بسم الله الرحمن الرحيم
Friday 05th June 2020 | 13 ஷவ்வால் 1441AH
பதாகை
news menu left
news menu right
  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
அவசர கால குருதிக்கொடை! (BLOOD DONATION) திருச்செந்தூர் அரசு ரத்த வங்கி தேவைக்காக - காயல்பட்டினம் தன்னார்வலர்கள் முன் வர வேண்டுகோள்!அச்சிடுகமின்-அஞ்சல்
17 ஏப்ரல் 2020 மாலை 05:53

திருச்செந்தூர் அரசு ரத்த வங்கி தேவைக்காக - காயல்பட்டினம் தன்னார்வலர்கள் முன் வர வேண்டுகோள்!

தற்காலிக குழுமத்தில் இணையவும்!

அன்புடையீர்,

இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!

கொரோனா வைரஸ் காரணமாக நாடெங்கும் ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளது அனைவரும் அறிந்தது. 21 நாட்கள் என அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காலம், தற்போது 40 நாட்கள் என அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த காலகட்டத்தில் - காயல்பட்டினம் சார்ந்த மக்கள் பலரின் குருதி தேவையை - திருச்செந்தூர் அரசு மருத்துவமனை ரத்த வங்கி பூர்த்தி செய்து வருகிறது.

ஊரடங்கு விதிமுறைகள் காரணமாக, பொது மக்கள் பலரும் கலந்துக்கொள்ளும் முகாம்கள் நடத்த முடியாத சூழல் நிலவுவதால், ரத்த வங்கியில் - குருதி தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளது.

இதனை கருத்தில் கொண்டு - முகாம்களுக்கு பதிலாக, சிறிய எண்ணிக்கையிலான தன்னார்வலர்களை, நேரடியாக திருச்செந்தூர் அரசு மருத்துவமனை ரத்த வங்கிக்கு அழைத்து சென்று குருதிக்கொடை செய்திட - மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) - சம்பந்தப்பட்ட மருத்துவ அதிகாரிகளிடம் இது குறித்து விவாதித்து - திட்டமிட்டுள்ளது.

எனவே - இந்த அவசர காலத்தை கருத்தில்கொண்டு, காயல்பட்டினத்தில் உள்ள குருதிக்கொடை வழங்க தகுதியான தன்னார்வலர்கள், திருச்செந்தூர் அரசு மருத்துவமனை ரத்த வங்கியில் குருதிக்கொடை செய்திட முன்வரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். அவ்வாறு விருப்பம் உள்ளவர்கள், கீழுள்ள இணைப்பை பயன்படுத்தி - சிறப்பு WHATSAPP குழுமத்தில் இணைந்திட கேட்டுக்கொள்கிறோம்.

அவ்வாறு இணைபவர்களை, உரிய அனுமதிகள் பெற்று - திருச்செந்தூர் அரசு மருத்துவமனை ரத்த வங்கியில் - குருதிக்கொடை செய்திட, இறைவன் நாடினால், மெகா அமைப்பு ஏற்பாடு செய்யும்.

 

திருச்செந்தூர் அரசு மருத்துவமனை ரத்த வங்கி சென்று - குருதிக்கொடை செய்ய விருப்பம் உள்ளவர்களுக்கான தற்காலிக WHATSAPP குழுமம்

 

 https://chat.whatsapp.com/H2FDNYLhJC1DiBQ6lnmaua 

இவண்,

நிர்வாகிகள், மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டுஅமைப்பு (MEGA).

[அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]

நடப்பது என்ன? - செயலியினை (MOBILE APP) இதுவரை நீங்கள் பதிவிறக்கம் செய்யவில்லையா? கீழுள்ள இணைப்புகள் மூலம் - பதிவிறக்கம் செய்யவும்.

ANDROID APP:

https://play.google.com/store/apps/details?id=org.kayal.nadappathuenna

IOS APP:

[பதிவு: ஏப்ரல் 17, 2020; 10:30 am]

[#NEPR/2020041701]

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com