிறது என பார்ப்போம்.

அந்த அமைப்பின் இணையத்தளத்தில் மார்ச் 12, 2020 அன்று Robert F. Service என்ற நிருபர் வெளியிட்டுள்ள செய்தியில் கீழ்க்காணும் தகவலை தருகிறார்.

... ஷாங்ஹாய், குவாங்ஜு (தென் கொரியா) போன்ற இடங்களில் இந்த ரசாயனம் பயன்படுத்தப்பட்டதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.இருப்பினும் - வெளிப்புற பகுதிகளில் அவற்றின் பயன் உள்ளதா என்பது தெளிவில்லை ... மேலும், அதனால் சிலருக்கு மூச்சு குழாய் பிரச்சனைகள் வரவும் வாய்ப்புள்ளது...

According to a variety of local news reports from cities including Shanghai and Gwangju, South Korea, the disinfectant most commonly used outdoors is a diluted solution of sodium hypochlorite, or household bleach. But it's unclear whether bleach destroys coronaviruses outside, and if it does kill them on surfaces it's unclear whether it would kill viruses in the air. Bleach itself breaks down under ultraviolet (UV) light. Then again, Leon says, UV light seems to destroy coronaviruses as well. And coronavirus exposure from outdoor surfaces may be limited already: "Nobody goes around licking sidewalks or trees," Leon says.

There may even be downsides to widespread overzealous disinfection with bleach, notes Julia Silva Sobolik, a graduate student in Leon's lab. "Bleach is highly irritating to mucous membranes," Sobolik says. That means people exposed to sprayed disinfectants—especially the workers who spray them—are at risk of respiratory troubles, among other ailments.

https://www.sciencemag.org/news/2020/03/does-disinfecting-surfaces-really-prevent-spread-coronavirus#

மேலும், இந்தியாவில் - இந்த ரசாயனத்தை தெருக்களில் பயன்படுத்தி வந்த புனே நகராட்சி - தற்போது அதற்கு தடைவிதித்துள்ளது.

இது குறித்து ஏப்ரல் 2, 2020 அன்று செய்தி வெளியிட்டுள்ள TIMES OF INDIA நாளிதழ் இணையதளம் , பொது நல மருத்துவர்களை மேற்கோள்காட்டி, இந்த ரசாயனம் அவசியமற்றது, ஆபத்தானது என அவர்களின் கருத்துக்களாக தெரிவித்துள்ளது.

A joint statement by Dr Anant Phadke, Jan Swasthya Abhiyaan and Dr Subhash Salunke, public health experts, said, "Fumigation is advised in certain circumstances inside rooms, aeroplanes and buses, among others. which were occupied by confirmed cases of Covid-19. But fumigation around houses is not only useless in the efforts to control Covid-19 epidemic but the sodium hypochlorite used for this fumigation can cause harm to the citizens. This solution is toxic, corrosive and can damage eyes, respiratory tract, including lungs. Hence, we request you to instruct the concerned authorities to strictly abstain from any fumigation, spray around houses in any locality."

 https://timesofindia.indiatimes.com/city/pune/civic-body-stops-open-spraying-of-sodium-hypochlorite-solution/articleshow/74939600.cms 

இந்த தகவலின் அடிப்படையில் - இந்த கிருமி நாசினியை நகரில் பயன்படுத்தவேண்டாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் திரு சந்தீப் நந்தூரி IAS அவர்களிடம் மெகா அமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.

இவண்,

நிர்வாகிகள், மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டுஅமைப்பு (MEGA).

அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]

-----------------------------------

நடப்பது என்ன? - செயலியினை (MOBILE APP) இதுவரை நீங்கள் பதிவிறக்கம் செய்யவில்லையா?

கீழுள்ள இணைப்புகள் மூலம் - பதிவிறக்கம் செய்யவும்.

ANDROID APP:

https://play.google.com/store/apps/details?id=org.kayal.nadappathuenna

IOS APP:

விரைவில்

[பதிவு: ஏப்ரல் 12, 2020; 5:30 pm]

[#NEPR/2020041204]

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com